E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
ஜெனிவாவில் அமெரிக்க இறுதி வரைவு தீர்மானம் வெளியீடு: இலங்கை தமிழர்களுக்கு பயனில்லை
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

19 மார்
2013
02:05
பதிவு செய்த நாள்
மார் 19,2013 02:01

ஜெனிவா: இலங்கைக்கு எதிராக திருத்தப்பட்ட இறுதி வரைவு தீர்மானம் ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் . அமெரிக்கா வெளியிட்டது. இத்தீர்மானத்தில் சர்வதேச விசாரணை என்ற கோரிக்கை நீக்கப்பட்டுள்ளது தமிழர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.இத்தீர்மானம் தற்போது நான்காவது முறையாக திருத்தப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கையில் கடந்த 2009-ம் ஆண்டுநடந்த இறுதி கட்ட போரின் போது நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஜெனிவாவில் கடந்த மாதம் 22-ம் தேதி முதல் நடந்து வரும் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில்அமெரிக்கா தீர்மானம் கொண்டுவர உள்ளது.முன்னதாக இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் தொடர்பாக ஐ.நா.மனித உரிமைகள் ஆணையர் நவநீதம் பிள்ளை 18 பக்கங்கள் கொண்ட அறிக்கையை கடந்த மாதம் சமர்ப்பித்தார். அதில், போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரிப்பதாக அளித்த வாக்குறுதியை இலங்கை அரசு மீறிவிட்டதாக குற்றம்சாட்டடியுள்ளார்.

இதையடுத்து பல்வேறு திருத்தங்களுடன் இன்று வெளியிடப்பட்டுள்ள இறுதி வரைவுத்தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
இலங்கையின் தமிழர்கள் வாழும் பகுதியில் ராணுவத்தினரை உடனே அகற்ற வேண்டும். போரின் போது தமிழர்கள் பலர் காணாமல் போனது கவலை அளிக்கிறது. போர்க்குற்றம் ‌தொடர்பாக இலங்கை அரசே விசாரணை நடத்த வேண்டும். எல்.எல்.ஆர்.சி. பரிந்துரைகளை முழுமையாக நிறைவேற்றும் திட்டம் இலங்கைக்கு இல்லை. இலங்கை தமிழர்களுக்கு வாழ்வாதாரம், நீதி ,நல்லிணக்கம் முழுமையாக செயல்படவில்லை.மக்கள் நலன் சார்ந்த அமைப்புகளை இலங்கை அரசு வலுப்படுத்த வலியுறுத்தப்படும்.இவ்வாறு அந்த வரைத்தீர்மானத்தில் இடம் பெற்றுள்ளது. இதற்கிடையே இந்தியாவில் தமிழர்கள் எதிர்பார்க்கும் கோரிக்கையான சர்வதேச விசாரணை என்ற கோரிக்கை நீக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கத் தீர்மானத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்றாக, இலங்கை அரசின் எல்.எல்.ஆர்.சி. எனப்படும் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செயல்படுத்த வேண்டும் என தீர்மானத்தில் கூறப்பட்டிருந்த போதிலும், எல்.எல்.ஆர்.சி. திட்டத்தை செயல்படுத்தும் எண்ணம் இலங்கைக்கு இல்லை என கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை (புதன்கிழமை மதியம் அல்லது வியாழக்கிழமை ) தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.. இன்று வெளியிட்டப்பட்டு இறுதி வரைவுத்தீர்மானம் தமிழர்களுக்கு ஏமாற்றத்தை தான் தந்துள்ளது. உப்பு சப்பில்லாத இந்த தீர்மானத்தினால் இலங்கை தமிழர்கள் கிடைக்கப்போவது ஒன்றுமில்லை என்ற கருத்து நிலவி வருகிறது.




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (22)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Gilbert karunagaran - Istres ,பிரான்ஸ்
20-மார்-201303:35:53 IST Report Abuse
Gilbert karunagaran குட்டையை குழப்பிவிட்டுவிட்டார்கள் அமெரிக்கர்கள்
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
Cancel
Irulappanalagarsamy - madaurai,இந்தியா
19-மார்-201309:28:33 IST Report Abuse
Irulappanalagarsamy கடவுள் ஒருநாளும் விடமாட்டார் ராஜபக்செவேய்
Rate this:
0 members
0 members
6 members
Share this comment
Cancel
ramar - aruppukkotai  ( Posted via: Dinamalar Android App )
19-மார்-201308:01:51 IST Report Abuse
ramar தாத்தாவுக்கு பலன்
Rate this:
1 members
0 members
3 members
Share this comment
Cancel
arulnath - singapore,சிங்கப்பூர்
19-மார்-201307:16:09 IST Report Abuse
arulnath இனிஒன்றும் கிடைக்க போவதில்லை இலங்கை தமிழருக்கு .................
Rate this:
5 members
0 members
13 members
Share this comment
Cancel
T.Indran - Pudukottai,இந்தியா
19-மார்-201306:55:49 IST Report Abuse
T.Indran அமெரிக்க தீர்மானம் வலிமை அற்றது. பத்தோடு பதினொன்று என்ற அளவில் தான் உள்ளது. இதை பெரிதாக எடுத்துக்கொண்டு அலம்பல் செய்வது வெட்டி வேலை.
Rate this:
2 members
1 members
17 members
Share this comment
Cancel
elzhalan - belgium ,யுனைடெட் கிங்டம்
19-மார்-201306:37:54 IST Report Abuse
elzhalan R.subramaniam என்ன சொல்ல வறாரு. இலங்கைல நடந்த போருக்கு இந்திய உதவவே இல்லன்னு சொல்லுறாரு. WAIT பண்ணுங்க. அடுத்த ஆட்சி கண்டிப்ப B J P. அப்புறம் பாருங்க காங்கிரஸ் எவ்வளவு செஞ்சிருக்குன்னு மானம் வீரம் ரோசம் உள்ள தமிழன் 90% இருக்கான் அவன் உடமாட்டன் 10 % காட்டி கொடுத்தவனுக்கும் இருக்கு..... சோனியாவுக்க பரிந்து பேசும் நீங்கள் உங்களுக்கு தெரியாத இலங்கைல் நடந்த போர் இந்தியாவின் துணையோடு தான் நிறைவு பெற்றது என்று உலகத்துக்கு தெரியும் .ராஜபக்ஷே சொல்லுவான் அவன் போர் குற்றவாளியாக மாட்டும் போது இந்தியாதான் செய்ய சொன்னது அதற்க்கு யார் யார் துனைபோனர்கள் என்று ......கூடிய விரைவில் நடக்கும் இறந்தவர்களின் ஆத்மா இறக்கவில்லை ..........
Rate this:
8 members
0 members
58 members
Share this comment
Cancel
s.maria alphonse pandian - CHENNAI-88,இந்தியா
19-மார்-201305:55:36 IST Report Abuse
s.maria alphonse pandian ஆசிய நாடுகளுக்கிடையே ...குறிப்பாக இந்தியா-இலங்கைக்கிடையே பூசலை உண்டாக்கவே அமேரிக்கா இம்முயற்சியை எடுத்ததா? இப்போது மாற்றத்துக்கு யார் காரணம்? சுப்ரமணியசாமி போன்ற உலக தரகர்கள் இருக்கும் வரை இப்படி நடக்கத்தான் செய்யும்...திருத்தப்பட்ட ஒரு புதிய தீர்மானத்தை இந்தியா கொண்டுவரவேண்டும்....இலங்கை அரசே விசாரணை நடத்த வேண்டும் என்பது கேலிக்குரியது...உலகநாடுகளின் நீதி விசாரணை வேண்டுமென்பதே சரியானது....கலைஞர் தொடர்ந்து இந்திய அரசை நிர்பந்திக்க வேண்டும்...
Rate this:
30 members
4 members
42 members
Share this comment
Sivramkrishnan Gk - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
19-மார்-201309:13:05 IST Report Abuse
Sivramkrishnan Gkஇதுல சுப்ரமணியசாமி எப்படி வந்தார். அவர் பேச்சை அவரே கேட்பதில்லை பின்னே வேறு யார் கேட்க போகிறார்கள்....
Rate this:
1 members
0 members
10 members
Share this comment
Baskaran Kasimani - Singapore,சிங்கப்பூர்
20-மார்-201318:10:05 IST Report Abuse
Baskaran Kasimaniதாத்தா எந்த நேரத்திலும் பல்டி அடிக்கலாம். கவனமாக கருத்து சொல்லுங்கள். பின்னர் நீங்களே வருத்தப்படவேண்டி இருக்கும்....
Rate this:
1 members
0 members
1 members
Share this comment
Cancel
மண்புழு - Faraway Land,அன்டார்டிகா
19-மார்-201305:35:02 IST Report Abuse
மண்புழு Justice is going to be buried.........forever?
Rate this:
3 members
0 members
26 members
Share this comment
Cancel
K.Sugavanam - salem,இந்தியா
19-மார்-201305:02:48 IST Report Abuse
K.Sugavanam இதுக்கு தானா இவ்வளவு பில்டப்பு..அமெரிக்க தீர்மானமே என்னன்னு தெரியாம கூவினாறு பெரிசு.அப்புறம் சுதாரிகிட்டு சவுண்ட மாத்தி மாத்தி பேசி குப்புற விழுந்ததை மறைக்க ஆதரவு வாபஸ் டிராமா..தூதனுங்கோ வரலே ஈன்னு பிலாக்கணம்,தூதனுங்கோ வந்தும் பருப்பு வேகலேன்னதும் அவங்க உறுதிமொழி தருவாங்க இங்கர நம்பிக்கையில சொன்னேன் அப்புடீன்னு தான் ஒரு நிமிஷத்துக்கு முன்னால சொன்னதுக்கு சப்பை கட்டு.அப்புறம் நிரூபர்களுக்கு பாடம் வேற எடுத்து..நல்லா கைப்புள்ளை கணக்கா காமெடி செஞ்சிருக்காரு.இவரு விட்ட சவுண்ட அப்புடியே சொல்லிக்கிட்டு மாணவங்க வேற அமெரிக்க தீர்மானத்தை நிறைவேத்துன்னு பத்து நாளா உண்ணாவிரதம் னு ஒரே காமெடி தான்.இதுக்குத்தானா இவ்வளவு கூச்சல் தெட்சிணாமூர்த்தி
Rate this:
53 members
0 members
31 members
Share this comment
Cancel
naagai jagathratchagan - mayiladuthurai ,இந்தியா
19-மார்-201304:52:53 IST Report Abuse
naagai jagathratchagan .... நான் யார் ..நீ யார் ..நாலும் தெரிந்தவர்.... யார்.... யார் .ஊரார் .உறவார்... உற்றார் ... புரியார் ...புரியார்.... பெரியார் ..விதை ஒன்னு விதைத்தார் சொரை ஒன்னு முளைத்தார் ... இருப்பார் ... பழித்தார் .....உறவார் வந்தார்.. அணைத்தார் வெறுத்தார் ...பதவியை ...மறுத்தார் ..விழித்தார் ...பார்த்தோர்..பலரோ . சிரித்தார் ...பகையோ, என நினைத்தார் ......வெறுத்தார்.. வெளியே... வருவேன் என்றார் ...கூட இருந்தோர் ...மலைத்தார் ....விதியோ என விழித்தார் ...படித்தோர் தேர்தல் வருமென்றார் ..பாடம் தரும் என்றார் ...புரிந்தோர் மகிழ்ந்தார் ...
Rate this:
5 members
1 members
31 members
Share this comment
19-மார்-201308:16:49 IST Report Abuse
சொல்லுங்கண்ணே சொல்லுங்கரொம்ப கஷ்டப்பட்டு இருக்கீங்க?............................
Rate this:
0 members
0 members
5 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.