நாமக்கல்: ஜெனிவா மனித உரிமை கவுன்சில் மாநாட்டில், இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி, நாமக்கல் மாவட்டத்தில், கல்லூரி மாணவர்கள், இலங்கை தமிழர் முகாமை சேர்ந்த மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள், உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இலங்கையில், விடுதலைப் புலிகள் மற்றும் அந்நாட்டு ராணுவத்துக்கு இடையே நடந்த இறுதிக்கட்ட போரின் போது, அங்குள்ள தமிழ் மக்கள், கொடூரமான முறையில் கொல்லப்பட்டனர். இதுகுறித்து, ஆவணப் படங்களை, தகுந்த ஆதாரங்களுடன், சேனல், 4 செய்தி நிறுவனம் வெளியிட்டது.அதையடுத்து, தமிழகம் முழுவதும், கல்லூரி மாணவர்கள், அரசியல் கட்சியினர், நாள்தோறும், பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். கல்லூரி மாணவர்களது போராட்டம் தீவிரமடைந்ததையடுத்து, மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து அரசு, தனியார் கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டது.எனினும், கல்லூரி மாணவர்களின் உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டங்கள், மாநிலம் முழுவதும், தொடர்ந்து நடந்து வருகிறது. நாமக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை, நாமக்கல்லில் உள்ள, செல்வம் இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள், அக்கல்லூரி முன், நேற்று காலை முதல், காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை துவக்கியுள்ளனர்.போராட்டதில், இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கை வலியுறுத்தப்பட்டன. மேலும், இலங்கைக்கு எதிராக, ஐ.நா., மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில், இந்தியா தீர்மானம் நிறைவேற்றினால் மட்டுமே, போராட்டம் கைவிடப்படும் என, மாணவர்கள் தெரிவித்தனர். அசம்பாவிதம் தவிர்க்க, உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் இடத்தின் அருகே, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.* நாமக்கல் பி.எஸ்.என். எல்., அலுவலகம் அருகே, தமிழ் மீட்சி இயக்கம் சார்பில், மத்திய அரசைக் கண்டித்து, ஒரு நாள் அடையாள உண்ணாவிதரப் போராட்டம் நடந்தது. சங்க மாநில செயலர் நந்தகோபாலன் தலைமை வகித்தார். துணை தலைவர் சேவியர் முன்னிலை வகித்தார். துணைச் செயலர் கதிரேசன் வரவேற்றார்.மாவட்ட தலைவர் கருப்பண்ணன், போராட்டத்தை துவக்கி வைத்தார். போராட்டத்தின் போது, ஜெனிவாவில் நடந்து வரும், ஐ.நா., மனித உரிமை கவுன்சில் மாநாட்டில், இலங்கைக்கு எதிராக, அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்திற்கு, இந்தியா ஆதரவு தெரிவிக்க வேண்டும் என, வலியுறுத்தப்பட்டது. சங்க நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.* பரமத்தி இலங்கை தமிழர் முகாமைச் சேர்ந்தோர், நேற்று காலை, முகாம் வளாகத்தில், ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது, இறுதிக்கட்ட போரின்போது, இலங்கைக்கு எதிராக, ஐ.நா., மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில், அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்திற்கு, இந்தியா ஆதரவு தெரிவிக்க வேண்டும் என, வலியுறுத்தப்பட்டது.அசம்பாவிதம் தவிர்க்க, அப்பகுதியில், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.