சண்டிகர்:நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பாதுகாவலர் 94 வயதில் மரணமடைந்தார். இந்திய சுதந்திரப்போராட்ட வீரரும், இந்திய தேசிய ராணுவத்தினை நிறுவியருமான நேதாஜி சுபாஷ்சந்திரபோஸின், பாதுகாவலராக இருந்தவர் பட்சிதார்சிங் (94).இவர் அரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர். சுதந்திர போராட்ட தியாகியான இவர் தான் பிறந்த சொந்த ஊரான, அரியானாவின் பதேகாபாத் மாவட்டத்தில் உள்ள மையோந்த் குர்த் கிராமத்தில், வசித்து வந்தார். கடந்த சிலநாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார்.நேற்று இறந்தார். தகவலறிந்த முதல்வர் பூபிந்தர்சிங் ஹூடா, அவருக்கு இரங்கல் தெரிவித்தார். மறைந்த பட்சிதார் சிங்கின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.