மாணவர்களை அடக்கினால் போராட்டம் வெடிக்கும்: ஈரோட்டில் வைகோ பேச்சு| Dinamalar

தமிழ்நாடு

மாணவர்களை அடக்கினால் போராட்டம் வெடிக்கும்: ஈரோட்டில் வைகோ பேச்சு

Added : மார் 19, 2013 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஈரோடு: ""தமிழகத்தில் உள்ள கல்லூரி மாணவர்கள், தமிழ் ஈழ பிரச்னைக்காக, ஒரே நேர்கோட்டில், சரியான இலக்கை நோக்கி முறையாக முன்னேறி வருகின்றனர். போலீஸார் மூலம், மாணவர்களை அடக்க நினைத்தால், போராட்டம் வெடித்து திசை மாறும்,'' என, ஈரோட்டில், ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ பேசினார்.ஈரோடு ஈ.வி.என்.,ரோட்டில் உள்ள, ம.தி.மு.க., மாவட்ட தலைமை அலுவலகத்தில், மாணவர்களை சந்தித்து, வைகோ பேசியதாவது:ஈழத்தமிழர் பிரச்னைக்காக, தமிழகத்தில் கல்லூரி மாணவர்கள், பல்வேறு நிலை போராட்டங்களில் ஈடுபடுகின்றனர். இலக்கை நோக்கி முறையாக போராடி வரும், மாணவர்களை தடுக்கும் விதமாக, மதுரை மாவட்டத்தில் சட்டக்கல்லூரி மாணவர் அண்ணாத்துரை என்பவரை, போலீஸ் அதிகாரி திருநாவுக்கரசு, கண்மூடித்தனமாக தாக்கியுள்ளார்.போலீஸ் அதிகாரி திருநாவுக்கரசு மீது, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இலங்கையில் தமிழர்கள் சிந்திய ரத்தமே, இன்று தமிழத்தில் மாணவர்கள் மூலமாக போராட்டமாக மாறியுள்ளது. அரசியல் சாயமின்றி, முன்னேறி செல்லுங்கள், நாங்கள் பின்னால் பக்கபலமாக வருகிறோம். இலங்கைக்கு சுற்றுலாத்துறை மூலமாகவே, வருவாய் கிடைக்கிறது. இலங்கையில், 2006 இந்து கோவில்களை இடித்துவிட்டு, சீதைக்கு கோவில் கட்ட நிதி ஒதுக்கியதாவும், அதற்கு இந்தியாவில் உள்ள, பா.ஜ.வினர், அரசு நிதி ஒதுக்குவதாக தெரிவிக்கின்றனர்.மகளிர் தினத்தில் துவங்கிய மாணவர்களின் போராட்டம், நிச்சயம் ஒரு நாள் வெற்றி பெறும்.இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Cibi Raja - Karur,இந்தியா
20-மார்-201307:14:46 IST Report Abuse
Cibi Raja march forward: capture power
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை