தூத்துக்குடி: "" 21ம் நூற்றாண்டை , இந்தியாவின் நூற்றாண்டாக மாற்றுவது, இளைஞர்களின் கையில்தான் உள்ளது''என, கல்லூரி விழாவில், தமிழக கவர்னர் ரோசைய்யா பேசினார்.
தூத்துக்குடிமாவட்டம், சாயர்புரம் "போப்'கல்லூரியில், நேற்று, பொன்விழா ஆண்டு நிறைவு விழாவில், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட, கவர்னர் ரோசைய்யா பேசியதாவது: கிராமங்கள் வளர்ந்தால்தான் இந்தியா தன்னிறைவு பெறும் எனக்கூறிய மகாத்மா காந்தி, கிராமங்களுக்கும், அதன் தேவைகளுக்கும், முன்னுரிமை தரவேண்டுமென வலியுறுத்தினார். ஒருநாட்டில் கிராமங்கள், குடிமகன்கள் வளர்ச்சிபெற்றதால்தான், அந்த நாடு வளர்ச்சி பெற்றதாக கருதப்படும். கல்வி, வளர்ச்சியை ஏற்படுத்தும் கருவியாகும். ஆனால், வெறும் கல்வியறிவு மட்டும் போதாது. கல்வி நிறுவனங்கள், மாணவர்களின் போட்டி மற்றும் கண்டுபிடிப்பு அறிவை வளர்த்தல் அவசியம். உயர்கல்வி நிறுவனங்கள் பரந்துவிரிந்த, தரமான கல்வியை மாணவர்களுக்கு அளிக்க வேண்டும். மேலும், அவர்களிடம், சமுதாயம் மற்றும் நாட்டிற்கு சேவை செய்யும் மனப்பான்மையை உருவாக்கவேண்டும். அவர்கள் கற்ற கல்வி, சமுதாயம் மற்றும் மக்களின் வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படவேண்டும். ""நீ எதுவாக ஆக நினைக்கிறாயோ, அதுவாக உன்னைப்பார்.'' என அறிஞர் பென் ஸ்வீட்லாண்ட் கூறுவார். என்னால் முடியும் என நினைத்து தொடர்ந்து செயல்பட்டால், நினைத்த காரியத்தில் வெற்றிபெறலாம். தன்னம்பிக்கையும், உறுதியும் கொண்டோரை, வெற்றி தேடிவரும். நமது நாட்டிற்கு துடிப்பு மிக்க இளைஞர்கள் தேவை. 21ம் நூற்றாண்டை , இந்தியாவின் நூற்றாண்டாக மாற்றுவது, இளைஞர்களின் கையில்தான் உள்ளது. இவ்வாறு, அவர் பேசினார். முன்னதாக, ஜி.யு.போப் குறித்த புத்தகத்தை வெளியிட்டார். பொன்விழா ஆண்டு நுழைவு வாயிலை திறந்துவைத்தார். மேலும், பொன்விழா ஆண்டு கட்டடம், உள்விளையாட்டுஅரங்கப்பணிகளை துவக்கி வைத்தார். விழாவில், தூத்துக்குடி கலெக்டர் ஆஷிஷ்குமார், கல்லூரி தலைவர், சி.எஸ்.ஐ., பிஷப் ஜெபச்சந்திரன், செயலர் நட்டர்ஜி, முதல்வர் செல்வக்குமார், பேராசிரியர்கள், அதிகாரிகள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.