SC pulls up Italian envoy | ‘ இப்படி நடப்பார் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை ’- இத்தாலி தூதர் மீது சுப்ரீம் கோர்ட் கடும் அதிருப்தி | Dinamalar
Advertisement
‘ இப்படி நடப்பார் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை ’- இத்தாலி தூதர் மீது சுப்ரீம் கோர்ட் கடும் அதிருப்தி
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

புதுடில்லி: இத்தாலி தூதர் டேனியல் மான்சினி இப்படி நடந்து கொள்வார் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை என்றும், உங்களை இனி நாங்கள் நம்ப முடியாது என்றும் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர். இந்திய கேரள கடலோர பகுதியில் 2 மீனவர்கள் இத்தாலி கடற்படையினரால் சுட்டு கொல்லப்பட்டனர். இது தொடர்பாக 2 வீரர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர் .தொடர்ந்து ஜாமினில் இருந்து வந்தனர். இந்நிலையில் இத்தாலி தேர்தலுக்காக சென்று வர அனுமதி அளிக்க வேண்டும் என கோர்ட்டில் அனுமதி பெற்று தாய்நாட்டுக்கு சென்றனர். ஆனால் அவர்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் இந்தியா வரவில்லை. இந்த விவகாரம் இந்தியாவை கடும் அதிர்ச்சிக்குள்ளாகியது. பிரதமரும் கண்டனம் தெரிவித்திருந்தார்.


இது தொடர்பான விசாரணை இன்று சுப்ரீம் கோர்ட்டில் வந்தது. வழக்கை விசாரித்து வரும் நீதிபதிகள் இத்தாலி தூதர் மீது கடும் கோபத்தை வெளிப்படுத்தினர். நீதிபதிகள் இன்று கோர்ட்டில் கூறியதாவது: இத்தாலி தூதர் இப்படி நடந்து கொள்வார் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை. இவர் நம்பிக்கையை உடைத்து விட்டார். இவரை நாங்கள் இனியும் நம்ப முடியாது. வரும் ஏப்ரல் மாதம் 2 ம் தேதி வரை இந்தியாவை விட்டு வெளியேறக்கூடாது. வரும் மார்ச் 22 ம் தேதிவரை 2 பேரும் இந்தியா திரும்ப கால அவகாசம் தருகிறோம். இதற்குள் திரும்பா விட்டால் கோர்ட் அவமதிப்பாக கருதி நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.


2 வீரர்கள் நிபந்தனையின் பேரில் இத்தாலி செல்ல காப்புறுதி பத்திரத்தில் ( அபிடவிட்) தூதர் மான்சினி கையெழுத்திட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் நிபந்தனை மீறப்படுவதால் இவரை கைது செய்ய சட்டத்தில் வழி முறை இருக்கிறது.

Advertisement
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (22)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankar - trichy,இந்தியா
19-மார்-201301:45:51 IST Report Abuse
sankar இத்தாலி அன்னை சோனியாவின் நாடு , சோனியி நமக்கு எல்லாம் தாய் , அவர்கள் தாய் நாட்டுக்கு தான் சென்று இருக்கிறார்கள் , குவத்ரோச்சியை தேடி கண்டுபிடித்து அவருடன் வருவார்கள், அதற்குள் நீங்கள் ஹெலிகாப்ட்டர் , விமானம் மற்றும் அணு ஆயுத கான்றக்கட் இத்தாலியுடன் போடுங்கள் , வாழ்க அன்னை .
Rate this:
0 members
1 members
4 members
Share this comment
Cancel
nadesan radhakrishnan - trichy,இந்தியா
19-மார்-201300:22:02 IST Report Abuse
nadesan radhakrishnan அட நம்ம ஊரு கோர்ட் உம் ஒரு சில நேரத்துல வேல செய்யிதுயா ???
Rate this:
0 members
0 members
4 members
Share this comment
Cancel
S.RAJA S.V.KARAI - TENKASI  ( Posted via: Dinamalar Android App )
18-மார்-201316:39:14 IST Report Abuse
S.RAJA S.V.KARAI இந்த வழக்கு கேரளா உயர்நிதி்மன்றத்தை விட்டு உச்சநிதி்மன்றம் சென்றதுதான் தவறு. உயர் நிதி்மன்றம் என்றால் கன்டிப்பாக இத்தாலி செல்ல அனுமதி் அளித்தி்ருக்காது.
Rate this:
2 members
0 members
16 members
Share this comment
Cancel
Hari - Chennai,இந்தியா
18-மார்-201316:21:47 IST Report Abuse
Hari மன்னன் செய்த தவறு மக்களையும் சென்றடையும். துதரையும் இத்தாலி பாஸ்போர்ட் உள்ளவரையும் திகாரில்அடைக்கவும்.
Rate this:
2 members
0 members
35 members
Share this comment
Cancel
வாசுதேவன் - சென்னை,இந்தியா
18-மார்-201316:06:17 IST Report Abuse
வாசுதேவன் கோர்ட்டாவது.. மண்ணாவது.. நீதிபதி அவர்களே, நம் கோர்ட்களில் தேங்கி இருக்கும் பல கோடி வழக்குகளை முடிவுக்கு கொண்டு வாருங்கள். பல வழக்குகளில் வாதி மற்றும் பிரதி வாதிகளின் கொள்ளு பேரன்கள் மட்டுமே இப்போது இருக்கிறார்கள். மக்களுக்கு நீதி மன்றங்களின் மேல் இருக்கும் நம்பிக்கை எப்போதோ போய்விட்டது. இப்போது சட்ட கல்லூரிகளில் படிக்கும்(?.) பாதிக்கும் மேல் மாணவர்களின் செயல்களை பார்த்தால் இவர்களா நம் நாட்டின் எதிகால சட்ட மேதைகள் என்று சலிப்பு மேலிடுகிறது. இத்தாலி காரனாவது போய் புள்ள குட்டிகளுடன் சந்தோஷமாக இருக்கட்டும். நீங்க தீர்ப்பு சொல்லும்போது வர சொன்னால் போதும்..
Rate this:
3 members
0 members
30 members
Share this comment
Cancel
Ashok ,India - India,இந்தியா
18-மார்-201315:15:24 IST Report Abuse
Ashok ,India இதெல்லாம் கொஞ்சம் ஓவர். தமிழக சிறையில் வாழும் இந்திய கைதிகள் வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு ஒட்டு போட விடுமுறை அளிக்க கோர்ட் முன் வருமா?? அன்றாடம் இலங்கை கடற்படையால் சித்திரவதை செய்யப்படும் தமிழக மீனவர்களின் நிலையை இந்த கோர்ட் வழக்காக எடுத்து கொண்டு இலங்கை தூதரை இப்படி கண்டிக்க என் முன்வரவில்லை?/
Rate this:
1 members
0 members
39 members
Share this comment
Cancel
Tamilan - Chennai,இந்தியா
18-மார்-201314:40:56 IST Report Abuse
Tamilan அப்ப இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை தாக்கியபோது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை...... தமிழ்நாடும் இந்தியாவில் தானே இருக்கிறது............
Rate this:
2 members
0 members
59 members
Share this comment
Cancel
Mohandhas - singapore,சிங்கப்பூர்
18-மார்-201314:40:50 IST Report Abuse
Mohandhas சோமாலியாவில் கூட மானத்துடன் வாழும் மக்கள் இருக்கிறர்கள்..ஆனால் இந்தியாவில் சுயமரியாதை என்பதும்.. சுயகட்டுபாடு என்பதும் அறவே இல்லை.. நம் உள்நாட்டு கையாலாகாத நடப்புகளை தெரிந்து கொண்ட மற்ற நாட்டுக்காரன் நம்மை மாட்டு சாணியை விட கேவலமாகத்தான் நினைப்பான்...
Rate this:
1 members
0 members
29 members
Share this comment
Cancel
யதார்தவாதி வெகுஜன விரோதி - சிராப்பள்ளி,இந்தியா
18-மார்-201314:34:29 IST Report Abuse
யதார்தவாதி வெகுஜன விரோதி பிட்டி மொஹந்தி என்ற ஒரு அரசு அதிகாரி மகன்.. நமது சட்டத்தின் கண்களில் மண்ணை தூவி விட்டு அரசு வங்கி ஒன்றில் 7 வருடம் தலைமறைவாய் வேலை பார்த்த நாடு இது........இத்தாலி தூதர் நம் நாடு பிரஜையும் அல்ல...மேலும் அவரின் பதவி.... வேண்டாம் இந்த வீண் ஜம்பம்......... நமது தண்டனை சட்டங்களில் உள்ள ஓட்டைகள் அடைக்க பட்டு தீர்ப்புகள் விரைவு பெரும் வரை நாம் அசிங்கபட்டுகொண்டே இருக்கவேண்டும் என்பது நம் விதி....
Rate this:
2 members
0 members
13 members
Share this comment
K.Sugavanam - Sengkang,சிங்கப்பூர்
18-மார்-201315:08:58 IST Report Abuse
K.Sugavanam7 வருடம் வேலை பார்க்கவில்லை. 11/2 வருடம் தான் வேலை பார்த்தான். 7 ஆண்டு தலை மறைவானது உண்மை, அவரது அப்பா ஓடிஸா முன்னாள் DGP ....
Rate this:
0 members
1 members
9 members
Share this comment
Cancel
Sandru - Chennai,இந்தியா
18-மார்-201314:33:10 IST Report Abuse
Sandru இதில் மிகவும் வருந்த வேண்டிய விஷயம் , தவறு நமது மாண்பு மிகுந்த உச்ச நீதி மன்றத்தின் மீதுதான் இருக்கிறது.சிறையில் இருக்கும் பல ஆயிரம் இந்திய கொலை குற்றவாளிகளுக்கு , ஒட்டு போடுவதற்கும், பண்டிகைகளை கொண்டாடுவதற்கும் பரோல் அளிப்பதில்லை. ஆனால், வெளி நாட்டில் இருந்து வந்து இந்தியாவில் கொலை குற்றம் செய்தவர்களுக்கு இரண்டாவது முறை குறுகிய காலத்தில் இத்தாலி செல்ல அனுமதி அளிக்க பட்டு இருக்கிறது. கேரளா உயர் நீதி மன்றத்தின் எல்லைக்கு அப்பாற்பட்டது இந்த வழக்கு என தானே முன்வந்து விசாரணைக்கு ஏற்று கொண்டது உச்ச நீதி மன்றம்தான். ஆனால், அதே நீதி மன்றம் வழக்கத்திற்கு மாறாகவும் , இந்திய எல்லைகளுக்கு அப்பாலும் வெளிநாட்டு கைதிகளுக்கு பரோல் அளித்தது முற்றிலும் ஆச்சரியம் அளிக்கிறது. நமது இந்திய நீதி மன்றங்களின் செயல்பாடு திறனுக்கு இந்த "பரோல் " தீர்ப்பு சிறந்த குறியீடாக திகழ்கிறது. மேலும், நமது இந்திய நீதி மன்றங்களில் மூன்று கோடிகளுக்கும் மேலான வழக்குகள் தேக்கம் அடைந்திருப்பதற்கு இந்த குறியீடு ஒரு சான்றாகும். இந்த தீர்ப்பை முன் உதாரணமாக எடுத்து கொண்டு , பண்டிகை மற்றும் தேர்தல் காலங்களில் இந்திய சிறை சாலைகளுக்கு விடுமுறை அளிக்காமல் தவிர்க்க வேண்டும்.
Rate this:
0 members
0 members
49 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்