Advertisement
சிங்கப்பூரில் வேலை வாங்கி தருவதாக மோசடி தலைமறைவாக இருந்த தம்பதி கைது
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள் : மார்ச் 19,2013,03:33 IST

பல்லாவரம்:சிங்கப்பூரில் வேலை வாங்கி தருவதாக, இளைஞர்களிடம் பல லட்சம் ரூபாய் மோசடியில் ஈடுபட்ட தம்பதியை, போலீசார் கைது செய்தனர்.சென்னை, முகப்பேர், கோல்டன் காலனியைச் சேர்ந்தவர்கள், நூருல் ஹபீஸ், 46, நூருல் நிஷா, 40 தம்பதியர். சில மாதங்களுக்கு முன், அலைபேசி மூலம் பல இளைஞர்களை தொடர்பு கொண்ட இவர்கள், தாங்கள் சிங்கப்பூரில் ஓட்டல் நடத்துவதாகவும், அதற்காக, சென்னையில் இருந்து ஆட்களை, சிங்கப்பூருக்கு அனுப்பி வைப்பதாகவும் கூறினர்.இவர்களின் வார்த்தைக்கு மயங்கிய, வேலை இல்லாத பல பட்டதாரி இளைஞர்களை, சென்னையில், விமான நிலையம் அருகே உள்ள ஒரு ஓட்டலுக்கு அழைத்து, நூருல் அபீஸ் தம்பதி கூட்டம் நடத்தியது. அப்போது, இளைஞர்கள் தங்கள் பாஸ்போர்ட்டை, அவர்களிடம் ஒப்படைத்தனர்.விசா, விமான டிக்கெட் ஆகியவற்றை தயார் செய்துவிட்டு, மீண்டும் அழைப்பதாக, தம்பதி கூறியது. மேலும், இதற்கான செலவாக, 1.80 லட்சம் ரூபாயை தர வேண்டும் எனவும் தெரிவித்தது. இதன்படி, இளைஞர்களை அழைத்து, "சீல்' வைக்கப்பட்ட ஒரு தபாலை கொடுத்து, அதில், விமான டிக்கெட், விசா இருப்பதாக தெரிவித்தனர்.விமான நிலைய வளாகத்தில் இருக்கும், தங்கள் நிறுவன ஊழியரிடம் இந்த தபாலை கொடுத்தால், அவர் அதை பிரித்து, விமான நிலையத்தில் அனைத்து சோதனைகளையும் முடித்து, சிங்கப்பூர் அழைத்து செல்வார் என்றும் கூறி, பணத்தை பெற்றனர்.பணத்தை கொடுத்துவிட்டு, விமான நிலையம் சென்ற இளைஞர்கள், நூருல் ஹபீஸ் கூறியதை போல அங்கு யாரும் இல்லாததால், அதிர்ச்சி அடைந்தனர். தபாலை பிரித்து பார்த்தபோது, தங்கள் பாஸ்போர்ட் மட்டுமே இருந்ததை கண்டு, தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தனர்.இதுகுறித்து, அவர்கள் கொடுத்த புகாரின்படி, பல்லாவரம் போலீசார் வழக்கு பதிந்து, அலைபேசி எண்ணின் அடிப்படையில், தேடுதல் வேட்டை நடத்தினர். நூருல் ஹபீஸ் தம்பதி, முகப்பேரில் தலைமறைவாக இருப்பது தெரிந்தது. போலீசார் நேற்று அவர்களை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (1)
BLACK CAT - Marthandam.,இந்தியா
21-மார்-201310:47:56 IST Report Abuse
BLACK CAT இன்னும் ரவுண்டு கட்ட வில்லையா ...?
Rate this:
0 members
0 members
0 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.