E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
ஆளில்லா விமானம் மூலம் இந்திய பாதுகாப்பு ஏற்பாடுகளை உளவு பார்க்கிறது பாகிஸ்தான்
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

19 மார்
2013
09:00
பதிவு செய்த நாள்
மார் 19,2013 08:47

ஜய்சல்மர் : ஆளில்லா விமானம் மூலம் இந்தியாவில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் ராணுவ நடவடிக்கைகளை பாகிஸ்தான் தொடர்ந்து கண்காணித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

பாக்., உளவு நடவடிக்கை :



ஜசோஸ் எனப்படும் ஆளில்லா விமானத்தை பயன்படுத்தி இந்தியாவில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள், ராணுவ நடவடிக்கைகள் பாகிஸ்தான்-ராஜஸ்தான் இணையும் சர்வதேச எல்லை பகுதி ஆகியவற்றில் இந்தியாவின் நடவடிக்கைளை பாகிஸ்தான் உளவு பார்த்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக இந்த கண்காணிப்பை பாகிஸ்தான் தீவிரப்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த ஆளில்லா விமானங்கள் கண்காணிக்கும் இந்திய பகுதிகள் இரவு நேரங்களில் சிவப்பு நிற வெளிச்சத்தால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளதாகவும், அங்கு அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு படைகள் குறித்து ஆலோசனையும் நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இரவு மட்டுமின்றி பகல் பொழுதிலும் இந்த ஆளில்லா விமானம் செயற்கை புகை மூட்டத்தை ஏற்படுத்தி அதன் பின்னணியில் இருந்து தொடர்ந்து தனது உளவு வேலையை செய்து வருகிறது.இந்த உளவு விமானங்கள் பர்மர், ஜய்சல்மர், பிகானர் மற்றம் ராஜஸ்தானின் கங்காநகர் உள்ளிட்ட பகுதிகளில் தனது கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளது.

பாக்.,க்கு உதவும் நாடுகள் :



கடந்த சில ஆண்டுகளில் இந்தியா மீதான கண்காணிப்பை பாகிஸ்தான் தீவிரப்படுத்தி உள்ளதை நம்ப தகுந்த தகவல்கள் உறுதி செய்துள்ளது. பாகிஸ்தானின் இந்த உளவு நடவடிக்கைக்கு அமெரிக்காவும், இத்தாலியும் உதவி செய்து வருவதாக அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த உளவு விமானங்கள் 1500 மீட்டர் முதல் 2000 மீட்டர் வரையிலான உயரத்தில் இருந்து சர்வதேச எல்லையில் உள்ள 500 முதல் 700 யார்டு பரப்பளவை கண்காணிக்கும் திறன் கொண்டவையாகும். அல்ட்ரா மாடர்ன் திறன் கொண்ட கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ள இந்த ஆளில்லா விமானங்கள் இந்தியாவில் பல கிலோ மீட்டர்கள் வரை கண்காணித்து புகைப்படம் எடுக்கும் திறன் கொண்டதாகும். கம்ப்யூட்டர் செயல்பாட்டுடன் இணைக்கப்பட்டுள்ளதால் 25 முதல் 30 கிலோமீட்டர் தூரத்தில் இருந்து கூட இந்த விமானங்களை இயக்கலாம்.

அமைதி காக்கும் இந்தியா :



இந்திய எல்லை பாதுகாப்பு படையும் பாகிஸ்தானின் ஆளில்லா விமானங்களின் உளவு நடவடிக்கைகளை கண்காணித்து கொண்டு வருகிறது. இருப்பினும் அந்த ஆளில்லா விமானங்கள் பாகிஸ்தான் எல்லைக்குள் பறந்து கொண்டு இருப்பதால் இந்திய படைகளால் எவ்வித நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை. இந்தியாவின் மூத்த ராணுவ அதிகாரிகளும் இது குறித்து பாதுகாப்பு படைகளுக்கு அறிவுறுத்தி வருகின்றனர். இது குறித்து கருத்து தெரிவித்த பாதுகாப்பு அதிகாரி கர்னல் எஸ்.டி.கோஸ்வானி, பாதுகாப்பு படையினர் பாகிஸ்தானின் நடவடிக்கைளை கண்காணித்து வருவதாகவும், விமான மூலம் ஏதும் அத்துமீறல்களை பாகிஸ்தான் மேற்கொண்டால் அதற்காவ உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், நாட்டின் பாதுகாப்பிற்கு ‌தேவையான ஏற்பாடுகள் விதிகளின் அடிப்படையில் செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்தள்ளார்.

ஜசோசின் செயல்திறன் :



பாகிஸ்தானின் சாடுமா நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட ஆளில்லா விமானத்திற்கு ஜசோஸ் என பெயரிடப்பட்டுள்ளது. ரிமோர்ட் மூலம் இயக்கப்படும் இந்த விமானம் 20 கிலோ எடை கொண்டதாகும். 10,000 அடி உயரம் வரை பறக்கும் திறன் கொண்ட இந்த விமானம் 100 கிலோ மீட்டர் தூரத்தை 4 முதல் 5 மணி நேரத்தில் கடக்கும் திறனுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. 2004ம் ஆண்டு பாகிஸ்தான் விமானப்படையால் தயாரிக்கப்பட்ட இந்த உளவு விமானம் 2009ம் ஆண்டு சோதனை செய்யப்பட்டது. இந்த விமானத்திற்கு தேவையான உபகரணங்களை 2003ம் ஆண்டு இத்தாலியிடம் இருந்து பாகிஸ்தான் வாங்கி உள்ளது.





Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (19)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
20-மார்-201312:14:51 IST Report Abuse
Nallavan Nallavan தங்களது ஊழல்களினின்றும் சாமான்ய இந்தியக் குடிமகனைத் திசை திருப்பத்தான் இந்திய ஆட்சியாளர்கள் (ஏன் பாகிஸ்தானிய ஆட்சியாளர்களும் கூட) இப்படி அவிழ்த்து விடுகிறார்கள் என்று ஏற்கனவே எனது பாக் நண்பர்கள் கூறியுள்ளனர் .... உண்மை என்னன்னு தெரியலை ....
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
Cancel
Manidhan - India,இந்தியா
20-மார்-201306:40:24 IST Report Abuse
Manidhan பாகிஸ்தானும் சீனாவும் நமக்கு எதிரிகள் தான். ஆனால் அமெரிக்காவும் அதை ஆதரிக்கும் காங்கிரஸ் பிஜேபி நமது துரோகிகள். தேவை இருந்தால் இவர்கள் என்ன வேண்டும் என்றாலும் செய்வார்கள். உண்மையான தேச பக்தி கொண்ட கோடிக்கணக்கில் சொத்து இல்லாத ஜ்யோதி பாஸு (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்) போன்ற ஒரு பிரதமர் நமக்கு தேவை.
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
Cancel
kumar - chennai  ( Posted via: Dinamalar Android App )
20-மார்-201300:01:48 IST Report Abuse
kumar ellaஎல்லாவறறிலுமே லஞ்சம் வாங்கிர எல்லா பொருள்கலிலுமே கட்டிங் நாடு உருப்பட்டமாதி்ரிதான் டெல்லில இருகிரவன்க எல்லாத்தையும் ஒரேடியா போட்டு தள்ளுணாத்தான் சரிபடுவான்க
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
Cancel
vimarsagan - coimbatore  ( Posted via: Dinamalar Android App )
19-மார்-201312:46:32 IST Report Abuse
vimarsagan மந்தி்ரி என்ன சொல்லுவான் தெரியுமா நிலைமையை மத்தி்ய அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது
Rate this:
0 members
0 members
31 members
Share this comment
Cancel
siruppanikoothan - canberra ,ஆஸ்திரேலியா
19-மார்-201312:34:50 IST Report Abuse
siruppanikoothan ஆயிரம் ரூபா கொடுத்தால் நம்ம நாட்டில் அங்கு வேலை செய்யும் அதிகாரிகளே வீடியோ படம் எடுத்து கொடுப்பாங்க ஏனென்றால் இந்த்தியாகாரனுவோ ரெம்ப நல்லவனுங்க
Rate this:
0 members
0 members
45 members
Share this comment
Cancel
Raj - Chennai,இந்தியா
19-மார்-201312:04:01 IST Report Abuse
Raj இந்திய பாதுகாப்பு அமைப்புகள் கோமாவில் உள்ளதா? எந்த பாதுகாப்பு உபகரணம் வாங்கினாலும் கட்டிங் ... வாங்கறதுக்கு 5-10 வருஷம் ... விளங்கிடும் ... வருஷத்துக்கு ஒரு செயற்கைக்கோள் அனுப்பினால் மட்டும் பத்தாது இந்தியா 2020 இல் வல்லரசு ஆகிவிடும் என்று ஒருத்தர் கூறிக்கொண்டு இருக்கிறார் ஐயோ பாவம்
Rate this:
4 members
0 members
23 members
Share this comment
Cancel
E Sreekanth - singapur,சிங்கப்பூர்
19-மார்-201311:58:29 IST Report Abuse
E Sreekanth ஏன் இந்தியாவிடம் இந்த ஆள் இல்லாத விமானம் இல்லையா? இல்லையென்றால் செய்ய வேண்டியது தானே.. ? அதை விடுத்தது புலம்பல் ஏன்?.....
Rate this:
0 members
0 members
26 members
Share this comment
Cancel
sasi, packottuvilai - vashafaru,மாலத்தீவு
19-மார்-201311:20:01 IST Report Abuse
sasi, packottuvilai நாளுக்கு ஒரு satellite அனுப்பி என்ன பிரயோஜனம் ? ராணுவத்துக்கு தேவை ஆனதை செய்ய இந்தியாவிற்கு பணத்தட்டுப்பாடு . பாவம் இந்தியன் ஜவன்மார். மொத்தத்தில் இந்தியா இஸ் zero
Rate this:
5 members
0 members
19 members
Share this comment
Cancel
Asokaraj - Doha,கத்தார்
19-மார்-201311:00:49 IST Report Abuse
Asokaraj இது குறித்து கருத்து தெரிவித்த பாதுகாப்பு அதிகாரி கர்னல் எஸ்.டி.கோஸ்வானி, பாதுகாப்பு படையினர் பாகிஸ்தானின் நடவடிக்கைளை கண்காணித்து வருவதாகவும், விமான மூலம் ஏதும் அத்துமீறல்களை பாகிஸ்தான் மேற்கொண்டால் அதற்கான உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், நாட்டின் பாதுகாப்பிற்கு ‌தேவையான ஏற்பாடுகள் விதிகளின் அடிப்படையில் செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்தள்ளார்.- அதாவது தும்பை விட்டு வாலை பிடிப்பானுங்களாம். எப்படியோ சீக்கிரமா இந்தியாவை சீனாவிடமோ, பாகிஸ்தானிடமோ ஏன் அவ்வளவு தூரம் ஸ்ரீலங்காவிடமோ வித்துட்டா நாமளும் இந்த இந்திய ராணுவம், இத்தாலி சனியன், மண்ணு என்று சொல்லிக் கொண்டிருக்காமல் நம்ப வேலையை பாத்துக்கிட்டு இருக்கலாம்.
Rate this:
0 members
0 members
25 members
Share this comment
Cancel
Tamilarasu Rajakkili - jeddah,சவுதி அரேபியா
19-மார்-201310:54:18 IST Report Abuse
Tamilarasu Rajakkili நமது ராணுவம் இதுபோன்ற செய்திகளை வெளியில் சொல்வதே வெட்கக் கேடான காரியம்..எதிரி நம்மை கண்டு பயப்படுகிறான் என்பதை கூட வெளியில் சொல்ல கூடாது... சில முட்டாள்கள் விவரமில்லாமல் வெளியிடுவார்கள்.. அவர்கள் தான் அந்நிய சக்திகளின் உளவாளிகள்... எனவே நம்முடைய ராணுவ காரியங்கள் ரகசியமாக இருக்க வேண்டும்...
Rate this:
2 members
0 members
20 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.