லண்டன் : மூலிகை மருந்துகள் இந்தியாவில் ஆயிரக்கணக்கானோருக்கு சிறுநீரக கோளாறு மற்றும் கல்லீரல் புற்றுநோய்களை ஏற்படுத்துவதாக சமீபத்திய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆசிய மூலிகை மருந்துகள் குறித்து பிரிட்டன் ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் இந்த திடுக்கிடும் உண்மை கண்டறியப்பட்டுள்ளது. லண்டனில் உள்ள கிங்ஸ் கல்லூரி ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில், ஆஸ்துமா, உடல் மெலிவு மற்றும் மூட்டு வலி உள்ளிட்டவைகளுக்காக பக்க விளைவை ஏற்படுத்தாது என எண்ணி ஆசிய நாடுகளைச் சேர்ந்த மக்கள் உட்கொள்ளும் மூலிகை மருந்துகள் புற்றுநோயை ஏற்படுத்தும் தன்மை கொண்டதாக உள்ளதாக கண்டுபிடித்துள்ளனர். இந்த மருந்துகளுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
இந்த விதமான செய்திகளை வெளியிடும் பொது ஆசிரியர் தயவு செய்து முழு விவரத்துடன் வெளியிடவும். இது ஒரு பித்தலாட்டமான ஆய்வு. சித்தா மற்றும் ஆயுர் வேதா மனிதனுக்கு தீங்கு விளைவிக்காத பக்க விளைவு இல்லாதது. இங்கே கருத்து கூரிய ஒரு நண்பர் சொன்னது போல இராசயன மருந்துகளால் விளைய வைக்கப்பட்ட மூலிகைகளை பயன்படுத்தி இருப்பர்.
'அன்பே சிவம்' திரைப்படத்தில் கமலஹாசன் ஒரு பாடலில் நடித்தது போல்.. 'ஏகாதிபத்திய ஆளுமை' தான் 'இந்த' ஆராய்ச்சியின் பின்புலத்தில் உள்ளது. புற்றுநோய்க்கு மூலிகை மருந்துகள் தான் தீர்வாகிறது. விஷயம் இல்லாமலா அமேரிக்க 40,000 மூலிகைகளை anti - cancer என ஆய்ந்து உரிமைப் பெற்றுள்ளது?? மூலிகை மருந்துகளை புறம்தள்ளிவிட்டு, அதற்கு பின் அந்த முலிகைகளையே காப்சூல்-களாக நமக்கே விற்பனை செய்வார்கள். anti cancer herbs என்று Google செய்து பாருங்கள்.. ஆயிரக்கணக்கில் உலகளாவிய விஞ்ஞான ஆய்வறிக்கைகள் வருகின்றன
உண்மையை மறைக்கலாம், மாற்ற முடியாது
இனியாவது... இது போன்ற 'வெட்டி' ஆய்வறிக்கைகளை சரிபார்த்து பின்னர் சமுதாய பொறுப்புடன் வெளியிட வேண்டுகிறேன்.
Health care industry is the biggest industry in the world . Diseases are keep on growing day by day ,expense for health care is growing day by day.India and China is the biggest market, Time to invest/research more an native medicines than allopathy. If anyone found the link to report please publish the link.
பிராடு பயலுங்க... இப்படிதான் கஷ்ட்டப்பட்டு தயாரிக்கிற இயற்க்கை உரங்கள பயன்படுத்திக்கிட்டு இருந்த எங்ககிட்ட, ரசாயன உரத்த காட்டி வித்த காட்டி, ரொம்ப சுலபம், அப்படியாக்கும் இப்படியக்குன்னு பில்ட் அப் கொடுத்து, எனக்கிட்ட வித்து காசு பாத்துட்டு போயிட்டீங்க. அது கூட பரவாயில, ஆனா, இப்ப வச்சீங்க பாருங்க ஆப்பு அதாவது, எங்களோட உணவு பொருட்கள, உங்க நாட்டுல இறக்குமதி செய்ய தடைன்னு சொல்லுறீங்க, காரணம் கேட்டா, நீங்க ரசாயன உரத்த பயன் படுத்துறீங்க, அது எங்க மக்கள் உடம்புக்கு கெடுதல். இது எப்படி இருக்கு தெரியுமா,,, வழியில போற ஆசாரிய கூப்பிட்டு எனக்கு ஒரு ஆப்பு வைன்னு சொன்ன மாதிரி இருக்கு... இப்படிதான் பல கெட்ட விசயங்கள எங்ககிட்ட தினுசுட்டீங்க. இதுக்கு காங்கிரெஸ் அரசு முழு ஆதரவு கொடுக்குது உங்களுக்கு... ஏன்னா இந்தியர்கள் எல்லாம் பொறம்போக்கு தானே..
இது மேல் நாட்டினரின் சதிச் செயல் ஆகும். அவர்கள் தயாரிக்கும் அவர்களின் அலோபதி மருந்துகளை உட்கொண்டால் தான் பக்க விளைவுகள் உண்டாகும். இதை அவர்களே உணர்ந்து கொண்டுள்ளனட் இருப்பினும் பக்க விளைவுகள் இல்லாத நம் மூலிகை மருந்துகளின் வியாபாரத்தினை இல்லாதாக்கவே அவ்வாறு தவறான செய்திகளை வெளியிடுகின்றனர். அவர்கள் நாட்டினர் தயாரிக்கும் பாஸ்ட் பூட் மற்றும் பல பொருட்களை உண்பதால் தான் புற்று நோய் போன்றவை உருவாகுகிறது அலோபதி மருத்துவர்களே கூறும்போது அவர்களின் தயாரிப்பின் விற்பனையினை அதிகரிக்கவே இது போன்ற புளுகு அறிக்கையினை வெளியிடுகின்றனர்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.