போபால்:அரசு விழாவில் கலந்து கொள்ள வந்த முதல்வர், சிவராஜ் சிங் சவுகான், ஆட்டோவில் வந்து இறங்கி, அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.பாரதிய ஜனதா கட்சி ஆளும், மத்திய பிரதேச மாநிலத்தின், முதல்வராக, சிவராஜ் சிங் சவுகான் உள்ளார். போபால் நகரின், தசரா மைதானத்தில், "அந்த்யோதயா' திட்டத்தை, முதல்வர் நேற்று துவக்கி வைப்பதாக இருந்தது.வழக்கமான பாதுகாப்பு கெடுபிடிகளுடன், வாகன அணிவகுப்பில் வந்தால், போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என, நினைத்த சவுகான், ஆட்டோவில் வந்து இறங்கினார். அவருடன், மாநில அமைச்சர்கள் சிலரும் வந்தனர்.விழாவை, குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்த சவுகான், வந்த ஆட்டோவிலேயே மீண்டும் பயணம் செய்து, தன் அலுவலகம் திரும்பினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.