நாகர்கோவில்: கோரிக்கைகளை வலியுறுத்தி, நாகர்கோவிலில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில், 2 காங்., எம்.எல்.ஏ., க்கள் கலந்து கொண்டனர். ஒருவர் புறக்கணித்தார். குளச்சலில் வர்த்தக துறைமுகம் அமைக்க வேண்டும், குண்டும் குழியுமாக உள்ள ரோடுகளை செப்பனிட வேண்டும், பேச்சிப் பாறை, பெருஞ்சாணி, முக்கடல் அணைகளை தூர்வார வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, குமரி மாவட்டத்தின் 3 காங்., எம்.எல்.ஏ.,க்கள் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, நேற்று கலெக்டர் அலுவலகம் எதிரில் நடைபெற்ற உண்ணாவிரதத்தில், எம்.எல்.ஏ.,க்கள் ஜாண்ஜேக்கப், பிரின்ஸ், மாநில காங்., வர்த்தகர் பிரிவு தலைவர் வசந்தகுமார், மாநில அழைப்பாளர் விஜயகுமார் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஆனால், விஜயதரணி எம்.எல்.ஏ., பங்கேற்காமல் புறக்கணித்தார். 3 காங்., எம்.எல்.,ஏக்கள் உள்ள குமரி மாவட்டத்தில் காங்கிரசார் 2 கோஷ்டிகளாக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.