குடிநீர் வினியோகத்தில் குளறுபடி: பொதுமக்கள் முற்றுகை போராட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

குடிநீர் வினியோகத்தில் குளறுபடி: பொதுமக்கள் முற்றுகை போராட்டம்

Updated : மார் 18, 2013 | Added : மார் 18, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பந்தலூர்:நெல்லியாளம் நகராட்சியில் அம்பேத்கார் காலனியில் குடிநீர் வினியோகத்தை முறைப்படுத்த கோரி பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.பந்தலூர் நெல்லியாளம் நகராட்சியின் 13ம் வார்டுக்கு உட்பட்ட பகுதியில் அம்பேத்கார் காலனி அமைந்துள்ளது.இப்பகுதியில் முறையாக குடிநீர் வினியோகம் செய்யாததால் மக்கள் கடும் சிரமப்பட்டு வந்தனர். இந்நிலையில், குடிநீர் வினியோகத்தை முறைபடுத்த வலியுறுத்தி, நேற்று காலை அப்பகுதி மக்கள் பன்னீர்செல்வம்தலைமையில் காலி குடங்களுடன் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். சுமார் அரை மணி நேரம்முற்றுகை போராட்டம் நடந்த நிலையில், அங்கு வந்த நகராட்சி தலைவர் அமிர்தலிங்கம் உடனடியாக குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என உறுதியளித்ததையடுத்து மக்கள் கலைந்து சென்றனர்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை