புதுச்சேரி:புதுச்சேரியில், ரவுடி உட்பட, இருவரை அடித்து கொலை செய்த, மர்ம கும்பலை போலீசார் தேடுகின்றனர்.புதுச்சேரி, தட்டாஞ்சாவடியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார், 35; பெயிண்டர். இவர் மீது, கொலை, கொலை முயற்சி, அடிதடி வழக்குகள் நிலுவையில் உள்ளன. சமீபகாலமாக, நாவற்குளம் பகுதியில், குடும்பத்துடன் சதீஷ்குமார் வசித்தார். இவருடன், கலைவாணர் நகரைச் சேர்ந்த, நண்பரான ஸ்ரீகாந்த், 27; வேலை செய்தார்.நேற்று முன் தினம் மாலை, இருவரும் வீட்டிலிருந்து வெளியில் சென்றனர். இரவு முழுவதும் வீடு திரும்ப வில்லை.
மேட்டுப்பாளையம் போக்குவரத்து நகரம் அருகில், கோழிக் கழிவுகள் கொட்டும் இடத்தில், ஸ்ரீகாந்த் அடித்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். அங்கிருந்து, அரை கி.மீ., தூரத்தில், சதீஷ்குமார் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில், கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
டி.நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, இருவரின் உடலை பார்வையிட்டனர். அங்கு எந்த தடயங்களும் கிடைக்கவில்லை. பின், கொலையான இடத்திற்கு அருகிலுள்ள, தமிழக பகுதியான, பட்டானூர் முந்திரி காட்டில் ஆய்வு செய்தனர்.
அங்கு, பைக் ஒன்று அனாதையாக நின்றது. அதே இடத்தில், காலி மது பாட்டில்கள், பெல்ட், கிரிக்கெட் மட்டைகள் கிடந்தன.டி.ஐ.ஜி., சுக்லா, சீனியர் எஸ்.பி. பர்வேஸ் அகமது, எஸ்.பி. பைரவசாமி இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், சதீஷ்குமார் , ஸ்ரீகாந்த் ஆகியோருடன், நான்கு பேர் மது அருந்தியுள்ளனர். அப்போது நடந்த தகராறில், கொலை நடந்தது தெரிய வந்துள்ளது. கொலையானவர்களின் உடலை, இரு வேறு இடங்களில் புதுச்சேரி எல்லையில், போட்டுச் சென்றுள்ளனர். டி.நகர். போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.