| E-paper

 
Advertisement
தமிழகத்தில் ரூ.37 கோடி கறுப்பு பணம் பறிமுதல்:மத்திய சட்ட அமைச்சர் தகவல்
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

புதுடில்லி:""தேர்தலில், கறுப்பு பணம் பயன்படுத்தப் படுவதை தடுக்க, தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்,'' என, மத்திய சட்ட அமைச்சர், அஸ்வனி குமார் கூறினார்.ராஜ்யசபாவில் நேற்று, மத்திய சட்ட அமைச்சர், அஸ்வனி குமார் கூறியதாவது:தேர்தல்களின்போது, கறுப்பு பணம் அதிக அளவில் பயன்படுத்தப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இந்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க தேவையான, அனைத்து நடவடிக்கைகளையும், மத்திய அரசும், தேர்தல் கமிஷனும் மேற்கொள்ளும்.இது தொடர்பாக, தேர்தல் நடவடிக்கைகளில் சீர்திருத்தம் செய்யும் பணிகளை மேற்கொள்ளும்படி, சட்ட கமிஷனுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அடுத்த மாத இறுதிக்குள், தன் பரிந்துரைகளை தெரிவிக்கும்படி, சட்ட கமிஷனுக்கும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.இதுதவிர, அரசியல் கட்சிகளுடனும், தேர்தல் நடவடிக்கைகளில் தொடர்புள்ள அமைப்புகளுடனும், இதுகுறித்து ஆலோசனை நடத்தப்படும். கடந்த, மூன்று ஆண்டுகளாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடந்த தேர்தல்களின்போது, கணிசமான கறுப்பு பணம், பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.தமிழகத்தில், 37 கோடி ரூபாயும், உ.பி.,யில், 36 கோடி ரூபாயும், ஆந்திராவில், 30 கோடி ரூபாயும், கறுப்பு பணம் பறிமுதல் செய்யப்பட்டது.இவ்வாறு, அஸ்வனி குமார் கூறினார்.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.