சென்னை: இலங்கை தமிழர் பிரச்னையில் ஐ.மு., கூட்டணியிலிருந்து தி.மு.க விலகிக்கொள்வதாக அக்கட்சி தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார். அவர் இன்று அளித்த பேட்டியில் மத்திய அமைச்சர்கள் உடனடியாக ராஜினாமா செய்வார்கள். மத்திய அரசுக்கு வெளியில் இருந்தும் ஆதரவில்லை. இந்த பிரச்னையில் தி.முக.., கொடுத்துள்ள யோசனைகளை மத்திய அரசு ஏற்கும் பட்சத்தில் இந்த முடிவை வாபஸ் பெறுவோம் என்றார்.
சொல்வதற்கு ஒன்றுமில்லை:சோனியா ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்து விலகுவதாக திமுக அறிவித்தது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியாவிடம் கருத்து கேட்கப்பட்டது. அது குறித்து பேசிய அவர் சொல்வதற்கு ஒன்றுமில்லை என தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல் தொடர்பாக ஐ.நா., மனித உரிமை மீறல் சபையில் தீர்மானம் கொண்டு வந்துள்ளது. இந்த தீர்மானம் வரும் 21ம் தேதி ஓட்டெடுப்புக்கு விடப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக பல நாடுகள் ஆதரவு தெரிவிக்கப்படும் என கூறப்படுகிறது. இந்த தீர்மானம் தொடர்பாக இந்தியாவின் நிலை இன்னும் அறிவிக்கப்படவில்லை.
இலங்கை தமிழர்கள் மீதான தாக்குதலை போர்க்குற்றம், இனப்படுகொலை என, அறிவிக்க வேண்டும் என்ற திருத்தத்துடன், ஐ.நா. மனித உரிமை அமைப்பில், அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை மத்திய அரசு ஆதரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா ஆகிய இருவருக்கும், தனித்தனியாக தி.மு.க., தலைவர் நேற்று முன்தினம் கடிதம் எழுதினார்.இலங்கைக்கு எதிரான, அமெரிக்க தீர்மானத்தில் மத்திய அரசு திருத்தம் செய்யாவிட்டால், ஐ.மு., கூட்டணியில் தி.மு.க., நீடிப்பது சந்தேகம் என, கருணாநிதி மிரட்டல் விடுத்தார்.
இதனையடுத்து மத்திய அமைச்சர்கள் சிதம்பரம், அந்தோணி, குலாம் நபி ஆசாத் ஆகியோர் நேற்று சென்னையில் கருணாநிதியை சந்தித்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர் மத்திய அமைச்சர் குலாம் நபி ஆசாத் கூறுகையில், கருணாநிதியின் கோரிக்கை குறித்து பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா ஆகியோரிடம் எடுத்துச்சொல்வோம். அவர்கள் இது குறித்து இறுதி முடிவெடுப்பார் என கூறிவிட்டு சென்றார். இதனால் இந்த பேச்சுவர்த்தையில் எந்தவித முடிவும் எடுக்கப்படவில்லை. இலங்கை தீர்மானம் தொடர்பாக பார்லிமென்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என கருணாநிதி கூறியுள்ளார்.
கேள்வி நேரத்தை ரத்து செய்ய நோட்டீஸ்: இதனிடையே இன்று காலை தி.மு.க., எம்பி.,க்கள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் இலங்கை தமிழர் பிரச்னை தொடர்பாக விவாதிக்கப்பட்டது. பின்னர் இந்த பிரச்னை தொடர்பாக பார்லிமென்டில் கேள்வி நேரத்தை ரத்து செய்ய நோட்டீஸ் கொடுப்பது என முடிவு செய்யப்பட்டது.
இத்தாலி கடற்படை விவகாரம் தொடர்பாக சோனியா கூறுகையில், கடற்படை வீரர்களுக்கு வழங்கப்பட்ட சலுகை போல் எந்த நாட்டிலும் யாருக்கும் வழங்கப்பட்டதில்லை. இந்த விவகாரம் தற்போது சுப்ரீம் கோர்ட்டில் உள்ளது. சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுக்கு கட்டுப்படுவோம் என கூறியுள்ளார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
அடங்காபிடாரி அண்ணன எப்படி கவுக்கலாம்னு ஒரு தம்பி கணக்கு போட்டானாம்.. அண்ணனிடம் உள்ள அந்த பதவிய பறிச்சு விட்டா அடக்கிடலாம் என்று தம்பியின் அல்லகைகள் ஆலோசனை கூற , தம்பி அப்பாருவிடம் போயி கவுதுருங்கன்னு அடாவடி கோரிக்கை வைக்க , " இளையவனே ..இனியவனே ...காலம் கனியும் மகனே .. ஒரே கல்லில் இரு மாங்காய் அடிக்கலாம் மகனே " என்று சொல்லி வைக்க, அந்த நாளும் கனிந்தது.. இதோ ஒரே கல்லில் இருமாங்காய்.. அண்ணனின் இருந்த ஒரே பதவியையும் பறிச்சாச்சு.. இலங்கை தமிழருக்கு மிக பெரிய ? உதவியும் பண்ணியாச்சு.. இனிமேல் இலங்கை தமிழர் காலம் முழுதும் தேன்மழையில் நனைவர்... இந்த கதையில் முட்டாள்கள் யார் ? [ காங்கிரசா? ] அல்லது சிதம்பர குலாம் அந்தோணி க்களா? [ அல்லது ] இலங்கை தமிழருக்காக ரொம்ப லேட்டா, ஆனா லேட்டஸ்டா / வேஸ்டா போராடிய மாணவ செல்வங்களா? [ அல்லது ] மறுபடியும் வழக்கம் போல அதே இலங்கை வாழ் இலங்கை தமிழர்களா? ...
இங்கு எழுத பல கோடி வார்த்தைகள் உள்ளது, ஆனாலும் ஒன்றை மட்டும் பதிவு செய்கிறேன். 2 லட்சம் உயிர்களை கொண்டு ஒரு இனத்தையே அழித்து வாழ்பவனையும் உயிரோடு வாழவிடாமல் செய்து நடுத்தெருவில் மானம் கெட்ட பிச்சைக்காரர்களாக மாற்றி எல்லாம் அடங்கிய பிறகு கேடுகெட்ட மானிடா தமிழர்குல மக்களே உங்களுக்கு ஏன் தீரம் வீரம் எல்லாம். செத்தவனுக்கு இரண்டு ஆண்டுகள் கழித்து யார் தெவஷம் செய்வது என்று போட்டி, தமிழன் என்று சொல்ல வெட்கப்பட்டு கூனிகுறுகி நிற்கிறேன்
இவரின் இந்த நாடகம் கூட ஏதோ ஈழப்பிரச்சினைக்காகதான் என்று நாம் நம்பினோமானால் நாம்தான் முட்டாள்.. இவர் இப்பொழுது இந்த ஈழப்பிரச்சினை, மாணவர்கள் பிரச்சினையை ஒரு கேடயமாகபயன்படுத்தி தன் குடும்பம் கட்சி சார்ந்த பிரச்சினைக்களைத்தான் நிறைவேற்றி இருக்கிறார்...இது போன்ற ஒரு குணம் கொண்ட ஒரு தலைவரை நான் இதுவரை பார்த்ததில்லை... தமிழினத்திற்கு இவர் ஒரு சாபக்கேடு...
This Move from Mr.karuna is useless...he should have taken this decision when Prabakarn & lots of tamil peoeple were ed......that time he was silent and now for the coming 2014 elections he is playing drama.....my kind request to tamilnadu people is please do not belive Mr.Karuna. He is a BEST Actor.
Until Congress Govt. is supporting Srilankan Govt in UN, it will continue. Not only in Srilanka, in future in Tamil Nadu also. Now our Congress Govt. removed LTTE and allowed China to put their Military Base in Triconamalai, Srilanka to attack Tamil Nadu before Delhi. Now it has become a threat to our National Security

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.