தமிழகத்தில், கடந்த நான்கு ஆண்டுகளில், கலப்பு திருமணம் செய்ததால், அதிக அளவில் பாதிக்கப்பட்டவர்கள், ஆதிதிராவிட பெண்கள் என்பது, ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.
தமிழகத்தில், 2009-2012 ஆண்டுகளில், கலப்பு திருமணம் செய்து பாதிக்கப்பட்ட பெண்கள் குறித்து, மதுரையைச் சேர்ந்த, "சாட்சியம்' என்ற நிறுவனம், தகவல் அறியும் உரிமைச் சட்டத்திலிருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் ஆய்வு செய்தது. அதில், கலப்பு திருமணம் செய்து கொண்டு, கணவரால் பாதிக்கப்பட்டவர்கள், கணவரின் குடும்ப உறுப்பினர்களால், சித்திரவதைக்கு உள்ளானோர், திருமணம் செய்து, பின் சேர்ந்து வாழ மறுத்து, கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, ஏமாற்றி, பாலியல் வன்புணர்ச்சியால் பாதிக்கப்பட்ட பெண்கள் ஆகிய, நான்கு வன்கொடுமை நிலைகளின் அடிப்படையில், பாதிக்கப்பட்டவர்கள் குறித்து ஆய்வு செய்தது. அவற்றில், அதிக அளவில் பாதிக்கப்பட்டது, ஆதிதிராவிட சமூகத்தைச் சேர்ந்த பெண்களே என்பது, ஆய்வில் தெரியவந்தது.
84 கலப்பு திருமணங்கள்: மொத்தம், 17 மாவட்டங்களில், கடந்த நான்கு ஆண்டுகளில், 84 பெண்கள் கலப்புத் திருமணம் செய்துள்ளனர். இவர்களில், 67 பேர், ஆதிதிராவிட சமூகத்தைச் சேர்ந்த பெண்களும், பிற சமூகத்தைச் சேர்ந்த, 17 பெண்களும், வன்கொடுமைகளில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆசை வார்த்தை கூறி: உயர் ஜாதிப் பெண்களை, கலப்புத் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, வன்கொடுமைகளில் ஈடுபட்ட வகையில், 17 சம்பவங்கள் நடந்துள்ளன. இவர்களில், நான்கு பேர், ஆதி திராவிட சமூகத்தைச் சேர்ந்தவர்கள்; 13 பேர், உயர் ஜாதியைச் சேர்ந்தவர்கள். நான்கு ஆண்டுகளில், பதிவு செய்யப்பட்ட, 84 வழக்குகளில், கலப்பு திருமணம் செய்து கொண்டு கணவனாலும், திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, ஆண்களால் ஏமாற்றப்பட்டவர்களில், 96.4 சதவீத பெண்கள், ஆதிதிராவிட சமூகத்தைச் சேர்ந்தவர்கள்; மற்ற பெண்கள், 3.6 சதவீதத்தினர்.
பாலியல் வன்புணர்ச்சி: பாதிக்கப்பட்ட, 67 ஆதிதிராவிட பெண்களில், நான்கு பெண்கள், கணவரின் வன்முறையாலும்; ஐந்து பெண்கள், கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் வன்முறையாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். அது மட்டுமின்றி, ஆறு பெண்கள், திருமணத்திற்கு பின், கணவர் மற்றும் அவரது குடும்பத்தினரால் விரட்டியடிக்கப்பட்டு, கைவிடப்பட்டுள்ளனர். மற்ற, 52 ஆதிதிராவிட பெண்கள், உயர் ஜாதி ஆண்களால், திருமணம் செய்து கொள்வதாக, ஆசை வார்த்தை கூறி, ஏமாற்றப்பட்டு, பாலியல் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.
கணவரின் வன்கொடுமை: பாதிக்கப்பட்ட, 17 உயர் ஜாதிப் பெண்களில், 13 பேர், ஜாதி இந்து கணவர்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில், ஆறு பேர் கணவரின் வன்முறையாலும்; மூன்று பேர், கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் வன்முறையாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். அது மட்டுமில்லாமல், எட்டு பெண்கள் திருமணம் செய்து கொள்வதாக, ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி, பாலியல் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப்பட்டவர்கள். உயர் ஜாதி பெண்களை பாதிப்புக்குள்ளாக்கிய, ஆதிதிராவிட ஆண்கள் மீது, நான்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில், இரண்டு பெண்கள், கணவரின் வன்முறையாலும், இரண்டு பெண்கள் கணவரின் குடும்பத்தினராலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
- நமது நிருபர் -
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
முதலில் ஆதிரிராவிடர்கள் தங்கள் எதிரி யார் நண்பர் யார் என்பதை உணர வேண்டும். தங்கள் பாதுகாப்புக்கான கவசமாக ஓர் அமைப்புக்குள் வர வேண்டும். தங்களை பகடை காயாக பயன்படுத்துபவர்களிடமிருந்து எச்சரிக்கையாக தூரம் போக வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக தங்கள் நல்வாழ்வுக்காக பாடுபட்டவர்களிடம் நன்றி கொளல் வேண்டும். சினிமா மாயையினால் இவர்கள் தங்களையும் வருத்தி கொண்டு தங்களுக்கு நல்லது செய்பவர்களை அடையாளம் காண தவறுவதால்.....இத்தனை சலுகைகள் பெற்ற பின்னும் இருட்டில் உலவ வேண்டிய நிலை.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.