Advertisement
சென்னையில் தெரு நாய்கள் கணக்கெடுப்பு: கூடுதலாக இரண்டு இடங்களில் இனவிருத்தி கட்டுப்பாட்டு மையங்கள்
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
ஆல்பம்
பதிவு செய்த நாள் : மார்ச் 19,2013,00:26 IST

சென்னை: "சென்னையில் தெரு நாய்கள் பற்றி கணக்கெடுப்பு நடத்தப்படும். கூடுதலாக, இரண்டு இடங்களில் இனவிருத்தி கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்கப்படும். ஆண்டுக்கு, 60 ஆயிரம் நாய்களுக்கு கருத்தடை செய்யப்படும்' என, மாநகராட்சி தெரிவித்துள்ளது.


1.75 லட்சம் நாய்கள்: சென்னை மாநகரில், தற்போதைய உத்தேச கணக்குப்படி, 1.75 லட்சம் தெரு நாய்கள் இருப்பது தெரிய வந்துள்ளது. தெரு நாய்களால் ஏற்படும் தொல்லையை கட்டுப்படுத்தும் வகையில், நாய்கள் இனவிருத்தியை கட்டுப்படுத்தும் நடைமுறை இருந்து வருகிறது. சென்னையில், நாய்கள் இனவிருத்தி கட்டுப்பாட்டில், "புளூகிராஸ்,' பீப்புள் பார் அனிமல், பிராணிகள் வதை தடுப்பு சங்கம் (எஸ்.பி.சி.ஏ.,) ஆகிய, மூன்று தொண்டு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. பேசின்பாலம், லாயிட்ஸ் சாலை, வேப்பேரி, வேளச்சேரி ஆகிய நான்கு இடங்களில், நாய் கருத்தடை மையங்கள் உள்ளன. இந்நிலையில், தெரு நாய்களை கட்டுப்படுத்துவது குறித்து, நேற்று மாநகராட்சி ஆணையர் விக்ரம் கபூர், துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.


கூடுதல் மையம்: அதில் அவர் கூறியதாவது:


* தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து, நாய்கள் குறித்து முழுமையான கணக்கெடுப்பு நடத்தப்படும்.


* கூடுதலாக, இரண்டு இனவிருத்தி கட்டுப்பாட்டு மையங்கள் (அம்பத்தூர், மணலி) அமைக்கப்படும்


* தினமும், 100 நாய்கள் வரை பிடிக்கப்படுகின்றன. இந்த எண்ணிக்கை, 200 ஆக அதிகரிக்கப்படும்


* ஆண்டுக்கு, 60 ஆயிரம் நாய்களுக்கு கருத்தடை, வெறி தடுப்பூசி போடப்படும்


* பொதுமக்களிடம், நாய் கடி தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்


நாய் பிடிக்க தேவையான வாகனங்கள் கைவசம் உள்ளன. புதிய வாகனங்கள் வாங்கப்பட்டு, பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதால், நாய்கள் தொல்லை குறையும். இவ்வாறு, அவர் கூறினார்.


340 அழைப்புகள்: சென்னையை அடுத்த கூடுவாஞ்சேரியில், தனப்பிரியா என்ற சிறுமியை கடித்த வெறிநாய், சற்று தூரம் இழுத்துச் சென்ற சம்பவம், பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. அவருக்கு, தனியார் மருத்துவமனையில், அரசு செலவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சென்னை தண்டையார்பேட்டை பட்டேல் நகரைச் சேர்ந்த தமீம் அன்சாரி, 9, என்ற சிறுவனையும் வெறிநாய் கடித்து, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான். அடுத்தடுத்த இந்த சம்பவங்கள் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. நாய்களின் பெருக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும் என, மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். "தெருக்களில் நாய்களின் தொல்லை அதிகரித்துள்ளது, நாய்களை பிடியுங்கள்' என, ஐந்து நாட்களில், 340 அழைப்புகள் மாநகராட்சிக்கு வந்துள்ளன. இதுவே, தெரு நாய்களின் தொல்லை அதிகரித்து உள்ளதை, உறுதி செய்வதாக உள்ளது.


பதிவு செய்யலாம்: மாநகராட்சி பகுதிகளில் நாய்களை வளர்ப்போர், மாநகராட்சியிலும், இனவிருத்தி கட்டுப்பாட்டு மையங்களிலும், 50 ரூபாய் செலுத்தி, நாய்களை பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யப்பட்ட நாய்களுக்கு, "டோக்கன்' வழங்கப்படுகிறது. பதிவு செய்யும் நாய்களுக்கு, இலவசமாக வெறிநோய் தடுப்பூசியும் போடப்படுகிறது.


"பெட் கிளினிக்': மாநகராட்சி சார்பில், நுங்கம்பாக்கம் பள்ளி சாலை, திரு.வி.க., நகர் பல்லவன் சாலை, பெரம்பூர் ரயில் நிலையம் ஆகிய இடங்களில், செல்ல பிராணிகளுக்கான கிளினிக்கை மாநகராட்சி நடத்தி வருகிறது. இந்த மையங்களில், இலவச சிகிச்சை அளிக்கப்படுகிறது.


நாய் கடித்தால் என்ன செய்யணும்?


* நாய் கடித்த இடத்தை சோப்பு போட்டு, நன்கு கழுவ வேண்டும்.


* துணி கட்டு போட கூடாது.


* அரசு மருத்துவமனைகளில், உரிய தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும்.


* காயத்தின் தன்மைக்கேற்ப கடிபட்ட நாள், மூன்றாவது நாள், ஏழாவது நாள், 14வது நாள், தேவைப்பட்டால், 28வது


நாளில் வெறிநோய் தடுப்பூசி போட வேண்டும்.


* நாய் கடிக்கு, கிளினிக்குகளில் சாதாரண தடுப்பூசி மட்டும் போடுவது சரியல்ல. பொதுமக்கள் இதில் விழிப்போடு இருக்க வேண்டும். இல்லாவிட்டால் உயிர் போகவும் வாய்ப்புள்ளது.


* வெறிநாய் கடித்தால், அன்றே வெறிநோய் தடுப்பூசி போடவேண்டும். ஒரு நாள் விட்டுவிட்டு, அதன் பின் என்னதான் சிகிச்சை முயற்சிகள் மேற்கொண்டாலும் எந்த பயனும் கிடைக்காது; உயிரிழப்பு தவிர்க்க முடியாது.





வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.