மதுரை: போலி நகையை கொடுத்து ஏமாற்றியதாக கணவன், மனைவி முன்ஜாமின் கோரிய வழக்கில், கன்னியாகுமரி ராஜக்காமங்கலம் இன்ஸ்பெக்டருக்கு வாரன்ட் பிறப்பித்து, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. ராஜக்காமங்கலம் நாராயணன். மனைவி ராதிகா. இவர்கள்," 5 பவுன் நகையை புகார்தாரரிடம் வாங்கி, பதிலாக போலிநகையை கொடுத்து ஏமாற்றி, கொலைமிரட்டல் விடுத்ததாக ராஜக்காமங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். எங்கள் மீது பொய் புகார் கூறப்பட்டுள்ளது. முன்ஜாமின் வழங்க வேண்டும்,' என மனு செய்தனர். நீதிபதி கே.பி.கே.வாசுகி முன், மனு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் வக்கீல் கருப்பசாமி பாண்டியன்,""மனுதாரர்களை மார்ச் 7 வரை கைது செய்யக்கூடாது என ஏற்கனவே ஐகோர்ட் உத்தரவிட்டது. பிப்.,20 ல் போலீசார் கைது செய்துள்ளனர்,'' என்றார். நீதிபதி,""ராஜக்காமங்கலம் இன்ஸ்பெக்டருக்கு வாரன்ட் பிறப்பிக்கப்படுகிறது. அவரை இக்கோட்டில் ஆஜர்படுத்த, கன்னியாகுமரி எஸ்.பி., நடவடிக்கை எடுக்க வேண்டும். விசாரணை மார்ச் 21 க்கு ஒத்திவைக்கப்படுகிறது,'' என உத்தரவிட்டார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.