சென்னை: ""இந்தியா மீது ஈழத் தமிழர்களுக்கு நம்பிக்கை ஏற்படும் வகையில், அவர்களின் நல்வாழ்வுக்கு மத்திய அரசு செயல்படவேண்டும்,'' என, ஆர்.எஸ்.எஸ்., தென் மாநிலங்களின் செயலர் ராஜேந்திரன் கூறினார்.
ஜெய்ப்பூரில் முடிந்த ஆர்.எஸ்.எஸ்., பிரதிநிதிகள் சபை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, அவர் கூறியதாவது: பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தில், இந்துக்களை அழிக்கும் செயல் தொடர்ந்து நடந்து வருகிறது. இரு நாடுகளிலும் கடந்த 65 ஆண்டுகளில், இந்துக்களின் மக்கள்தொகை வெகுவாக குறைந்துள்ளது. இந்துக்களை காப்பாற்ற, மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்துக்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்புகளுக்கு, அந்நாடுகளிடம் நஷ்ட ஈட்டைப் பெறவேண்டும். இலங்கை பிரச்னையில், ஈழத் தமிழர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பின் போது, இந்திய அரசு உதவவில்லை. இந்தியா உதவும் என, நம்பியிருந்த ஈழத் தமிழர்கள் ஏமாந்து உள்ளனர். அவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில், மத்திய அரசு இனி நடந்து கொள்ளவேண்டும். தமிழர்களின் மறுவாழ்வு, இழந்த உரிமைகளை மீட்டல் போன்றவற்றில், இந்தியா உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு, ராஜேந்திரன் கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வலுவுள்ளவன் பகுதியில் வலுவில்லாதவன் தாக்கப் படுகிறான் பாதிக்கப்பட்டவர்கள் காக்கப்பட வேண்டும் அவர்களுக்கு நிவாரணம் கிடைக்க வேண்டும் என்பது தவறில்லை. மதம் எதுவானாலும் மக்கள் காக்கப்பட வேண்டும். ஆனால் தற்போது இந்தியாவில் இந்துக்களுக்கு ஆதரவு இல்லை தமிழ்நாட்டில் தமிழனுக்கு ஆதரவு இல்லை என்ற நிலை தான் இருக்கிறது.
இவர்கள் தமிழர்கள் என்ற ரீதியில் இவ்விஷயத்தை அணுக மாட்டார்கள். எல்லாவற்றிலும் மதம் சார்ந்து தானா சிந்திக்க வேண்டும் பௌத்தர்கள் யார்.....? இந்தியாவில் பௌத்தர்களும் சீக்கியர்களும் கூட இந்துக்களின் அங்கமாகவே பார்க்கப் படுவதை வசதியாக விடுவது ஏனோ....? இலங்கையிலிருந்து தமிழக கோயில்களுக்கு வருபவர்கள் தானே தாக்கப் படுகிறார்கள்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.