ஒருங்கிணையும் மாணவர்கள்: வலுப்பெறும் போராட்டம்
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

சென்னை: இலங்கை தமிழர் பிரச்னையில் அரசியலை துளியும் அண்டவிடாமல் தமிழகத்தில் அனைத்து கல்லூரி மாணவர்கள் ஒருங்கிணைப்பு போராட்டம் தீவிரமடைந்து வருகிறது.
இலங்கையில் நடந்த இனப்படுகொலையை கண்டித்தும் இலங்கை அதிபர் ராஜபக்ஷேயை போர்க்குற்றவாளியாக அறிவிக்க கோரியும், ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக இந்தியா தீர்மானம் கொண்டுவர வழியுறுத்தியும், சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் இம்மாதம் 11-ம் தேதி உண்ணாவிரதம் இருந்தனர்.இந்த போராட்டத்திற்கு ஆதராவாக தமிழகம் முழுவதும்கல்லூரி மாணவர்களிடம் தூண்டுதலாக அமைந்தது. தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் அரசு சட்டக்கல்லூரி, கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரதப்போராட்டங்களை நடத்தி வருகின்றனர். கடந்த ஒரு வாரகாலமாக பல்வேறு சட்டக்கல்லூரிமாணவர்கள் உண்ணாவிரதப்போராட்டத்தினை துவக்கியுள்ளனர்.நேற்று சென்னையில் கல்லூரி மாணவர்கள் முற்றுகையிட்டு போராட்டமும், பேரணியும் நடத்தி வருகின்றனர். சென்ன மெரீனா கடற்கரையிலும் மாணவர்கள் உண்ணாவிரதப்போராட்டத்தினை நடத்தினர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.
அரசியல் சார்பற்ற போராட்டம்:இந்த போராட்டத்தில் அரசியலை துளியும் கலக்கவிடாமல் தன்னெழுச்சியாக இந்த நடத்தி வந்த போராட்டத்தினை .கோவை, திருச்சி, நெல்லை, வேலூர் , கடலூர், சேலம் ஆகிய மாவட்டங்களில் சட்டக்கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டுவருகின்றனர்.. இலங்கை அரசு மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும். ராஜபக்ஷேயை போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்பதுதான் இவர்களின் கோஷமாக இருந்தது.இந்த உண்ணாவிதப் போராட்டத்தில் சில மாணவர்களின் உடல்நிலை பாதிக்கப்பட்டது.அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீவிரமடைந்துவரும் போராட்டத்தால் பல கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சில கல்லூரிகளில் பட்டமளிப்பு விழாவும் ரத்து செய்யப்பட்டுள்ளது.இது குறித்து மாணவர் ஒருவர் கூறியதாவது: சென்னையில் 25 கல்லூரிகளை ஒருங்கிணைந்து மாபெரும் பேராட்டத்தை நடக்க திட்டமிட்டுள்ளோம். இலங்கையில் இனப்படுகெலை நடத்தியதில் இந்திய அரசுக்கும் பங்குண்டு.இதனை கண்டித்து எங்களின் போராட்டம் தொடரும் என்றார். சென்னையில் ஐ.ஐ.டி. மாணவர்களும் ‌பங்கேற்றனர். அவர்கள் இலங்கை அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.மும்பை, பெங்களுரூ, ஐதரபாத் நகரங்களிலும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாற்‌றத்தை தரும்:மாணவர்கள் போராட்டம் குறித்து நாது கடந்த தமிழ் ஈழத்தைச் சேர்ந்த முருகையா சுகிந்தன் கூறுகையில், ‌மாணவர்கள் போராட்டம் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும்.இந்தியாவின் கொள்கையிலும் மாற்றம் வரும் என்றார்.

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (20)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Arvind - Hong Kong,சீனா
19-மார்-201304:28:00 IST Report Abuse
Arvind போர் நடந்துகொண்டிருந்தபோது எங்கே போயிருந்தார்களாம் இந்த மாணவர்கள்?? அப்போது கருணாநிதி ஆட்சி நடந்துகொண்டிருந்ததே அப்போது உண்ணாவிரதம் இருந்து போராடியிருக்க வேண்டியதுதானே??? இது கருணாநிதியின் இன்னொரு கபட நாடகம்... மாணவர்களை தூண்டிவிட்டு போராட்டம், கலவரம் நடத்தத் தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்க வேண்டியது.. மேலும் ஜெயலலிதா ஆட்சி நடக்கும் பொது இப்படி மாணவர்கள் போராட்டம் வெடித்தால் அதை அடக்க ஜெயலலிதா நடவடிக்கை எடுக்க வேண்டி இருக்கும்... இந்த நடவடிக்கையை தனக்கு சாதகமாக்கிக் கொள்வார் இந்த கபட கருணாநிதி....
Rate this:
Share this comment
Cancel
Rss - Mumbai,இந்தியா
19-மார்-201302:12:14 IST Report Abuse
Rss இலங்கை தமிழர் பிரச்சனை என்னவென்று தெரியாமலே பலர் இங்கு உக்காந்திருக்காங்க ... காலேஜ் கட் அடிச்சா போதும்னு வந்த கூட்டம் ..மொதல்ல நம்ம தமிழ் நாட்டு மக்களுக்காக போராடுங்க ... தினமும் ஒரு வேல சோறு கிடைக்காம எத்தனையோ பேர் இருக்காங்க அதுக்கு போராட்டம் நடத்த யாரும் முன் வரல ..
Rate this:
Share this comment
Cancel
vijayakumar - madurai,இந்தியா
19-மார்-201300:26:56 IST Report Abuse
vijayakumar மாணவர்கள் பற்றி பேச ஒருவனுக்கும் யோக்கியதை இல்லை , எப்ப பாத்தாலும் மாணவர்களை கேலி கிண்டல் செய்ய உங்களுக்கு வெக்கமாக இல்லை , எங்கே மாணவர்கள் அரசியலக்கு வந்து விடுவார்களோ என்ற பயம் இபோ உங்களிடம் நன்றாக தெரிகிறது , மாணவர்கள் உண்ணாவிரதம் உங்களுக்கு தேவை இல்லாதத , உங்க தலைவர் இருந்தாரே உலகம் பார்க்காத உண்ணாவிரதம் 2 AC , 2 பொண்ணாட்டி , 1/2 டே breakfast டு லஞ்ச் , என்ன ஒரு நடிப்பு
Rate this:
Share this comment
Cancel
Praveen Stanley - New Delhi,இந்தியா
19-மார்-201300:05:24 IST Report Abuse
Praveen Stanley தினமலரே உண் கால்களில் பணிந்து வேண்டுகிறோம் மாணவர் போராட்டத்தை ஈரடடிப்பு செய்ய வேண்டாம் போதையிலும் சினிமா போகத்திலும் இருந்து உணர்வுள்ள தமிழர்களை மீட்டெடுக்க உதவுங்கள்
Rate this:
Share this comment
Cancel
yuvaraja - madurai,இந்தியா
18-மார்-201310:26:31 IST Report Abuse
yuvaraja எதிர்கால இந்தியா நம்முடைய போராட்டத்தில்தான் உள்ளது .
Rate this:
Share this comment
Cancel
senthamizh - manama,பஹ்ரைன்
18-மார்-201310:22:57 IST Report Abuse
senthamizh இப்போதாவது தமிழ் இளைஞர்களிடம் தமிழனின் நிலை பற்றி தெரிகிறதே, அது வரைக்கும் திருப்தி. அதோட விடாம தமிழர்களுக்கு நடக்கும் எல்லா விதமான சுப துக்க நிகழ்சிகளையும் எல்லா விதமான மக்களுக்கும் எடுத்து கொண்டு போய் சேர்க்கணும். இத்தனை மாணவர் சமுதாயம் தள்ளி நின்று வேடிக்கை பார்த்தது போதும்.தமிழன் என்ற பெருமையை காப்பாற்றும் கடமை மறவாதீர்
Rate this:
Share this comment
Cancel
Venkatesan Jayaraman - Dubai,இந்தியா
18-மார்-201310:00:03 IST Report Abuse
Venkatesan Jayaraman போராட்டம் வெற்றிபெற வாழ்த்துகள்
Rate this:
Share this comment
Cancel
நாஞ்சில் சுலைமான் - THUCKALAY,இந்தியா
18-மார்-201309:39:43 IST Report Abuse
நாஞ்சில் சுலைமான் வாக்கெடுப்பு நடத்தினால் ஈழத்தமிழர்களின் இப்போது உள்ள கஞ்சியும் முட்டிவிடும்..
Rate this:
Share this comment
Cancel
AnandaRajan - Singapore,சிங்கப்பூர்
18-மார்-201309:39:30 IST Report Abuse
AnandaRajan வெல்லட்டும் ஒருங்கிணைந்த மாணவர் போராட்டம். கை கொடுப்போம் தமிழக போலி அரிசியல்வாதிகளின் முகத்தை கிழிக்கட்டும். தமிழரின் நிலை இந்தியாவெங்கும் ஒலிக்கட்டும். உலகம் முழுதும் ஆட்டி படைக்கும் தமிழன் தனக்கென உரிமை இல்லாமல் இருக்கிறான். மாணவ செல்வங்களே யாருடைய வலையிலும் சிக்காமல் போராடுங்கள். ஒட்டுமொத்த தமிழினமும் உங்களை வாழ்த்தும்.உங்களுடன் பங்கேற்கும் நாள் வெகுதூரம் இல்லை.
Rate this:
Share this comment
Cancel
செந்தமிழ் கார்த்திக் - NamakkaL to ChennaI,இந்தியா
18-மார்-201309:22:56 IST Report Abuse
செந்தமிழ் கார்த்திக் இன்று 25 கல்லூரிகளை திரட்டியுள்ளோம், கிளம்பிவிட்டோம் இன்று காலை 10.30க்கு ஆளுநர் மாளிகையை முற்றுகையிட... இந்திய அரசாங்கம் எங்களை அடக்க முடியாது , திமிறி எழுவோம்.. \\ எங்கள் கோரிக்கைகள் நியாயமானது.. 1,தனி தமிழ் ஈழத்திற்கு ஆதரவாக பொது வாக்கெடுப்பை சர்வதேச அளவில் நடத்து, 2.சர்வதேச அளவில் சுதந்திரமான பன்னாட்டு விசாரணை தமிழீழத்தில் நடத்து , 3.அதுவரை இலங்கையில் பொருளாதார தடை விதி , 4.அமெரிக்கா தீர்மானத்திற்கு ஆதரவு இல்லை, 5.இந்தியாவே எங்கள் கோரிக்கையை வலியுறுத்தி புதிய தீர்மானம் கொண்டு வர வேண்டும்// எந்த அரசியல் கட்சியின் சாயமும் இல்லை .. தானாக ஆதரவு நல்கினால் வரவேற்ப்போம்.. அவ்வளவே.. எத்தனை முறை கைது செய்தாலும் மீண்டும் மீண்டும் எழுவோம்.. எங்கள் நியாயமான கோரிக்கைகள் நிறைவேறும் வரை பல்வேறு முறைகளில் எங்கள் போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என்பதில் எள்ளளவும் மாற்றம் இல்லை என்று உறுதி அளிக்கிறேன்... பொதுமக்கள் தங்கள் ஆதரவினை தர வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்