மெல்போர்ன்:ஆஸ்திரேலிய அரசு, 108 அடுக்கு கட்டடத்தை கட்ட திட்டமிட்டுள்ளது.ஆஸ்திரேலியாவின், விக்டோரியா மாகாண, திட்ட அமைச்சர் மேத்யூ கய், இது குறித்து கூறியதாவது:மெல்போர்ன் நகரத்தின் தெற்கு கடற்கரை பகுதியில், 388 மீட்டர் உயரம் கொண்ட கட்டிடத்தை கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இக்கட்டிடத்தில், 108 தளங்கள் இருக்கும்.இந்த கட்டிடம் கட்டப்பட்டால், முதல் உலகப்போரில் உயிரிழந்தவர்களின் நினைவாக, இந்நகரில் கட்டப்பட்டுள்ள, போர் நினைவிடத்தின் மீது நிழல் விழும் என, தயங்கினோம்.
எனினும், நினைவிடத்தின் நிர்வாகிகள், எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்பதால், இத்திட்டத்தை துவக்க முடிவு செய்யப்பட்டது.ஐந்து ஆண்டுகளுக்குள் கட்டப்படும் இக்கட்டிடத்துக்காக, 3,000 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், 300 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.இக்கட்டிடத்தில், 646 குடியிருப்புகள், 288 அறைகள் கொண்ட ஆறு நட்சத்திர ஓட்டல் மற்றும் அலுவல அறைகள் இருக்கும். ஆஸ்திரேலிய கொடியில் உள்ளது போன்ற நட்சத்திர வடிவில், ஓட்டலின் மேல் தளம் வடிவமைக்கப்படும்.இவ்வாறு, மேத்யூ கூறினார்.துபாயில் உள்ள, உலகின் மிக உயரமான கட்டிடமான, "புர்ஜ் காலிபா'வின் உயரம், 828 மீட்டர் என்பது குறிப்பிடத்தக்கது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.