பண்ருட்டி:பண்ருட்டி அடுத்த காடாம்புலியூரில் கோவில் நிகழ்ச்சிக்காக பஸ் நிறுத்த நிழற்குடையை ஆக்கிரமிப்பு செய்து கூத்து நடத்துவதால் பயணிகள் நிற்க முடியாமல் கடும் அவதியடைந்து வருகின்றனர்.பண்ருட்டி அடுத்த காடாம்புலியூரில் (வி.கே.டி.தேசிய நெடுஞ்சாலை) உள்ள பஸ் நிறுத்தம் கடந்த தி.மு.க., ஆட்சியின் போது எம்.பி., நிதியின் கீழ் கட்டப்பட்டது. இந்த ஊரில் இருந்து முத்தாண்டிக்குப்பம், அழகப்பசமுத்திரம், கீழ்மாம்பட்டு, விசூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு டவுண் பஸ்கள், மினி பஸ்கள் இயக்கப்படுகிறது.தினமும் இந்த பஸ் நிறுத்தத்தை 2,000க்கும் மேற்பட்டோர் பயன்படுத்துகின்றனர்.
பயணிகள் நின்று பஸ் ஏற வசதியாக இருந்த பஸ் நிறுத்த நிழற்குடையில் கடந்த 15ம் தேதி துவங்கிய திரவுபதியம்மன் கோவில் தீ மிதி உற்சவத்தையொட்டி இங்கு இரவு நேரத்தில் கூத்து, சொற்பொழிவு, பட்டிமன்றம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. காலை, மதியம் நேரத்தில் வெயிலில் பயணிகள் நிற்க முடியாமல் கடும் அவதியடைந்து வருகின்றனர். கோவில் திருவிழா நடத்த அருகில் இடம் இருக்கும் ஆக்கிரமிப்பு செய்து நடைபெறும் கலைவிழாவிற்கு போலீசாரும் தினமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருவதுதான் வேதனை.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.