ஐதராபாத்: ஆந்திராவில், முதல்வர், கிரண்குமார் ரெட்டி தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்களில் பெரும்பாலானோருக்கு, விஷ்ணுவின் பெயர்களே உள்ளன. நாராயணன், லட்சுமணன், வேங்கடரமணா என, தெய்வீகம் கமழும் விதத்திலேயே அமைச்சர்கள் பெயர்கள் உள்ளன.
பிரசித்தி பெற்ற திருப்பதி - திருமலை வெங்கடாஜலபதி கோவில், ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. உலக மக்கள் அனைவரையும் ஈர்க்கும், திருப்பதி வெங்கடாஜலபதியின் மீது அதீத அன்பு கொண்ட அம்மாநில மக்கள், தங்கள் பெயர்களில், வெங்கடாஜலபதி மற்றும் அவரின் பிற பெயர்களையே பெரும்பாலும் கொண்டுள்ளனர். மொத்தமுள்ள, 36 அமைச்சர்களில், ஆறு, ஏழு அமைச்சர்களின் பெயர் தான் பிற கடவுள்கள் மற்றும் பிற மதத்தவர்களின் பெயர்களாக உள்ளது. மற்ற அமைச்சர்கள் அனைவரின் பெயரும், விஷ்ணுவின் வெவ்வேறு பெயர்களாக இருப்பது ருசிகரமாக உள்ளது.
இவர்களில், முதல்வர், கிரண்குமார் ரெட்டியும், ஒரு சில பெண் அமைச்சர்களும் தான் மாறுபாடான பெயர்களை கொண்டுள்ளனர். பிற அனைவரும், வெங்கடாஜலபதியின் பெயர்களையே கொண்டுள்ளனர். துணை முதல்வர் பெயர், நரசிம்ம தாமோதர ராஜா, கல்வித்துறை அமைச்சர் பெயர், பார்த்தசாரதி, ஆயத்தீர்வை துறை அமைச்சர் பெயர், வேங்கடரமணா, விவசாய அமைச்சர் பெயர், லட்சுமி நாராயணா, நிதியமைச்சர் பெயர், ராமநாராயண ரெட்டி, வருவாய் துறை அமைச்சர் பெயர், ரகுவீரா, நீர்பாசனத்துறை அமைச்சர் பெயர், சுதர்சன் ரெட்டி, பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் பெயர், நரசிம்மன் என, பெரும்பாலான அமைச்சர்களின் பெயர்கள், நாராயணன் புகழ் பாடும் பெயர்களாகவே உள்ளன.
மேலும், ஸ்ரீதர், மகீதர், வெங்கடகிருஷ்ணா, வரப்பிரசாத ராவ், வெங்கடேஷ், விஸ்வரூபம், சத்யநாராயணா, விஜய்ராமராஜு என்றே அமைச்சர்களின் பெயர்கள் உள்ளன. பெண் அமைச்சர்களின் பெயர்களின் பிற்பகுதியில் சேர்க்கப்படும், கணவர் அல்லது தந்தையின் பெயரும், வெங்கடேச பெருமானின் பெருமையை போற்றுவதாகவே அமைந்துள்ளன. சுனிதா லட்சுமண ரெட்டி, இவர் பெண்கள் மேம்பாட்டு துறை அமைச்சராக உள்ளார். தொழில்துறை அமைச்சராக இருப்பவர் கீதா ரெட்டி. மாநில கவர்னர் பெயர், நரசிம்மன் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி பெண்கள் பெயருடனும், வெங்கடாஜலபதியின் பிற பெயர்கள் இடம்பெற்றுள்ளது, புதுமையாக உள்ளது. இது போன்ற ஒற்றுமை, பிற மாநிலங்களில் இருப்பது அரிது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
ஏலாம் சொர்க்கத்தில், ஏழு தலை கொண்ட ஆதிசேஷனின் மேல், உருவம் கொண்ட நிலையில் வீற்றிருக்கும் இறைவன் ஏழுமலையானே என்று எல்லோருக்கும் இம்மையில் இல்லாவிட்டாலும், மறுமையில் தெரியத்தான் போகிறது. அதுவரையில், யார் என்ன வேண்டுமானாலும் பேசலாம். போற்றுவார் போற்றலும், தூற்றுவார் தூற்றலும், போகட்டும் கிருஷ்ணனுக்கே..
Our life should be a prayer and a holy pilgrimage . We do not have to waste our time in rituals .Love and help the needy and humble .You will get reward for all your actions .There is no karma and dharma above these doctrines.Late Annadurai said " One can see divine in the smile of the poor" samson hyderabad.
பணம், அதிகாரம், புகழ்....... இதில் ஏதாவதொன்று உங்களிடம் நிறைய இருந்தால் நீங்கள் ஒரு VIP. உங்களுக்கு ஸ்பெஷல் திவ்ய தரிசனம் உண்டு...........இல்லை வெறும் பக்தி மட்டும் தான் உள்ளதா? நீ ஒரு தரித்திரன்.... அன்னக்காவடி...ஓசியில் லட்டு திங்க வந்தவன்... போயி கியூவில் நில்லு.... ஒன்றரை நொடி தரிசனம் கிடைக்க ஒன்றரை நாள் காத்துக்கிட......

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.