புதுடில்லி: "காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் ஒழுங்குமுறை கமிட்டி ஆகியவற்றை, உடனடியாக அமைக்கும்படி, மத்திய நீர்வளத் துறை அமைச்சகத்துக்கு உத்தரவிட வேண்டும்' எனக் கோரி, சுப்ரீம் கோர்ட்டில், தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
இறுதி தீர்ப்பு: காவிரி நீரை பகிர்ந்து கொள்வது தொடர்பாக, கர்நாடகா மற்றும் தமிழக அரசுகளுக்கு இடையே, நீண்ட காலமாக பிரச்னை இருந்து வருகிறது. 2007ல், ஒவ்வொரு மாநிலத்துக்கும், காவிரியிலிருந்து, எவ்வளவு நீர் திறந்து விடப்பட வேண்டும் என்பது பற்றி, காவிரி நடுவர் மன்றம், இறுதித் தீர்ப்பு அளித்தது. ஆனாலும், இந்த தீர்ப்பை, அரசிதழில் வெளியிடாமல், மத்திய அரசு இழுத்தடித்தது. தமிழக அரசு, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்ததை அடுத்து, "காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பை, உடனடியாக அரசிதழில் வெளியிட வேண்டும்' என, மத்திய அரசுக்கு, சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து, நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பு, சமீபத்தில் அரசிதழில் வெளியிடப்பட்டது. இந்நிலையில், தமிழக அரசு சார்பில், நேற்று சுப்ரீம் கோர்ட்டில், புதிதாக ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.
ஒழுங்குமுறை கமிட்டி: அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது: காவிரி நடுவர் மன்றம் இறுதித் தீர்ப்பை அளித்த போது, காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் ஒழுங்குமுறை கமிட்டியை அமைக்க வேண்டும் என, பரிந்துரைத்திருந்தது. தமிழகத்தில், வரும், ஜூன், 1 முதல், விவசாய பணிகள் துவங்கவுள்ளன. எனவே, அடுத்த மாதம், இறுதி வாரத்துக்குள், காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் ஒழுங்கு முறை கமிட்டி ஆகியவற்றை அமைக்கும்படி, மத்திய நீர்வளத் துறை அமைச்சகத்துக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு, தமிழக அரசின் மனுவில் கூறப்பட்டுள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
அவர் அவருடைய கேடு தொழிலை கட்சிதமாக செய்து கொண்டுள்ளார். கண்டுக்காமல் விட்டால் நாட்டிற்கு நல்லது. அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு பலன் கிடைக்கும். அதை அவர் கெடுக்காமல் இருக்கணும். தமிழன் புரிந்த அவருக்கு ஓய்வை கொடுத்தால் அவர் தமிழனை தினமும் நினைப்பார். பதவிஏய் கொடுத்தால் தமிழனை மறந்து விடுவார். இது அவருடைய இயல்பு. அதற்காக நாம் கருணாவை குற்றம் சொல்லக்கூடாது 2 பேர்களை வைத்துள்ள நமக்கே குடும்பம் நடத்துவது கடினமான ஓன்று அவரது குடும்ப உறுப்பினர்கள் 170 பேர்கள் அப்போ நம்மால் முடியுமா, எல்லோருமே பிறக்கும்போதே லட்சம் கோடிகளுக்கு அதிபதிகள் ,அதை அப்படியே உயர்த்தும் வேலையே அவர் அனுதினமும் தனது குறிக்கோளாக செய்து கொண்டுள்ளார் போதுமா....

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.