புதுடில்லி: "இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானத்தில், மத்திய அரசு திருத்தம் செய்யாவிட்டால், ஐக்கிய முற்போக்கு கூட்டணியில், தி.மு.க., நீடிக்காது' என, தி.மு.க., மிரட்டல் விடுத்துள்ளதை அடுத்து, இதுகுறித்து, காங்., - எம்.பி.,க்களுடன், அக்கட்சித் தலைவர் சோனியா, இன்று, முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார். இதில், இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில், மத்திய அரசின் நிலைப்பாடு குறித்த முடிவை, அவர் அறிவிப்பார் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கையில் 2009-ம் ஆண்டு நடந்த இறுதிக் கட்ட போரின்போது, இலங்கை ராணுவம், பெருமளவில் போர்க் குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக, ஐ.நா., மனித உரிமை கவுன்சிலில், இலங்கைக்கு எதிராக, அமெரிக்கா தீர்மானம் கொண்டு வர உள்ளது."இலங்கையில் நடந்த படுகொலையை, இனப்படுகொலையாக அறிவிக்க வேண்டும். போர்க்குற்றம் பற்றி சர்வதேச விசாரணை தேவை என்ற, இரு கோரிக்கைகளை, பார்லிமென்டில் தீர்மானமாக நிறைவேற்ற வேண்டும் என, கருணாநிதி நேற்று திடீரென புதுக் கோரிக்கையையும் விடுத்தார். இல்லையெனில், மத்திய அமைச்சரவையிலிருந்து, தி.மு.க., விலக நேரிடும்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி, மிரட்டல் விடுத்துள்ளார். எனினும், இது தொடர்பாக, மத்திய அமைச்சர்கள் சிதம்பரம், அந்தோணி, குலாம்நபி ஆசாத் ஆகியோர் கருணாநிதியை சென்னையில் சந்தித்து சமதானப்படுத்தும் முயற்சியில் இறங்கினர். இதில் தோல்வி ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன். இதனால், அதிருப்தி அடைந்த அவர், "இலங்கைக்கு எதிராக, ஐ.நா., மனித உரிமை கவுன்சிலில், அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தில், மத்திய அரசு திருத்தம் செய்யாவிட்டால், காங்கிரஸ் கூட்டணியில், தி.மு.க., நீடிக்காது' என மிரட்டல் விடுத்து வருகிறார்.
இன்று முக்கிய முடிவு
இதையடுத்து, இந்த விவகாரத்துக்கு முக்கியத்துவம் அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இன்று டில்லியில், காங்கிரஸ் எம்.பி.,க்கள் கூட்டம் நடக்கிறது. இதில், இலங்கை விவகாரம் குறித்து, காங்கிரஸ் எம்.பி.,க்களுடன், சோனியா, கலந்துரையாடி, அவர்களின் கருத்துக்களை கேட்க முடிவு செய்துள்ளார்.இதன் பின்னரே இலங்கைக்கு எதிரான தீ்ர்மானத்தில் கருணாநிதியின் முடிவு குறித்து ஆலோசனை நடத்தி இந்தியாவின் நிலைப்பாடு என்ன என்பது குறித்த முடிவு தெரியும்.
இதற்கிடையே அமெரிக்க தீ்ரமானம் தொடர்பாக ஆலோசிப்பதற்காக, ஐ.நா.,வின் இந்திய பிரதிநிதி, திலீப் சின்காவுக்கு, டில்லி வரும்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவர், இன்று வருவார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
சுயநலம் பிடித்த அரசியல்வாதிகளே 8 கோடி தமிழர்களும் போராடிக்கிட்டு இருக்காங்க. அவங்களோட போராட்டும் அவங்களோட கோரிக்கைகலேல்லாம் உங்களுக்கு தெரியல. ஆனால் கூட்டணில இருக்கிற ஒருத்தரோட கோரிக்கை மட்டும் உங்களுக்கு பெரிசா தெரிகிறது...அப்படி நீங்கள் அந்த ஒருவருக்கு சாதகமாக முடிவு எடுத்தாலும் அது உங்களுடைய சுயநலத்திர்க்கே...
அங்க தான் அந்த தீர்மானத்தில் ஒன்னும் இல்லாமல் செய்து விட்டாரே அந்த முக்கிய நபர். உங்களுக்கு நிச்சயம் கடுமையான தண்டனை இங்கே கிடைக்கும். எனவே அவர்கள் ஒட்டு போட்டாலும் இந்த தீர்மானமே வேஸ்ட். ஈழ மக்களுக்கு ஐரோப்பிய நாடுகள் தான் இனி உதவி செய்யவேண்டும். அவர்களும் கை விட்டால் அந்த கடவுள் ஒருவர் தான் அவர்களை காப்பாற்ற வேண்டும்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.