modi slams UPA govt | அரசாங்கங்கள் வர்த்தகம் செய்யக்கூடாது:எதிர்கால இந்தியா எப்படி இருக்க வேண்டும்:மோடி கருத்து| Dinamalar

அரசாங்கங்கள் வர்த்தகம் செய்யக்கூடாது:எதிர்கால இந்தியா எப்படி இருக்க வேண்டும்:மோடி கருத்து

Updated : மார் 18, 2013 | Added : மார் 17, 2013 | கருத்துகள் (33)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
அரசாங்கங்கள் வர்த்தகம் செய்யக்கூடாது:எதிர்கால இந்தியா எப்படி இருக்க வேண்டும்:மோடி கருத்து

புதுடில்லி: அரசாங்கங்கள் வியாபாரத்தில் ஈடுபடக்கூடாது. மக்கள் வளர்ச்சிப்பணிகளில் கவனம் செலுத்த வேண்டும் என குஜராத் முதல்வர் நரேந்திரமோடி பேசினார். டில்லியில் நடந்தகருத்தரங்கு ஒன்றில் அவர்கூறியதாவது : ஒவ்வொரு இந்தியனுக்கும் பாதுகாப்பு தேவை.சிறுபான்மை, பெரும்பான்மை என பிரித்துப்பார்ப்பது ஓட்டு அரசியல். அரசு ஊழியர்கள், ஏழைகள்நலனைக் கருத்தில்கொண்டு செயலாற்றவேண்டும்;

""நான் முதல்வர்ஆவேன் என்று, கனவில்கூட நினைத்ததில்லை.குஜராத் அரசு செயல்படும்விதம் நன்றாக இருக்கிறதுஎன்று கருதினால், அதைநாடு முழுவதும் நடைமுறைப்படுத்தலாம்,'' என,குஜராத் முதல்வர், நரேந்திரமோடி தெரிவித்தார். துதி பாடக்கூடாதுஅரசியல்வாதிகளுக்கும், அரசுகளுக்கும்துதி பாடிக் கொண்டிருக்கக்கூடாது.நமக்கு வெறும்சட்டங்கள் மட்டும்போதாது; அவற்றைமுறையாக செயல்படுத்தவும் வேண்டும். செயல்இல்லாத போதுதான்சட்டங்கள் தேவைப்படுகின்றன.
குறுகிய வட்டத்திற்குள் இருந்து சிந்திக்கும்போக்கு மாற வேண்டும்.மக்கள் குறை தீர்ப்பதுஎன்பது, ஜனநாயகநாட்டில் மிகவும் தேவைப்படும் ஒரு அம்சம். இதன்மூலம் ஏழை மக்கள்,தங்களுக்கும் அதிகாரம்இருப்பதை உணர்வர்.தனி நபர்கள் இன்றுஇருப்பர்; நாளை போய்விடுவர். ஆனால், அரசுஎன்றும் இருக்கும். அதேசமயம் அரசு எல்லாவற்றிலும் தலையிட வேண்டியதில்லை. வளர்ச்சித் திட்டங்களை தனியார் ஒத்துழைப்புடன், முனைந்துசெயலாற்றினால் வளர்ச்சிசிறப்பாக ஏற்படும்.
நம்மை ஆள அரசியல்வாதிகளுக்கு, 5 ஆண்டுக்குஒப்பந்தம் போடப்படுவதாகமக்கள் நினைக்கிறார்கள்; உண்மையில் ஜனநாயகம் என்பது அரசியல்வாதிகளுக்கும் மக்களுக்கும்இடையேயான பந்தமாகஇருக்க வேண்டும்.
மனப்பக்குவம்நமக்கு ஏற்படும் சிக்கல்களை, நமக்கு கிடைத்தவாய்ப்புகளாக கருதி,சோதனைகளை சாதனைகளாக மாற்றும் மனப்பக்குவம் தேவை.ஆயுத அதிகாரம்,பொருளாதார அதிகாரம்என்பதெல்லாம் பழையகதை; அறிவு தான் முக்கியம். வைப் பொறுத்தவரைநாம் தான் முன்னோடியாகஇருக்கிறோம்.
நான் முதல்வர் ஆவேன்என, கனவில் கூட நினைத்ததில்லை. குஜராத் அரசுசெயல்படும் விதம் நன்றாகஇருக்கிறது என்றுகருதினால், அதை நாடுமுழுவதும் நடைமுறைப்படுத்தலாம்.ஆனால், குஜராத்மாடல் அரசு மத்தியிலும்ஏற்பட, நான் டில்லிக்குவருவது அவசியம் என்றுபலர் கருதுகின்றனர்.நாட்டிலுள்ள அரசாங்கங்கள் வர்த்தகம் செய்யவதையே தொழிலாக கொண்டிருக்கக்கூடாது. நாட்டின் வளர்ச்சிக்கே அரசுகள் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். பிரதமர் மன்மோகன்சிங் செயல்படாதவராகஇருக்கிறார்; எல்லாவிஷயங்களிலும் மவுனம்காக்கிறார்.இவ்வாறு குஜராத் முதல்வர் நரேந்திரமோடி கூறினார்.
* தலைமைப் பண்புக்கு என்று தனியாக மந்திரமோ தந்திரமோ கிடையாது. இது போன்ற பிதற்றல்களில் இருந்து நான் எப்போதுமே விலகியே இருப்பேன்.
* குஜராத் மாநிலம் தனது திறமைகளுக்காக பெருமைப்படுகிறது. குஜராத் பெருமைப்படும் போது இந்தியா ஏன் பெருமைப்படக்கூடாது?
* மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டம் என்ற பெயரை, வளர்ச்சி உத்தரவாத திட்டம் என பெயர் மாற்றம் செய்ய மத்திய அரசு தயாரா? இதன் மூலம் நாட்டிற்கு பெருமை சேர்க்கலாம். இதுவே தலைமைப் பண்பு.
* நாடு ஏழ்மையின் அடிமைத்தலையிலிருந்து விடுபடவேண்டும்.

* குஜராத்தில் இரண்டு கால்வாய் திட்டங்கள் செயல்பட்டு வருகின்றன. ஒன்று முன்னாள் பிரதமர் நேரு காலத்தில் துவக்கப்பட்டது. அது இன்னும் கட்டுமானப்பணியிலேயே உள்ளது. மற்றொன்று, விவசாயிகளின் துணையோடு நாங்கள் உருவாக்கியுள்ள சுஜலாம் சுபலாம் திட்டம். இத்திட்டம் கடந்த இரண்டு ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.
* அரசாங்கத்திற்கு தேவை சீரமைப்பு. அது சாதாரண மனிதனின் மனநிலையை பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும்.
* ஓட்டுகளை விற்றும் வாங்கியும் ஒப்பந்தமிடும் ஊழல் நிறைந்த ஜனநாயகமாக நமது ஜனநாயகம் உள்ளது.
* நான் குஜராத் விவசாயிகளிடம் கூறியதெல்லாம், உங்களுக்குத் தேவை தண்ணீர். மின்சாரம் அல்ல. நான் உங்களுக்கு தண்ணீர் அளிப்பேன். அதனால் மின்சாரத்திற்காக போராட வேண்டாம் என விவசாயிகளை நோக்கி கூறும் மன வலிமை எனக்கு இருந்தது.
* ஒரு சிலர் போன்று வரவேண்டும் என்ற கனவு எல்லாம் எனக்கு இல்லை. நான் ஒரு மாநிலத்தின் முதல்வராக ஆவேன் என்று கூட நினைத்துப்பார்த்ததில்லை. இதற்காக எந்த ஜோதிடரையும் சந்தித்து நான் முதல்வராக ஆவேனா என கேட்டதும் இல்லை. பெரும்பாலான மக்கள் ஒரு சிலர் போல் வரவேண்டும் என கனவு கண்டு அது முடியாமலேயே இறந்து விடுகின்றனர். அவர்களை பின்பற்ற எனக்கு விருப்பமில்லை.
* ஒரு கட்சி ஜனநாயக முறைப்படி செயல்பட்டு, அதன் முடிவுகள் ஜனநாயக ரீதியில் எடுக்கப்பட்டால் அதைப் பார்த்து மக்கள் சந்தோஷப்படுவார்கள். அதை விடுத்து ஒரு குடும்பத்தினர் எடுக்கும் முடிவுகளைக் கொண்டு ஒரு கட்சி செயல்படக்கூடாது.
* கடந்த 40 ஆண்டுகளில், குஜராத்தில் 40 ஆயிரம் ஹெக்டேர் நிலங்கள் பாசன வசதி பெற்றுள்ளன. ஆனால் கடந்த 2001ம் ஆண்டு முதலான எனது ஆட்சிக்காலத்தில் மட்டும் சுமார் 8 லட்சம் ஹெக்டேர் நிலங்கள் பாசன வசதி பெற்றுள்ளன.
* எனது அதிகாரிகளிடம் நான் கூறுவது எல்லாம், அரசியல்வாதிகளுக்கு பணியாற்றுவது உங்கள் வேலை அல்ல. சாதாரண மக்களுக்காக உழையுங்கள் என்பதே.
* இந்த நாட்டிற்கு சட்டங்களை விட செயல்களே அதிகமாக தேவைப்படுகிறது.
* உங்களது மனக்குறைகளை மாற்றியமைக்கின்ற நடைமுறை மோசமாக இருந்தால், உங்களது ஜனநாயகம் மோசமாக இருக்கிறது என்று அர்த்தம்.
* நாங்கள் எங்களது மக்களுக்கு உரிமைகளைக் கொடுத்துள்ளோம். இன்றைய நிலையில், மிகவும் ஏழ்மையான நிலையில் இருக்கும் மனிதன் கூட அரசு அதிகாரிகளை மிரட்ட முடிகிறது. இதற்கு காரணம் அவர்களுக்குள்ள அதிகாரம் தான்.
* நாட்டின் திட்டங்கள் செயல்வடிவம் பெற வேண்டும்.
* தலைவர்களை மையப்படுத்திய, தனி நபர்களை மையப்படுத்திய செயல்கள், சிறிது காலத்திற்கு மட்டுமே செயல்படும்.
* குஜராத் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடந்த போது அங்கு 3 மாத காலம் நன்னடத்தை விதிகள் அமலில் இருந்தன. வேறு எந்த மாநிலத்திலும் இது போன்று நடக்கவில்லை.
* மக்கள் தொகை மற்றும் ஜனநாயகம். இந்த இரண்டு காரணிகளே, இந்த நூற்றாண்டு இந்தியாவுக்கான நூற்றாண்டாக உறுதி செய்பவையாக உள்ளன.
* கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பாக, பிரதமரை சந்தித்த போது அவரிடம் ஜவஹர்லால் நேரு நகர்ப்புற சீரமைப்பு திட்டத்தில் சில மாற்றங்களை கொண்டு வருவது குறித்து விவாதித்தேன். அவரும் மிகவும் ஆர்வமாக இதுகுறித்து அறிக்கை ஒன்றை அளிக்கும்படி கேட்டுக்கொண்டார். ஆனால் அதற்குப்பின் அவரிடமிருந்து எந்த பதிலும் இல்லை.

* ரயில்வே பட்ஜெட் போடுவதற்கு முன்பாக, அதுகுறித்து விவாதிப்பதற்காக எந்த வாய்ப்பும் வழங்கப்படுவதில்லை. அரசியல்வாதிகள் துறைமுகங்களுக்கு ரயில் பாதைகளை போடுவதை விட, தங்களது சொந்த தொகுதிகளுக்கு ரயில்பாதைகளைப் போடுவதிலேயே குறியாக இருக்கின்றனர்.
* ஒரு விமான நிலையம் உருவாக்கப்பட்டால், அதில் தனியார் விமான நிறுவனங்கள் இயங்க அனுமதிப்பதில்லையா? அது போலவே ரயில்வே திட்டங்களைப் பொறுத்த வரையில், ரயில் தண்டவாளங்கள் அரசு வசம் வைத்துக்கொண்டு அது தனியார் ரயில்களை இயக்க அனுமதிக்கலாமே?

* எனது திட்டங்கள் செயல்படுத்தப்படும் பட்சத்தில், நூறு கோடி இந்தியர்களின் வருமானம் உயரும். இதை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? இந்த ஆலோசனைகளுக்காக எனக்கு கட்டணம் கூட நீங்கள் கொடுக்க வேண்டாம்.
* இந்தியாவிலேயே தனியார் ரயில்வே செயல்படும் ஒரே மாநிலம் குஜராத் தான்.
* சுற்றுச்சூழலுக்கு ஆதரவான வளர்ச்சியே எனது குறிக்கோள். சூரிய ஒளி அபரிமிதமாக உள்ள இந்தியா, எண்ணெய் உற்பத்தி நாடுகளின் சர்வாதிகாரப் போக்கிலிருந்து உலக நாடுகளை விடுபடுவதற்காக இயக்கத்தை முன்னெடுத்துச் செல்லவேண்டும்.
* எனது வாழ்க்கை தத்துவம்: நமது வாழ்வில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதைப் பற்றி சிந்திக்காமல், தற்போது நடப்பதைப் பற்றி மட்டுமே சிந்திக்க வேண்டும் என்பதே.
* சில முதல்வர்கள் என்னிடம் தனிப்பட்ட முறையில் பகிர்ந்து கொள்ளும் விஷயம், தங்களது அதிகாரிகளின் இடமாற்றம் குறித்த கவலையே. அதற்கு நான் அளிக்கும் பதில், திறமையை மட்டும் அடிப்படையாக கொண்டு முடிவெடுங்கள் என்பதே.
* தேர்தல் நிதி வசூலிப்பது பிரச்னையல்ல. அதை தொழிலதிபர்களிடமும், ஒப்பந்ததாரர்களிடமும் வைத்துக்கொண்டால் பிரச்னை தான். அதற்கு பதிலாக, நிதி வசூலைப் பெருக்க வீதியில் இறங்குங்கள். உங்களுக்கு நிதியுடன் சில ஓட்டுக்களும் கிடைக்கும்.
* குஜராத் மாநிலத்தில் வறுமை என்பது, அண்டை மாநிலங்களில் இருந்து தொழிலாளர்கள் இங்கு வருவதால் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஊட்டச்சத்து குறைபாட்டிலிருந்து மீளும் முயற்சி இந்திய அளவில் 8 சதவீதமாக இருக்கும் அதே வேளையில் குஜராத் மாநிலத்தில் இதன் அளவு 33 சதவீதம்.
* நாட்டிலேயே குஜராத் அதிகளவிலான தொழில் வளர்ச்சியை கொண்டுள்ளது. ஆனால் டில்லி, மகாராஷ்டிரா மற்றம் சில சிறிய மாநிலங்களுக்குப்பின் குஜராத் இருப்பது போன்ற அறிக்கைகள் எப்படி வெளியாகின்றன என்பது எனக்கு ஆச்சர்யமளிக்கிறது.
* உலகில் ராணுவ அதிகாரம், பொருளாதார அதிகாரங்கள் எல்லாம் முடிந்து விட்டன. தற்போதைய நூற்றாண்டு அறிவு மற்றும் தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்டுள்ளது. வரலாற்று காலத்தில் இருந்தே இந்தியா அறிவில் முன்னோடி நாடாக இருந்து வருகிறது.

* பாகிஸ்தான் உள்ளிட்ட அனைத்து அண்டை நாடுகளுடனும் நாம் நல்ல உறவை மேம்படுத்த வேண்டும். அதே வேளையில் நாட்டின் நலன் என்பது ஒப்புயர்வற்றதாக இருக்க வேண்டும். எனது கனவெல்லாம் இந்தியா உலக நாடுகளுக்கெல்லாம் ஆயுத சப்ளை செய்யும் அளவிற்கு வல்லமை பெற வேண்டும் என்பதே.
* கடந்த சில ஆண்டுகளாக ஆட்சியில் இருந்து வரும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் முதல் மற்றும் இரண்டாவது அரசுகள், நாட்டின் கூட்டாட்சித் தத்துவத்தையே சிதைத்து விட்டன.
* நாட்டிலுள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் பாதுகாப்பு தேவை. அதுவே மதச்சார்பின்மை.
* நாட்டிலுள்ள அரசாங்கங்கள் வர்த்தகம் செய்யவதையே தொழிலாக கொண்டிருக்கக்கூடாது. நாட்டின் வளர்ச்சிக்கே அரசுகள் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். ஓட்டல்கள் கட்டுவதை விட மருத்துவமனைகளை கட்டுவதே அவசியம். இவ்வாறு மோடி பேசினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kb Onlinee - chn,இந்தியா
07-ஜூன்-201318:08:45 IST Report Abuse
Kb Onlinee போட்டு தாக்கு தலைவரே
Rate this:
Share this comment
Cancel
விருமாண்டி - மதுரை,இந்தியா
03-மே-201314:04:30 IST Report Abuse
விருமாண்டி மோடி பிரதமராக வாழ்த்துக்கள் .குஜராத்தை போல் நம் நாட்டை முன்னேற செய்வீர் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது
Rate this:
Share this comment
Cancel
rk nataraj - madurai,இந்தியா
27-ஏப்-201316:57:21 IST Report Abuse
rk nataraj மோடி அவர்கள் சொல்லுவது முற்றிலும் உண்மைதானே. குஜராத்தில் என்ன மதுகடைகளா இருக்கு? தமிழ் நாட்டில் மது கடைகள் இல்லாவிட்டால், தமிழ்நாடே அழிந்தா போகும். குடிச்சு,குடிச்சு குடும்பங்கள் எல்லாம் சின்னா, பின்னமாக போய்கிட்டு இருக்கு. நாளைய சரித்திரம் உங்களை பற்றி என்ன சொல்லும்.
Rate this:
Share this comment
Cancel
p.boopathy enkira Boopathiyar - chennai,இந்தியா
26-ஏப்-201317:29:26 IST Report Abuse
p.boopathy enkira Boopathiyar அரசாங்கம் வர்த்தகம் பண்ணலாம். அரசியல்வாதி தான் அரசாங்கத்தை தவறாக பயன்படுத்தி வர்த்தகம் செய்ய கூடாது..,இதனால் அரசு நிர்வாகத்தில் ஊழல் தொழில் வரும்.., வளரும்..,பொருளாதாரத்தை வாட்டத்தை ஏற்படுத்தும்..,இவர் கைபிடித்த தம் வாழ்க்கை துணையை வாழ்நாள் முழுதும் ஒரு பெண்மையை தவிக்க விட்ட இவருக்கு பிரதமர் பதவி ஒரு பகர் கனவு ஆகும்
Rate this:
Share this comment
Cancel
Dinakar - Coimbatore,இந்தியா
16-ஏப்-201323:37:23 IST Report Abuse
Dinakar அரசாங்கம் வர்த்தகம் செய்யக்கூடாது என்ற மோடியின் சிந்தனை எங்கே மதுவை மக்களிடம் விற்று காசு சம்பாதிக்கும் தமிழக அரசு எங்கே எல்லோரும் வேண்டுவோம் மோடி பிரதமர் ஆகிடவேண்டுமென்று
Rate this:
Share this comment
Cancel
Arun Kumar - Chennai,இந்தியா
12-ஏப்-201318:14:49 IST Report Abuse
Arun Kumar Mr Modi your speech is amazing to read and your vision is also good, people always ready to tie up with great leader example Mr Anna and Mr Kamaraj, Mr MGR, Mr Vajbai on this list now we are ready to tie up with you too because we care about nation.
Rate this:
Share this comment
Cancel
Yoga Kannan - Al Buraidh,சவுதி அரேபியா
11-ஏப்-201302:12:21 IST Report Abuse
Yoga Kannan கோவில் பட்டிக்காரரே.... நாவடக்கம் தேவை,,,, இந்தியாவில் என்ன வேலை கொடுத்து கிழிப்பீங்க,,, ஒரு முதல்வர் வேலை கொடுத்தால் ,,,,அடுத்து வர்ற முதல்வர் ஆப்பு வப்பாங்க,,,, அந்நிய செலவாணி கையிருப்பு ,,,,, உங்க தத்தா அனுப்புறது இல்லை,,,, நாங்க அனுப்பி வைப்பது ,,,, இந்தியாவை பற்றி உங்களுக்கு என்ன தெரியும் ,,, அதை விட பன்மடங்கு,,,,இங்குள்ள தொழிலாளர்கள் நிமிடத்திற்கு நிமிடம் தெரிந்து வைத்து இருக்கிறார்கள்,,, இங்குள்ள அரபியர்கள் இந்தியாவை நினைத்து பெருமை பட்டு கொண்டு இருக்கிறார்கள்,,, இந்தியா முன்னேறிக்கொண்டு இருக்கிறது,,,, 2020-க்கு பிறகு இன்னும் உயர்ந்த இடத்திற்கு முன்னேறும் ,,,என்கின்றனர்,,, உலக நாடுகள் எல்லாம் பொருளாதாரத்தில் சிக்குன்ன்டு தன் முகவரிகளை இழந்துக்கொண்டு இருக்கின்றன,,, ஆனால் இந்தியா மட்டும் வளர்ச்சிப்பாதையில் ,,,,, இவை அங்குள்ள அரசியல் வாதிகளுக்கு வேண்டுமென்றால் ,,,,,வேண்டுமென்றே தெரியாது போல அறிக்கைகள் விடலாம்,,, தூங்கியவர்களை எழுப்பி விடலாம் ,,,,,, தூங்குவது போல நடிப்பவர்களை எப்படி எழுப்புவது,,,, தற்போதைய அரசு தனியாருக்கு பங்குகளை முதலீடு செய்ய அனுமதி கோரியபோது,,,,,, பிரதான எதிக்கட்சி,,,, பாராளுமன்றத்தை செயல்படவிடாமல் முடக்கியதை யாரும் மறந்திருக்க மாட்டார்கள்.... ஆனால் அரசு ரயில்வே பாதையில் தனியார் ரயிலை விடவேண்டுமாம்,,,, இது இவர்களுக்கு மட்டும் சாத்தியமாகுமா,,,,,? இந்த அரசு குடும்ப அரசாம்.... அதனால் தான் இந்தியா மக்கள் இரண்டு முறை வெற்றி கனியை தந்தனர் ,,,,, இந்தியாவை யார் ஆளவேண்டும் என்று நாம் தீர்மானிப்பது இல்லை ,,,, ஒட்டுமொத்த இந்தியனும் தீர்மானிப்பது,,, இன்றைய பேச்சு மதிப்பிற்குரிய மோடி அவர்களுடைய சொந்தத கருத்தாகவே கருதுகின்றேன்,,,, இப்படியெல்லாம் செயல் பட வேண்டும் என்று இவர் ஆசைப்படுகிறார்,,,, அந்த இயக்கத்தில் 100 கணக்கான தலைகள்(தலைவர்கள்) இந்த கருத்திற்கு உடன்படுவார்களா,,,,,,,? திரு ராஜ்நாத் சிங் அவர்கள் கூறிய கருத்தை மீண்டும் ஒரு முறை பதிவு செய்கின்றேன்.... நாட்டில் உள்ள சிறந்த முதல்வர்களில் திரு மோடி அவர்கள் சிறந்தவர் என்று கூறி இருக்கிறார்,,,, இன்னும் பிஜேபி குஜராத் முதல்வராகத்தான் பார்க்கிறார்கள் என்பது தெளிவு,,,,
Rate this:
Share this comment
Cancel
Nithesh Neelakandan - chennai,இந்தியா
09-ஏப்-201315:49:13 IST Report Abuse
Nithesh Neelakandan நான் விரும்பும் ஆட்சி... ஏன் இந்திய மக்கள் அனைவரும் விரும்பும் அமைய வேண்டிய ஆட்சி... அது மோடி ஆட்சி ஒன்றே. விரைவில் மோடி பிரதமராக வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
சிவஸ்ரீ. விபூதிபூஷண் - கோவை,இந்தியா
07-ஏப்-201319:46:13 IST Report Abuse
சிவஸ்ரீ. விபூதிபூஷண் திரு மோடியின் தீர்க்க தரிசனம் "உலகில் ராணுவ அதிகாரம், பொருளாதார அதிகாரங்கள் எல்லாம் முடிந்து விட்டன. தற்போதைய நூற்றாண்டு அறிவு மற்றும் தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்டுள்ளது. வரலாற்று காலத்தில் இருந்தே இந்தியா அறிவில் முன்னோடி நாடாக இருந்து வருகிறது". எம் அறிவார்ந்த பாரதமே அறிவியல் தொழில் நுட்பத்தின் மூலம் வளர்ச்சியை அடைந்துவிடலாம் என் கிறார் மோடி. தொழில் நுட்பத்தில் சுற்றுச்சூழலும் பாதிக்கப்படாமல் இருக்கவேண்டும் நமது பாரம்பரியத்தில் நல்ல க்கூறுகளும் பாதுகாக்கப்படவேண்டும். சிவஸ்ரீ.
Rate this:
Share this comment
Cancel
Gnanaseelan - Hosur,இந்தியா
06-ஏப்-201319:08:55 IST Report Abuse
Gnanaseelan ippadi oru karuthukkalai en vazhnalil ithu varai naan entha oru thalaivaridamum kettathillai. nalla oru aan maganin karuthu. "vazhga modi valarga india" 60 varudam intha nattai aanda congress karargale oru 5 varudam mr. MODI idam koduthuthan parungalen ungaluku thairiyam irunthal. nandri Dinamalar Gnanaseelan (hosur)
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை