சமாதான முயற்சி:
இதையடுத்து, அவரை சமாதானப்படுத்தும் வகையில், நேற்று காங்., கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர்களான, சிதம்பரம், அந்தோணி மற்றும் குலாம் நபி ஆசாத் ஆகியோர், கருணாநிதியைச் சந்திக்க, நேற்று, சென்னை வந்தனர்.
அவர்களுடன், இரண்டு மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்திய கருணாநிதி, "இலங்கையில், நடந்த படுகொலையை, இனப் படுகொலையாக அறிவிக்க வேண்டும்; போர்க் குற்றம் பற்றி, சர்வதேச விசாரணை தேவை என்ற இரு கோரிக்கைகளை, பார்லிமென்ட்டில் தீர்மானமாக நிறைவேற்ற வேண்டும்' என, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசிடம், திடீர் கோரிக்கை வைத்தார்.
பின், செய்தியாளர்களிடம் பேசியபோது, "எங்கள் இரு கோரிக்கைகளை அவர்களிடம் தெரிவித்துள்ளோம். அவர்களும் ஒப்புதல் அளித்துள்னர். இலங்கை தமிழருக்கு, நாங்கள் நினைத்ததெல்லாம் நடந்தால் தான், இலங்கைத் தமிழர் பிரச்னையில், இறுக்கம் தளர்ந்ததாக அர்த்தம்' என, பொத்தம் பொதுவாகப் பேசினார்.
திடீர் அறிவிப்பு:
இன்று காலை, திடீரென, கட்சியின் முக்கிய உறுப்பினர்களுடன் பேசிய கருணாநிதி, மத்திய அரசுக்கு, தி.மு.க., அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக, அறிவித்தார்.
இனி, எந்த காலத்திலும் கூட்டணி இல்லை: பின், தொடர்ந்து கேள்வி எழுப்பிய நிருபர்களிடம், "கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள், இன்றோ, நாளையோ, தம் பதவிகளை ராஜினாமா செய்வர்' என்றும் அறிவித்தார். "காங்கிரசுடன் இனி, எந்த காலத்திலும் கூட்டணி இல்லை' என்றும் அறிவித்துள்ளார்.
தி.மு.க.,வின் ஆதரவு வாபஸ் வாங்கப்பட்டாலும், மத்திய அரசுக்கு போதுமான அளவு எம்.பி.,க்கள் ஆதரவு உள்ளதால், மத்திய அரசு கவிழாது என்று, காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
சோனியா கருத்து:
இது குறித்து சோனியா கூறுகையில், இது குறித்துசொல்வதற்கு ஏதும் இல்லை என்றார். மத்திய அமைச்சர் சித்ம்பரம் கூறுகையில், தி.மு.க.,வின் இந்த முடிவால் மத்திய அரசுக்கு எவ்வித ஆபத்தும் இல்லை என்றார். தி.மு.க.,வின இந்த முடிவை வரவேற்பதாக கம்யூனிஸ்ட் தலைவர் தா.பாண்டியன் தெரிவித்தார்.
கேள்வி நேரத்தை ரத்து செய்ய நோட்டீஸ்: இதனிடையே இன்று காலை தி.மு.க., எம்பி.,க்கள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் இலங்கை தமிழர் பிரச்னை தொடர்பாக விவாதிக்கப்பட்டது. பின்னர் இந்த பிரச்னை தொடர்பாக பார்லிமென்டில் கேள்வி நேரத்தை ரத்து செய்ய நோட்டீஸ் கொடுப்பது என முடிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, இலங்கை விவகாரம் தொடர்பாக சோனியா கூறுகையில், மனித உரிமை மீறலுக்காக தொடர்ந்து குரல் கொடுப்போம். மனித உரிமை மீறல் தொடர்பாக சுதந்திரமான விசாரணைக்கு தொடர்ந்து வலியுறுத்துவோம் என கூறியுள்ளார். இதனிடையே, ஐ.நா., மனித உரிமை மீறல் விவகாரத்தில், இந்தியாவில் நிலையை விளக்குவதற்காக, ஐ.நா., மனித உரிமை மீறல் அவையின் இந்திய பிரதிநிதி திலிப் சின்ஹாவை டில்லி வருமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
அப்பாடி கழுத்தை பிடித்திருந்த திமுக பாம்பு ஒழிந்துவிட்டது. இனி காங்கிரஸ் நிம்மதியாக மூச்சு விடலாம். இனி எக்காலத்திலும் ராஜாவும் கனிமொழியும் தப்பிக்க முடியாது. கருணாநிதி என்ன தந்திரம் பண்ணுவார் என்று பார்க்கலாம். திமுககாரன் கனவு காண்கிறான் காங்கிரஸ் ஒழிந்து விடும் என்று. காங்கிரஸ் ஒரு சூரியன். அதை யாரும் தொட முடியாது. தொடுபவன் எரிந்து போவான். ஜாக்கிரதை.
காங்கிரசுடன் இனி, எந்த காலத்திலும் கூட்டணி இல்லை' என்று...........இப்படி தான் இப்போது சொல்வேன்....நாளை ....இத்தாலியின் தாயே வருக.....இந்தியாவின் மருமகளே வருக....நேரு குடும்பத்துக்கு வந்த நேர்,மையே வருக ...நல்லாட்சி தருக என்று ..சொன்னாலும் சொல்வேன்....இப்படி சொல்வதெல்லாம் திரூ . மு க அரசியலில் தவிர்க்கமுடியாதது.
எல்லாம வரும் election காக தான். காங்கிரஸ் கு இங்க ஒன்னும் கிடையாது . மாணவர் போராட்டம் வேற . கருணாநிதி எல்லாம் யோசிச்சு ஒட்டு வேணுமா காங்கிரஸ் விட்டு விலகனும் நு அரசியல் உல் நோக்கதூட செஞ்சது . அடிச்சா கொள்ளை கொஞ்சமா ??? அப்போ டிவி ல paperla எல்லாம் அப்பாவி மக்கள் சாகிறார்கள் என்று சொன்னபோதெல்லாம் செய்யாத தை இப்போ செய்ய வேண்டிய அவசியம் என்ன ...நாடகம் இன்னும் நடக்குது....ரசிப்போம் சனகிய தனத்த
என்ன தலைவா, இலங்கையில் எல்லாரும் செத்துட்டாங்க. தமிழர்கள் என்று இனி யாரும் இல்லைன்னு சொன்னாங்களா? இல்லை நம்ம குடும்பத்துக்கு வேண்டியது சம்பாதிச்சாச்சு. இனி அடுத்த வண்டி பார்ப்போமுன்னு முடிவு பண்ணிட்டீங்களா? அங்கே எல்லாரும் சாகும்போது மனை துணையோடு பீச்சுல காத்து வாங்குநீங்க, மானாட மயிலாட குஷாலா இருந்தீங்க, இப்ப என்ன திடீருன்னு?
சிலர் இங்கு மாணவர்கள் கல்லூரிகளை கட் அடித்துவிட்டு செய்யும் போராட்டங்களை பெருமையாக பேசுகின்றனர். இந்தியாவே ஐ நா சபையில் தீர்மானம் கொண்டு வந்தாலும் சீனாவும் ரஷ்யாவும் தங்களுடைய வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி அந்த தீர்மானத்தை ஒன்றுமில்லாமல் செய்து விடும்.அப்பொழுது என்ன செய்ய போகிறார்கள் இந்த ஈழ ஆதரவாளர்கள்

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.