சென்னை: "ஐ.நா., மனித உரிமை ஆணைய கூட்டத்தில், அமெரிக்கா கொண்டு வரும் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில், உரிய திருத்தங்களைச் செய்து வலுவான தீர்மானமாக அதை நிறைவேற்ற, இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, முதல்வர் ஜெயலலிதா கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுகுறித்து, பிரதமர் மன்மோக னுக்கு அவர் எழுதியுள்ள கடிதம்: இலங்கையில் போர் முடிந்தும், ஈழத் தமிழர்களுக்கான உரிமைகளை வழங்காமல், மனித உரிமை மீறல்களை, இலங்கை தொடர்ந்து செய்து வருவதை, சர்வதேச சமூகம் கண்டித்து வருகிறது. இதற்கிடையே, கடந்த ஆண்டு நடந்த ஐ.நா., மனித உரிமை ஆணையத்தில், அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை, நீர்த்து போக செய்து, தமிழர்களுக்கு, இந்தியா துரோகம் இழைத்துள்ளது.
ஐ.நா., புகார்: ஐ.நா., மனித உரிமை ஆணையத்தில், தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, ஒரு ஆண்டு முடிந்த நிலையிலும், போரில் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் மறுவாழ்வு ஆணையம் அளித்த பரிந்துரைகளை, இலங்கை நிறைவேற்றவில்லை. இதை, ஐ.நா., மனித உரிமை ஆணையமே சுட்டிக்காட்டியுள்ளது. குறிப்பாக, நீதி, மறுவாழ்வு, வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல் போன்ற எந்த பரிந்துரையையும் நிøவேற்றாமல், மனித உரிமைகளை இலங்கை மீறி வருகிறது என்றும், ஐ.நா., மனித உரிமை ஆணையம் கூறியுள்ளது. இந்த சூழலில், தற்போது துவங்கியுள்ள ஐ.நா., மனித உரிமை ஆணையக் கூட்டம், இலங்கைக்கு உரிய அழுத்தம் கொடுத்து, அந்நாட்டை செயல்பட வைக்க உரியதாக அமைந்துள்ளது. மேலும், போரில் நடந்த இனப்படுகொலை மற்றும் தொடரும் மனித உரிமை மீறல்களுக்கு, இலங்கையை பொறுப்பாளியாக்க வேண்டும். இதற்கான வாய்ப்பு இந்தியாவுக்கு தற்போது கிடைத்துள்ளது. தமிழகத்தில் எழுந்துள்ள ஈழத் தமிழர் ஆதரவால் மட்டுமல்லாமல், ஜனநாயகம் மற்றும் மனித உரிமையை பாதுகாப்பதில், சர்வதேச அளவில், இந்தியா தலை சிறந்த நாடு என்பதை நிரூபிக்கவும், உகந்த தருணம் வாய்த்துள்ளது.
சந்தேகம்: ஆனால், கடந்த சில நாட்களாக, பிரதமர் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் ஆகியோரின் கருத்துக்கள், பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. குறிப்பாக, இலங்கையில் நடந்த இனப்படுகொலை மற்றும் மனித உரிமை மீறல்கள் பற்றிய இந்தியாவின் நிலை சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் உள்ளது. இந்த அணுகுமுறை, ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது. எனவே, ஐ.நா., மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை ஆதரிப்பதோடு நிற்காமல், மறுவாழ்வு பணிகளை மேம்படுத்துதல், இலங்கையை பொறுப்பாளி ஆக்குதல் ஆகியவற்றுக்கு வரைவு தீர்மானத்தில் திருத்தங்கள் கொண்டு வந்து, அதை நிறைவேற்ற, இந்தியா முன்வர வேண்டும்.
திருத்தம்: இதற்காக, வரைவு தீர்மானத்தில், ஐ.நா., பொது செயலர் அமைத்த வல்லுனர் குழுவின் அறிக்கையை சேர்க்க வேண்டும். மனித உரிமை மீறல் தொடர்ந்து கொண்டிருப்பதற்கு கண்டனம் மற்றும் அதிருப்தியை பதிவு செய்ய வேண்டும். அரசியல் தீர்வை ஏற்படுத்தாத இலங்கைக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும். இனப்படுகொலைக்கு, சுதந்திரமான சர்வதேச விசாரணை நடத்த வேண்டும். போர் குற்றம் புரிந்தோரை, சர்வதேச நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டும். ஆறு மாதத்தில் இதற்கான பணிகளை முடித்து, அடுத்த ஆண்டில் நடக்கும், 25வது மனித உரிமை ஆணைய கூட்டத்தில், இதன் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். இவற்றை எல்லாம், இலங்கை அரசை ஏற்க வைக்க வேண்டும். இதற்கான, திருத்தங்களை தீர்மானத்தில் சேர்க்க வேண்டும். அமெரிக்க தீர்மானத்தை ஆதரிப்பவர்களை ஒன்றிணைத்து, வரலாற்று முக்கியத்துவமான இத்தீர்மானத்தை நிறைவேற்றி, ஈழத் தமிழர்களின் நல்வாழ்வுக்கு, நடவடிக்கையை இந்தியா எடுக்க வேண்டும். இவ்வாறு, ஜெயலலிதா கூறியுள்ளார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
இன்னமும் இலங்கை ஈழ தமிழ் தீவிரவாதிகளால் அம்மாவின் உயிருக்கு ஆபத்து இருப்பதால் என கூறி ,தொடர்ந்து "z " பிரிவு பாதுகாப்பை வைத்து கொண்டிருப்பது நியாயமா? கலைஞரின் கோரிக்கைகளை காப்பி அடித்தது போல இருக்கிறது....ஆசிய நாடுகள் எல்லாமே இலங்கையை ஆதரிப்பதேன்? இந்தியாவில் கூட தமிழ்நாட்டை தவிர மற்ற மாநிலங்களில்....ஏன்...அண்டை மாநிலமான கேரளாவில் கூட இலங்கைக்கெதிரான குரல் எழாதது ஏன்? இலங்கை அரசே விசாரித்து கொள்ளவேண்டுமென கூறுவது எந்த வகையில் நியாயம்?அமெரிக்க தீர்மான மாற்றத்திற்கு காரணமான , சுப்ரமணியசாமி போன்ற அரசியல் தரகர்களை தமிழ்நாட்டுக்குள்ளே அனுமதிக்க கூடாது....
அமெரிக்காவின் இறுதி வரைவுதீர்மானம் பல திருத்தங்களுடன் வெளிவந்துவிட்டது. பன்னாட்டு விசாரணை என்ற வாசகங்கள் நீக்கப்பட்டு இலங்கையே போற்குற்றங்களை விசாரிக்கவேண்டும் என்று மாற்றப்பட்டுள்ளது இந்த மாற்றத்திற்கான சூத்திரதாரிகள் சுப்ரமணிய (சாமி) யும் அன்னை சூனியகாந்தி (சோனியா) என்று பேச்சுக்கள் அடிபடுகின்றன இந்த தீர்மானத்தால் ஒரு ஆணையையும் பிடுங்க முடியாது அடுத்த ஐக்கிய நாடுகள் சபை கூட்டம் நடப்பதற்குள் இலங்கையில் எஞ்சி உள்ள தமிழர்களையும் சிங்கள இனவெறி நாய் ராஜபக்சே கொன்று விடுவான். இபொழுது இந்தியாவில் இரவுநேரம் என்பதால் இந்த செய்தி இன்னும் யார்காதுக்கும் எட்டி இருக்காது விடிந்தால்தான் தெரியும் என்ன நடக்கும் என்று தமிழன் நாதியற்று போய்விட்டான் வயறு எரிகிறது
சர்வதேச சுதந்திர விசாரணை , பொருளாதார தடை இதுவரை எல்லாம் சரி... மீண்டும் ஒன்றுபட்ட இலங்கையில் தமிழர்கள் கை கட்டி வாய் மூடி வாழ வேண்டுமா ??? நீங்கள் என்ன பிச்சை போடுகிறீர்களா ?? யாருக்கு வேண்டும் உங்கள் பிச்சை ?? சிங்களவர்களுடன் இணைந்து வாழ் என்று சொல்ல நீங்கள் யார் ??? உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது ??? உங்களை அங்கே வைத்து உங்கள் சொந்த பந்தங்களை கொன்றவன் இடமும் , உங்கள் அக்கா , தங்கையை கற்பழித்தவனிடமும், குழந்தைகள் என்றும் பாராமல் கொடூரமாக கொன்றவனிடமும் ஆசையாக கொஞ்சி விளையாட முடியுமா ??? சர்வதேச அளவில் வாழும் ஈழ தமிழர்களிடையே பொது வாக்கெடுப்பினை நடத்துங்கள்.. அவர்கள் தீர்மானித்து கொள்ளட்டும் சிங்களவனுடன் சேர்ந்து வாழ்வதா ?? இல்லை தனி நாடு பெற்று சுதந்திரமாக வாழ்வதா என்று ?? அதற்காக தானே 60 வருடங்களாக இப்படி வெட்கப்பட்டு , வேதனைப்பட்டு , அவமான பட்டு , அசிங்க பட்டு , துன்பப்பட்டு , துயரப்பட்டு பல லட்சம் உயிர்களை பலி கொடுத்து போராடி வருகிறார்கள்.. அவர்களுக்கு நாமே உதவ முடிய வில்லை என்றால் வேறு யார் உதவி செய்வார்கள் ?? எந்த நம்பிக்கையில் மீண்டும் சிங்கள அரசு தமிழனுக்கு சம உரிமை கொடுக்கும் என்று சொல்கிறீர்கள் ?? 60 வருடங்கள் பார்த்து பார்த்து தானே இன்று வரை ஏமாந்து வருகிறோம் ?? ஒரு நிலைமையில் தாங்க முடியாமல் தானே என் தலைவன் பிரபாகரன் ஆயுதம் ஏந்தும் நிலைக்கு தள்ள பட்டார் ?? தன் மண்ணின் மக்களை காக்க தன் உயிரையும் துச்சமென மதித்து ஆயுதம் ஏந்துவான் அந்த மண்ணின் மைந்தன்.. அவன் தான் புறநானுறு கூறும் தேச பற்று கொண்டவன்.. அப்படி பட்டவர்கள் விடுதலை புலிகள்.. அப்படி என்றால் அவர்கள் எப்படி எப்படி எல்லாம் தங்கள் தாய் மண்ணை நேசித்து இருப்பார்கள் ??? அதை விட்டு விட்டு சிங்களவனுக்கு கூஜா தூக்குவதா?? அப்படி என்றால் அவர்கள் சிந்திய ரத்த துளிகளுக்கு என்ன பதில் ?? ஒரு காலும் முடியாது.. தமிழீழம் தான் ஒரே தீர்வு .. அதற்கான சர்வதேச பொது வாக்கெடுப்பை நடத்து... அதுவரை மாணவர்கள் போராட்டம் ஓயாது ஓயாது... நான் சாகும் முன் தமிழீழத்தை பார்த்து விடு தான் சாவேன் என்பதை ஆணித்தரமாக சொல்கிறேன்... இனி ஈழ விடுதலை போர் ஈழ மண்ணில் நடக்காது , அது இந்தியாவில் தான் நடக்கும் .. அது ஆயுதம் ஏந்தி நடக்காது , அறிவை ஏந்தி தான் நடக்கும்.. இனிவரும் தேர்தலில் தமிழீழத்தை ஆதரிக்கும் கட்சிகளுக்கு மட்டுமே ஆதரவு என்று நாங்கள் உறுதியாக மேற்கொண்டுள்ளோம்.. எந்நாளும் நிலை மாற மாட்டோம்.. இது சத்தியம்..
தாமரை இலை தண்ணீர் போன்ற ஜெயாவின் கருத்துக்களை கலைஞரும் பின்பற்ற வேண்டும். வேறு வழியில்லை, இங்கு அரசியல் செய்ய வேண்டுமானால் பாம்புக்கு தலையாகவும் மீனுக்கு உடலாகவும் இருந்தால் தான் மக்கள் நம்புவார்கள். எதிலும் நம்பிக்கையாகவும் உறுதியோடும் செயல் படுபவர்களின் பாடு....எப்போதும் அந்தரத்தில் தான்....திமுக உணர வேண்டிய பாடம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.