Advertisement
"மாஜி' முதல்வர் சவுதாலாவை அரியானா சிறைக்கு மாற்ற முடிவு
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

19 மார்
2013
05:07
பதிவு செய்த நாள்
மார் 19,2013 04:45

புதுடில்லி;டில்லி, திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள, அரியானா முன்னாள் முதல்வர், ஓம் பிரகாஷ் சவுதாலா, அவர் மகன் அஜய் போன்றோரை, அவரவர் சொந்த மாநில சிறைகளில் அடைக்க வேண்டும் என, சிறை நிர்வாகம், அந்தந்த மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதியுள்ளது.ஆசிரியர் நியமன மோசடி தொடர்பாக, பத்தாண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள, அரியானா முன்னாள் முதல்வர், ஓம் பிரகாஷ் சவுதாலா மற்றும் அவர் மகன் அஜய், டில்லி, திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
அது போல், கொலை வழக்கில், தண்டனை பெற்றுள்ள, உத்தர பிரதேசத்தை சேர்ந்த, விஷால் யாதவ் மற்றும் விகாஷ் யாதவ் ஆகியோரும், திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சிறையில் இட வசதி குறைவாக இருப்பதாலும், கைதிகளின் உறவினர்கள் சந்திக்க எளிதாக இருக்கும் என்பதாலும், பிற மாநிலத்தை சேர்ந்தவர்களை, அந்தந்த மாநில சிறைகளில் அடைக்கலாம் என, திகார் சிறை நிர்வாகம், மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு ஆலோசனை வழங்கியது. அதன் அடிப்படையில், மத்திய உள்துறை, அரியானா மற்றும் உத்தர பிரதேச மாநில நிர்வாகங்களுக்கு கடிதம் எழுதிஉள்ளது.பீகார் மாநில பிரபல ரவுடியும், முன்னாள், எம்.பி.,யுமான, பப்பு யாதவ், சமீபத்தில், பீகாரின் பெயூர் சிறைக்கு மாற்றப்பட்டான். உத்தர பிரதேசத்தை சேர்ந்த, முக்தார் அன்சாரி, சமீபத்தில், ஆக்ராவுக்கு மாற்றப்பட்டான் என்பது குறிப்பிடத்தக்கது.




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
யதார்தவாதி வெகுஜன விரோதி - சிராப்பள்ளி,இந்தியா
19-மார்-201305:34:29 IST Report Abuse
யதார்தவாதி வெகுஜன விரோதி இனிமே வீட்ல இருந்து பிரியாணி வரும்.... ரொம்ப சந்தோஷம்......
Rate this:
0 members
0 members
2 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.