கருணாநிதியுடன் மத்திய அமைச்சர்கள் சந்திப்பு

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

சென்னை: இலங்கை விவகாரம் தொடர்பாக, தி.மு.க., தலைவர் கருணாநிதியை, மத்திய அமைச்சர்கள் சிதம்பரம், அந்தோணி மற்றும் குலாம் நபி ஆசாத் ஆகியோர் சந்தித்து பேசினர்.

ஐ.நா., மனித உரிமை ஆணையத்தில், இலங்கை அரசுக்கு எதிராக, அமெரிக்கா தீர்மானம் கொண்டு வரவுள்ளது. இந்த தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை, அனைத்து அரசியல் கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன.தி.மு.க ., தலைவர் கருணாநிதியை சமாதானப்படுத்துவதற்கு, டில்லியிலிருந்து தூதர் யாரும் வரவில்லை. இதனால், கருணாநிதி கடும் அதிருப்தி அடைந்தார்.

இந்நிலையில், அறிவாலயத்தில் நேற்று நிருபர்களை கருணாநிதி சந்தித்தார். அப்போது அவர், ""எங்கள் கோரிக்கையை மத்திய அரசு ஏற்கவில்லை என்றால், எங்களுக்கும் இந்தக் கூட்டணிக்கும் உள்ள உறவு நீடிக்குமா என்பது சந்தேகம்; நீடிக்காது என்பது உறுதி,'' என, மீண்டும் மிரட்டல் விடுத்தார்.

அவரது பேட்டி: பிரதமருக்கும், சோனியாவுக்கும் தனித்தனியாக கடிதங்கள் எழுதி, அவசரமாக அனுப்பியுள்ளேன். அந்தக் கடிதங்களில், குறிப்பாக, இலங்கை அரசாலும், அரசு நிர்வாகத்தில் உள்ளோராலும், இலங்கைத் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள், போர்க்குற்றங்கள் என்றும், இனப்படுகொலை என்றும் பிரகடனப்படுத்த வேண்டும்.நம்பகத்தன்மை வாய்ந்த, சுதந்திரமான பன்னாட்டு ஆணையம் ஒன்றை அமைத்து, குறிப்பிட்ட காலவரையறைக்குள், இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள், மனித இனத்துக்கு எதிரான குற்றங்கள் குறித்து, விசாரணை நடத்த வேண்டும்.பன்னாட்டு மனித உரிமை மனிதாபிமான சட்ட மீறல்கள் மற்றும் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை குறித்து, விசாரணை நடத்த வேண்டும் என்ற திருத்தங்கள் கொடுக்க வேண்டும் என, கேட்டு இருக்கிறேன்.மத்திய அரசை தீவிரமாக ஆக்க வேண்டுமென்பதற்கு தான், இந்தத் திருத்தங்களை நாங்கள் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி, குறிப்பிட்டு, அவற்றை இணைத்து, அதன் அடிப்படையில் விசாரித்து முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்துகிறோம். அப்படி நடவடிக்கை எடுக்கப்படாத பட்சத்தில், இலங்கையில் வாழ்கிற, தமிழர்களுக்கு நீதி கிடைக்க யாரும் முன்வரவில்லை என்ற கனத்த இதயத்தோடு, நாங்கள் முடிவுக்கு வர வேண்டியவர்களாக இருக்கிறோம்.எங்கள் கோரிக்கையை ஏற்கவில்லை என்றால், எங்களுக்கும் இந்தக் கூட்டணிக்கும் உள்ள உறவு நீடிக்குமா என்பது சந்தேகம்; நீடிக்காது என்பது உறுதி. மீனவர்கள் பிரச்னையை பற்றி பார்லிமென்டில், தி.மு.க., எம்.பி.,க்கள் பேசியுள்ளனர். நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்த பின், மத்திய அரசில் இருந்தோ, காங்கிரசில் இருந்தோ பேச, இங்கு யாரும் வரவில்லை. அதனால், இந்தக் கூட்டணியிலே நீடிப்பதில், அர்த்தம் இருப்பதாகச் தெரியவில்லை. புத்த பிட்சு, ஒரு சிலரால் தஞ்சை கோவிலில், தாக்கப்பட்டிருக்கும் செயலை நாங்கள் ஆதரிக்கவில்லை.இவ்வாறு, கருணாநிதி கூறினார்.

மத்திய அமைச்சர்கள் சந்திப்பு: இந்நிலையில், தி.மு.க., தலைவர் கருணாநிதியை, மத்திய அமைச்சர்கள் சிதம்பரம், அந்தோணி மற்றும் குலாம் நபி ஆசாத் ஆகியோர் சந்தித்து பேசினர்.

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (100)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mani - Dharapuram  ( Posted via: Dinamalar Android App )
18-மார்-201315:36:26 IST Report Abuse
mani ஆணியே புடுங்க வேண்டாம்
Rate this:
Share this comment
Cancel
டவுட் கோபாலு - Chennai,இந்தியா
18-மார்-201313:22:27 IST Report Abuse
டவுட் கோபாலு பெருசு எனக்கு ஒரு டௌட்டு.....அமெரிக்கா தீர்மானம் பற்றி இந்தியாவின் ஆதரவை, விட ஏனைய நாடுகளின் ஆதரவை பெற உங்கள் டெசோ அமைப்பு மூலம் ஒரு கடிதம் அனுப்பினால் என்ன....? உங்களுக்கு ஒரு விஷயம் தோன்றாமல் போயிற்று.....????? பேசாமல் சாட்சிக்காரன் காலில் விழுவதை விட...., சண்டைக்காரன் காலில் விழுவதே மேல்..... அதனால் சோனியா காந்திக்கு கடிதம் எழுதுவதை விட...., ராஜபக்சே-க்கு ஒரு கடிதமும், நீங்கள் வசனம் எழுதிய பெண் சிங்கம், உளியின் ஓசை, பொன்னர் சங்கர், கண்ணம்மா...போன்ற படங்களின் பட தட்டுக்களையும் அனுப்பி அதில் வரும் காட்சிகளை பார்த்து மனம் திருந்தி வாழுமாறு ஒரு கடிதமும் அனுப்பி விடுங்கள்....பாவம் மனுஷன் உங்கள் படங்களை பார்த்து பித்து பிடித்து அலைவான்.....எப்படி....???????..வரலாறு மிக முக்கியம் பெருசு...
Rate this:
Share this comment
Cancel
Kankatharan - newyork,யூ.எஸ்.ஏ
18-மார்-201313:17:50 IST Report Abuse
Kankatharan  2008 / 2009 களில் ஆட்சியை கையில் வைத்துக்கொண்டு ஈழத்தமிழ் மக்கள் செத்த வீடுகளைக்கூட நக்கலடித்தார். இன்றைக்கு தமிழகத்து மக்களால் தனிமைப்படுத்தப்படுவதை உணர்ந்து மாரடிக்கிறார். காவடி எடுப்பேன் என்கிறார், கருணா என்றாலே கடைந்தெடுத்த தந்தரவாதி என்றும் சுயநலவாதியென்றும் அறியப்பட்ட பின்னும் இந்த மனிதன் செய்யும் தந்தரம் உண்மையில் உலகத்தில் எவராலும் முடியாத்துதான்..
Rate this:
Share this comment
Cancel
சாயல் மைந்தன் - தமிழ்நாடு,இந்தியா
18-மார்-201313:04:13 IST Report Abuse
சாயல் மைந்தன் அதுக்கு தான சார் இப்படி ஒரு நாடகத்தை அரங்கேற்றி இருக்கிறார் திரு, மு க. இனி மேல் நீங்க என்ன தான் நாடகம் போட்டாலும் நாங் உங்கள நம்ப போறதில்ல.....
Rate this:
Share this comment
Cancel
MAGUDAPATHY - madurai,இந்தியா
18-மார்-201312:26:28 IST Report Abuse
MAGUDAPATHY தினமலரை பொருத்தவரை கருணா எது செய்தலும் தவறு தான். கருணாநிதியின் காலம் கடந்த முடிவுதான் என்றாலும் தினமலரால் கருணாநிதியை பாராட்டவே மனம் வராது.
Rate this:
Share this comment
Cancel
ksv - chennai,இந்தியா
18-மார்-201312:18:01 IST Report Abuse
ksv திரு மரியா, அதனால்தான் உங்கள் அருவருடி தங்கபால் கோஷ்டியையும் தி மு க வினரையும் மாணவர்கள் நெருங்க விடாமல் கல் எறிந்தனரோ.
Rate this:
Share this comment
Cancel
ksn_kumar.28 - chennai,இந்தியா
18-மார்-201311:40:23 IST Report Abuse
ksn_kumar.28 என்னதான் சொன்னாலும் இந்த மரியா அல்போன்ஸ் மாதிரி ஆட்கள் திருந்தவே மாட்டார்கள், கருணாவின் ஊழல் கொள்கைகள் அவரை இவ்வளவு கவர்ந்திழுக்குமென்று, அவருடைய கருத்துகள் ராஜாவை போன்ற தேச துரோகிகள் நிறைந்த ஒரு கட்சி அவர்கள் செய்யும் ஊழல் அராஜகம் எல்லாம் சரி என்பதே, நீங்கள் எப்படி தேச துரோகத்தை ஆதரிப்பவர? கருத்து சொல்வதற்கும் தகுதி வேண்டும்
Rate this:
Share this comment
Cancel
Arvind Bharadwaj - Coimbatore,இந்தியா
18-மார்-201311:14:45 IST Report Abuse
Arvind Bharadwaj தினமலர் கருத்துப் பகுதியில் வெளிவரும் மரியாவின் பதில்களைப் படித்துவிட்டு மு.க. நினைத்துக் கொள்வார் "குடுக்கற காசுக்கு மேலவே கூவுராண்டா. ரொம்ப நல்லவன்டா இவன்" என்று.
Rate this:
Share this comment
Cancel
G.Krishnan - chennai,இந்தியா
18-மார்-201311:08:48 IST Report Abuse
G.Krishnan ஈழம் சம்மந்தமான கோரிக்கையை ஆதரிக்க விட்டாலும் பரவா இல்லை. . . .தூதுவரை கூட அனுப்ப வில்லை என்று நீங்கள் படும் அவஸ்தை எங்களுக்கு புரிகிறது . . துதுவர் வந்து . .பேசி தீர்க்க வேண்டிய வேலைகள் நிறைய . . . .உள்ளது . . 2-G கேசுல . .அடுத்த வாய்தா. . . எப்பப்பா ?. . . . . . என்னது உரமா அப்பிடின்ன என்ன ?. .. . .ஒன்னும் புரியலப்பா ? . . . . . . . .அப்பறம் மதவாத சக்திகள் வந்துவிட கூடதுன்னு நாங்க இன்னும் எந்த மத்திய அரசை ஆதரிக்கிரோம்ன்னு ஒரு அறிக்கை தயாரா இருக்குன்னு சொல்லுங்க ?. . . மானம்கெட்ட அரசியல்
Rate this:
Share this comment
Cancel
Rangarajan Pg - CHENNAI,இந்தியா
18-மார்-201310:49:19 IST Report Abuse
Rangarajan Pg காங்கிரஸ் தூதர்கள் யாரும் சமாதான படுத்த வரவில்லை. அதனால் தான் தலைவர் இந்த விஷயத்தில் இத்தனை வீரியம் காட்டுகிறாரோ? ஒரு வேலை சமாதானம் செய்ய யாராவது ""தூதர்"" வந்தால் உடனே சமாதானமாகி இலங்கை தீர்மான விஷயத்தை தூக்கி தூர போட்டு விடுவாரோ? சொல்ல முடியாது. ""என்னடா காங்கிரஸ் நம்ம வர வர கண்டுகொள்ள்வதே இல்லை,, ஏதாவது ஒரு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து அவர்கள் கவனத்தை நம் பக்கம் திருப்புவோம்"" என்று நினைத்து இதை போல செய்கிறாரோ இந்த வேலை வெட்டி இல்லாத ஆபீசர். தலைவரே, ரொம்ப தம் கட்டாதீர்கள்..இழுத்து பிடிக்காதீர்கள் பிறகு காங்கிரஸ் மீதம் இருக்கும் ஆட்சி காலத்திற்குள் 2 G மற்றும் மீதி இருக்கும் வழக்குகளில் உங்கள் மகளையும் கலைஞர் தொலைக்காட்சி வழக்கில் உங்கள் மனைவி ( அல்லது துணைவி?? ஒரே CONFUSION ) தயாளு அம்மாளையும் சேர்த்து உள்ளே தள்ளி விட போகிறார்கள். காங்கிரஸ் உங்களை பொறுத்தவரை தற்போது ஒரு DEAD WEIGHT . அதை சுமப்பது என்பது ஒரு வேண்டாத விஷயம். அதனால் தான் நீங்கள் அதை உதறி தள்ள முடிவெடுத்து விட்டீர்களோ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்