புதுடில்லி ; தி.மு.க., விடுத்த மிரட்டலுக்கு காங்கிரஸ் கட்சி பணிந்தது. இலங்கை தமிழர் பிரச்னை தொடர்பாக பார்லிமென்டில் தீர்மானம் கொண்டு வர உள்ளது.
இலங்கை தமிழர் பிரச்னையில் பார்லிமென்டில் தீர்மானம் கொண்டு வர வேண்டும், இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என தி.மு.க., மத்திய அரசுக்கு மிரட்டல் விடுத்தது. இது குறித்து நேற்று கருணாநிதியை மத்திய அமைச்சர்கள் சிதம்பரம், அந்தோணி, குலாம் நபி ஆசாத் ஆகியோர் சந்தித்து பேசினர்.
இந்நிலையி்ல், இன்று மத்திய அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றுக்கொள்வதாக கருணாநிதி அறிவித்தார். வரும் 21ம் தேதிக்குள் பார்லிமென்டில் தீர்மானம் கொண்டு வந்தால், தி.மு.க.,வின் முடிவை மறுபரிசீலனை செய்வோம் என கூறியிருந்தார்.
இந்நிலையில், தி.மு.க.,வின் மிரட்டலுக்கு காங்கிரஸ் கட்சி பணிந்தது. இலங்கை விவகாரம் தொடர்பாக ஒரு தீர்மானத்தை பார்லிமென்டில் நிறைவேற்ற முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. தி.மு.க.,வின் ஆதரவை வாபஸ் பெறுவதாக அறிவித்த பின்னர், அவசரமாக கூடிய காங்கிரஸ் காரிய கமீட்டி கூட்டத்தில், தீர்மானம் கொண்டு வர முடிவு செய்யப்பட்டது. எந்த மாதிரியான தீர்மானம் என அறிவிக்கப்படவில்லை.
லோக்சபா ஒத்திவைப்பு:முன்னதாக, இலங்கை தமிழர் விவகாரத்தில், தி.மு.க., அ.தி.மு.க., உறுப்பினர்கள் கோஷங்கள் எழுப்பியதால் லோக்சபா ஒத்திவைக்கப்பட்டது.. அ.தி,மு.க., தி.மு.க., இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் அவையின் மையத்திற்கு சென்று, ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக அறிவித்து சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும். ஐ.நா., மனித உரிமை சபையில் இந்தியா நடந்து கொண்ட விதம் கண்டனத்திற்க்குரியது எனக்கூறி கோஷங்கள் எழுப்பினர். சபாநாயகர் சமாதானப்படுத்தும் முயற்சி தோல்வியடைந்ததால், அவையை நண்பகல் வரை ஒத்திவைத்தார்.
நண்பகல் 12 மணிக்கு லோக்சபா கூடியபோது, இலங்கை தமிழர் பிரசனை தொடர்பாக விவாதம் நடத்தப்பட்டது. அ.தி.மு.க., உறுப்பினர் தம்பிதுரை பேசுகையில், இலங்கையில் சுதந்திரமான சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும்,அமெரிக்க தீர்மானத்தை வலுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.
தி.மு.க., எம்.பி., டி.கே.எஸ்.இளங்கோவன் கூறுகையில், இலங்கை அரசு கொடுத்த உறுதிமொழிகளை நிறைவேற்றவில்லை. மாணவர்களின் போராட்டத்தினால் தமிழகம் பற்றி எரிகிறது. இலங்கையில் நடந்த போர்க்குற்றம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும். அமெரிக்க கொண்டு வரும் தீர்மானத்தில் திருத்தம் செய்ய வேண்டும். திருத்தம் கொண்டு வருவதில் அரசின் நிலை என்ன என்பதை விளக்க வேண்டும். ஐ.நா., கவுன்சிலில் இந்திய அரசின் நிலை ஏமாற்றம் அளிப்பதாக கூறினார்.
இதன் பின்னர் லோக்சபாவில் அமளி ஏற்பட்டது. இதனையடுத்து லோக்சபா மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. 2 மணிக்கு அவை கூடியதும், சுமூகமாக அவை அலுவல்கள் நடைபெற்றன.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
அட போங்கப்பா .. இந்த டிராமா எல்லாம் பாத்து பாத்து அலுத்து போச்சு . தேர்தல் வர நேரத்துல வாபஸ் ,இவங்க மேல விசாரண நடத்தி நடவடிக்கை எடுக்கற நேரத்துல வாபஸ் ,தமிழர்களா ஏமாற்றுவதற்கு வாபஸ். ஏம்பா இப்போ என்னலாம் தகிடு திட்டம் செய்யறேங்க . பதிவில இருக்கும் பொது என்னைய செஞ்சேங்க. மாவீரன் பிரபகரன சுட்டு கொன்னங்கலே .. அப்போ என்னைய செஞ்சேங்க. லட்ச கணக்குல தமிழ் சகோதரர்கள் சகோதரிகள் கொத்து கொத்தா செத்து மடிஞ்சங்கலே அப்போ என்னைய செஞ்சேங்க. அடுத்த வருடம் தேர்தல் வருது . .. அதுக்காக இப்போதுலே இருந்தே டிராமாவா . சீ போயா இந்த பொழப்பு பொழைக்க .. வேற எதையாவது செஞ்சு பொழைக்கலாம்
திமுக மிரட்டவும் இல்லை...காங்கிரஸ் பணியவும் இல்லை... இரண்டு கட்சிகளும் போடும் நாடகம் இது... அரசியல் கட்சிகள் என்றாலே நாடகதாரிகள் என்பதை நினைவில் கொள்ளவும்... நல்லவர்கள் கட்சி நடத்த முடியாது... எந்த கொம்பனாலும் ராஜபக்ஷே க்கு தண்டனை வாங்கி தர இயலாது... ஏனென்றால் எனது நாட்டு இறையாண்மையை தான் நான் காத்தேன் என்று ராஜபக்ஷே சொல்கிறான்.. அப்சல்குரு தூக்கில் இடப்பட்டதை , எதிர்த்து பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் எதிர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது.. .. விளைவு ஒட்டு மொத்த இந்தியாவும், அதனை எதிர்த்தது.. அதுபோல, இந்திய பாராளுமன்றத்தில் தீர்மானம் கொண்டுவர பட்டால் , அதனை இலங்கை எதிர்க்கும்.. அது மேலும் ராஜபக்ஷே க்கு இலங்கையில் மேலும் வலு சேர்க்கும்.. ராஜ பக்ஷே இலங்கை தேர்தலில் சிங்களர்களாலே தோற்கடிக்க படவேண்டும் ..அப்போது தான் அவரை வீழ்த்த முடியும்... 60 லட்சம் யூதர்களை கொன்ற ஹிட்லர் கூட கடைசியில் தற்கொலை தான் பண்ணி கொண்டார் .. அதுபோல சிங்களர்கலாலேயே தான் ராஜ பக்சேயை வீழ்த்தமுடியும்.... காலம் இப்படியே இருக்காது... இந்தியா இலங்கை விஷயத்தில் மூக்கை நுழைப்பதை , அல்லது அமெரிக்கா இலங்கை விஷயத்தில் இனபடுகொலை , என்ற வார்த்தையை சேர்ப்பதை இன்று இந்திய அரசு அனுமதித்தால் ,, நாளை இந்தியாவையும் , காஷ்மீர் விஷயத்தில் இதே போல சிக்க வைக்க அமெரிக்கா தயங்காது என்பதையும் இந்திய அரசுகள் [ இன்றைய காங்கிரஸ் அரசானாலும் சரி ..நாளை BJP ஆட்சி வந்தாலும் சரி ] கவனத்தில் கொண்டு தான் ஆகவேண்டும்....
கலைஞர் நாடகமாடுகிறார் என்பதனை தாண்டி , அவர் ஈழ விவகாரத்தை கையில் எடுத்து அமெரிக்க கொண்டு வரும் தீர்மானத்தில் திருத்தம் கொண்டு வரவேண்டும் என்று கூறியவுடன் இன்று இந்திய அரசியலே பற்றி எரிகிறது. எவ்வளவோ தமிழ் இயக்கங்களும், தமிழ் இன உணர்வாளர்களும் இந்த மாற்றங்களை கொண்டுவரவேண்டும் என்று குரல் கொடுத்தபோதும் கண்டுகொள்ளாத இந்திய அரசும் வடமாநில ஊடகங்களும் இன்று இதை பற்றி மட்டுமே பேசுகிறது. இந்திய அரசியல் வல்லுனர்களால் இன்று இதைப்பற்றிய விவாதமே நடத்துகிறார்கள்.தமிழ் உணர்வாளர்கள் வருத்தப்பட்டதை போல் மாணவர்களின் போராட்டங்களை கூட இந்திய ஊடகங்களால் மறைக்கப்படுகிறது.
கலைஞரை நக்கலடியுங்கள் , கிண்டலடியுங்கள். கவலையில்லை..அவரும் இயக்கமும் பார்க்காத எதிர்ப்புகளா, இல்லை அவரை விட அதிகமாக விமர்சிக்க பட்டவரும் இல்லை. அத்த்த்தனையும் சுக்கு நூறாக்கி பீனிக்ஸ் பறவையாய் மீன்டெழுந்திருக்கிறார்.
...
1991ம் ஆண்டு திமுக அரசு இருந்த போது இந்திய அமைதிபடை இலங்கையிலிருந்து சென்னை திரும்பி வந்தபோது முதலமைச்சர் என்ற முறையில் அவர்களை வரவேற்கவேண்டும். அதுதான் மரபு..ஆனால் அதை மறுத்தவருக்கு பல விமர்சனங்கள். யாரும் அன்று அவருக்கு ஆறுதலாக இல்லை. மீண்டும் விடுதலை புலிகளின் ஆதரவாளர்கள் என்று கூறி திமுக அரசு கலைக்கப்படுகிறது ..அன்றும் எந்த தமிழ் உணர்வாளர்களும், இன்று ஈழத்திற்காக போராடுபவர்களும் அவருக்கான தார்மீக ஆதரவை வழங்கவில்லை..பின் ராஜீவ் காந்தி கொல்லப்படுகிறார்..அதற்கும் திமுகதான் விடுதலைபுலிகலோடு சேர்ந்து கொன்றுவிட்டது என்ற கருத்து பரப்பப்படுகிறது..திமுக தனி ஆளாய் நின்று போராடியது. இவ்வளவு உணர்வுகளை காட்டியும் அடுத்து வந்த தேர்தலில் படுமோசமாக தோற்றுப்போனது..இந்த தவறுகளிலிருந்து கலைஞர் பாடம் கற்கிறார்..அதன் விளைவு 2009ல் நடந்த போருக்கு சரியான ஆதரவு திமுகவிடமிருந்து இல்லை..உங்களை போல் எனக்கும் அதே வருத்தங்கள் உண்டு. மீண்டும் அதன் தவறுகளிலிருந்து பாடம் கற்று கொண்டு ஈழ பிரச்சனையில் போராட வருகிறார்..அவருக்கான ஆதரவை நாம்தான் வழங்க வேண்டும்..
காழ்ப்புணர்ச்சியை கொஞ்சம் தூரம் வைத்துவிட்டு நடுநிலையாய் சிந்தித்து பாருங்கள்..ஒத்துகொள்வீர்கள். இன்று மத்திய அமைச்சர்களிடம் கலைஞர் காட்டிய உறுதி மகிழ்விக்கிறது..இனி வரும் காலங்களில் இதே உறுதியுடன் இருப்பார் என்ற நம்பிக்கை இருக்கிறது..
ஈழம் வெல்வோம்..ஒற்றுமையாய் இருப்போம் சகோதர சண்டைகளை தூரவைத்துவிட்டு..
2 ஜி இருக்கிறது. அவர் வாபஸ் வாங்க மாட்டார், நாடகம் ஆடுகிறார் என்றீர்கள்..... வாபசும் வங்கி விட்டார்....... இப்போது காங்கிரஸ் பணிந்து வந்து கோரிக்கையை ஏற்றுள்ளது....... உங்கள் மூஞ்சிகளை எல்லாம் எங்கே கொண்டுபோய் வைத்து கொள்ளப்போகிறீர்கள்?..............ஆளும் கட்சியால் செய்ய முடியாத சாதனையை தமிழகத்தில் எதிர் கட்சி அந்தஸ்து கூட இல்லாத ஒரு கட்சி சாதித்திருக்கிறது.....

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.