கோபிசெட்டிபாளையம்: தாராபுரம் கூட்டுறவு நூற்பாலை முன்னாள் தலைவர் கள்ளிப்பட்டி மணி மகள் திருமண விழா, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் தலைமையில் நேற்று நடந்தது.தாராபுரம் கூட்டுறவு நூற்பாலை முன்னாள் தலைவரும், தி.மு.க., பிரமுகருமான கோபி ல.கள்ளிப்பட்டி மணி (எ) சுப்பிரமணியன், தனபாக்கியம் தம்பதியின் மகள் கற்பகமணி, பொள்ளாச்சி ராஜலட்சுமி - அண்ணாமலை மகன் கார்த்திகேயன் ஆகியோர் திருமண விழா கோபியில் நடந்தது.கள்ளிப்பட்டி மணி வரவேற்றார். முன்னாள் அமைச்சர்கள் பெரியசாமி, சுப்புலட்சுமி ஜெகதீசன், முத்துசாமி, மாவட்ட செயலாளர் ராஜா, நகர செயலாளர் மணிமாறன், சிறுவலூர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பொருளாளர் ஸ்டாலின் தலைமை வகித்து திருமணத்தை நடத்தி வைத்து பேசியதாவது:சீர்திருத்த திருமணம் என்றாலும், தாய் மொழியில் பாடல்கள் எடுத்துரைக்கப்பட்டு, முறைப்படி தமிழ் திருமணமாக, சுயமரியாதை திருமணமாக நடந்துள்ளது. 1967க்கு முன் சீர்த்திருத்த திருமணங்கள் அங்கீகரிக்கப்படவில்லை. 1967ல் அண்ணாதுரை முதல்வராக பொறுப்பேற்ற பின் சீர்த்திருத்த திருமணங்கள் அங்கீகரிக்கப்பட்டது.தமிழ் முறைப்படி திருமணம் நடத்தினால் மட்டும் போதாது. உங்கள் குழந்தைகளுக்கு தமிழ் பெயர் சூட்ட வேண்டும், என்றார்.ஸ்டாலின் மனைவி சாந்தா, முன்னாள் அமைச்சர் முத்தூர் சாமிநாதன், முன்னாள் எம்.பி., இளங்கோவன், லக்கம்பட்டி டவுன் பஞ்சாயத்து தலைவர் நாராயணசாமி, முன்னாள் பொருளாளர் கணேசன், நகர துணை செயலாளர் பழனியம்மாள் மற்றும் பலர் பங்கேற்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.