சென்னை: நில அபகரிப்பு வழக்குகளை விசாரிக்க, தனிப் பிரிவு மற்றும் சிறப்பு கோர்ட் அமைத்ததை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையை, கோடை விடுமுறைக்குப் பின் (ஜூன்), சென்னை ஐகோர்ட் ஒத்தி வைத்துள்ளது. அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், நில அபகரிப்பு புகார்களை விசாரிக்க, போலீசில் தனிப் பிரிவு ஏற்படுத்தப்பட்டது. இந்த வழக்குகளை விசாரிக்க, மாவட்டங்களில், 25, சிறப்பு கோர்ட்டுகளை அமைக்கவும், அரசு உத்தரவிட்டது. அதன்படி, மாவட்டங்களில் சிறப்பு கோர்ட்டுகள் துவங்கப்பட்டன. முன்னாள் அமைச்சர்கள் வீரபாண்டி ஆறுமுகம், நேரு உள்ளிட்ட பலர் மீது, நில அபகரிப்பு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. தனிப் பிரிவு அமைத்ததை எதிர்த்து, ஐகோர்ட்டில், தி.மு.க., - எம்.பி., தாமரைச்செல்வன், மறைந்த முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் உள்ளிட்ட பலர், தனித்தனியே மனு தாக்கல் செய்திருந்தனர். சிறப்பு கோர்ட்டை எதிர்த்து, வழக்கறிஞர் கணேசன் மனுத் தாக்கல் செய்திருந்தார். இம்மனுக்களை விசாரிக்க, நீதிபதிகள் பாஷா, என்.பால்வசந்தகுமார் அடங்கிய, "டிவிஷன் பெஞ்ச்' ஏற்படுத்தப்பட்டது. நில அபகரிப்பு புகார்கள் மீதான குற்றப்பத்திரிகையை, சிறப்பு கோர்ட்டுகளில் தாக்கல் செய்யவும், வழக்கு விசாரணைக்கும், "டிவிஷன் பெஞ்ச்' தடை விதித்திருந்தது.
இந்நிலையில், இவ்வழக்கு, "டிவிஷன் பெஞ்ச்' முன், நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கறிஞர் கணேசன் சார்பில், மூத்த வழக்கறிஞர் வில்சன் ஆஜரானார்.
அரசு தரப்பில், அவகாசம் கோரப்பட்டதை அடுத்து, விசாரணையை, கோடை விடுமுறைக்குப் பின், "டிவிஷன் பெஞ்ச்' ஒத்திவைத்தது. வழக்கை விசாரிக்கும், நீதிபதி பாஷா, மே மாதம் ஓய்வு பெறுவதால், வேறு நீதிபதி இடம் பெறுவார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.