கூடலூர்:முதுமலை தெப்பக்காடு வழியாக கர்நாடகாவுக்கு கடத்த முயன்ற 450 ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டு, இரு பெண்கள் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காடு அருகே, பிக்-அப் ஜீப்பில் ரேஷன் அரிசி கடத்துவதாகவும், குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறைக்கு தகவல் கிடைத்தது. புலனாய்வு துறை சப்-இன்ஸ்பெக்டர் திலீப் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் தெப்பகாடு பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது, கூடலூரிலிருந்து கர்நாடகா நோக்கி சென்ற பிக்-அப் ஜீப்பை (டிஎன்-20,பிடி-1407) நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில் ஜீப்பில் 14 மூட்டைகளில் 450 கிலோ ரேஷன் அரிசியை கர்நாடகாவுக்கு கடத்தி செல்வது தெரிய வந்தது.
அரிசியுடன் ஜீப்பை பறிமுதல் செய்து, கூடலூரை சேர்ந்த ஜீப் டிரைவர் உபைத்,23, கர்நாடக மாநிலம் குண்டல் பேட் பகுதியை சேர்ந்த தாயம்மா,35, ராஜம்மா,45, ஆகியோரை கைது செய்தனர்.அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், "குண்டல்பேட் பகுதியை சேர்ந்த பெண்கள், மசினகுடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் வீடுகளுக்கு சென்று, ஒரு கிலோ ரேஷன் அரிசியை 5 ரூபாய் வீதம் வாங்கி, குண்டல் பேட் பகுதிக்கு எடுத்து சென்று, 15 ரூபாய்க்கு விற்பனை செய்கின்றனர்' என்பது தெரியவந்தது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.