பெல்கிரேடு,: காட்சிகள் தலைகீழாகத் தெரிவதால், செர்பியாவைச் சேர்ந்த இளம்பெண், புத்தகங்களைத் தலைகீழாக வைத்து வாசிக்கிறார். ஐரோப்பிய நாடான செர்பியாவின், உசைஸ் நகரில் வசிப்பவர், போஜானா டேனிலோவிக், 28. பிறந்ததில் இருந்தே, இவரது பார்வையில், அபூர்வமான குறைபாடு காணப்படுகிறது. இவர் பார்க்கும் காட்சிகள், தலைகீழாகவே தெரிகின்றன.இதனால், புத்தகம் மற்றும் செய்தித்தாள்களை, தலைகீழாக வைத்து, வாசிக்க வேண்டியுள்ளது. வீட்டில், இவர் பார்க்கும், "டிவி'யும், தலைகீழாகவே தொங்கவிடப்பட்டு உள்ளது.இதனால், குடும்பத்தின் மற்ற உறுப்பினர்கள், நேராக வைக்கப்பட்ட, மற்றொரு, "டிவி'யை பார்க்கின்றனர்.இவரது குறைபாடு குறித்து ஆய்வு செய்த, மசாசூசெட்ஸ் மற்றும் ஹார்வர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகையில், "இவரது கண்கள் சரியாக உள்வாங்கினாலும், மூளையின் நரம்பில் உள்ள கோளாறால், காட்சிகள் தலைகீழாகத் தெரிகின்றன' என்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.