சண்டிகார்;"பஞ்சாபில், இளம் பெண் தாக்கப்பட்ட வழக்கில், டி.எஸ்.பி., உட்பட, 10 போலீசாரை, 24 மணி நேரத்திற்குள் இடமாற்றம் செய்ய வேண்டும்' என, காவல் துறைக்கு, அம்மாநில ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.பஞ்சாப் மாநிலத்தில், சில தினங்களுக்கு முன், இளம் பெண் ஒருவர், அம்மாநில போலீசாரால், கடுமையாக தாக்கப்பட்டார். தன்னிடம் தவறாக நடக்க முயன்ற, லாரி ஓட்டுனர் மீது, புகார் கொடுக்கச் சென்ற அப்பெண்ணை, பொது இடத்தில், போலீசார் கடுமையாகத் தாக்கியது, தொலைக் காட்சிகளில் வெளியானது.இதுதொடர்பாக, விசாரணை நடத்த, மாநில முதல்வர் பிரகாஷ் சிங் பாதல், போலீஸ், டி.ஜி.பி.,க்கு உத்தரவிட்டார். அந்த விசாரணையின் அடிப்படையில், இரு போலீசார், "சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.
அதேநேரத்தில், இச்சம்பவம் தொடர்பாக, பத்திரிகைகளில் வெளியான செய்தியையே, மனுவாக ஏற்று, விசாரணை நடத்திய சுப்ரீம் கோர்ட், "போலீசாரால் தாக்கப்பட்ட பெண் பயங்கரவாதியா?' என, கடிந்து கொண்டது.இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பான வழக்கை விசாரித்த, பஞ்சாப் மற்றும் அரியானா ஐகோர்ட், "டி.எஸ்.பி., ஒருவர் உட்பட, 10 போலீசாரை, 24 மணி நேரத்திற்குள் இடமாற்றம் செய்ய வேண்டும்' என, மாநில காவல் துறைக்கு உத்தரவிட்டது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.