தி.மு.க., நாடகம் ஆடுகிறது: முதல்வர் ஜெயலலிதா குற்றச்சாட்டு

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

சென்னை: மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறுவதாக கூறி தி.மு.க., நாடகம் ஆடுவதாக முதல்வர் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில்,2009 ஆம் ஆண்டு இலங்கையில் உச்சக்கட்டப் போர் நடந்தபோது, அப்போது மத்திய அமைச்சரவையிலிருந்து விலகவோ, மத்திய அமைச்சரவைக்கு அளித்து வந்த ஆதரவை கருணாநிதி விலக்கிக் கொள்ளவோ இல்லை.இலங்கைத் தமிழர்களை ஈவுஇறக்கமின்றி இலங்கை அரசின் குண்டு மழையினால் கொன்று குவிக்கப்பட்ட சமயத்தில் மத்திய அமைச்சரவைக்கு அளித்திருந்த ஆதரவை விலக்கிக் கொண்டிருந்தால் இலங்கைத் தமிழர்கள் காப்பாற்றப்பட்டு இருப்பார்கள். இதை செய்யவில்லை. இது தமிழர்களுக்கு எதிரான மிகப் பெரிய துரோகம். மத்திய அரசை எதிர்த்து வலிமையாக குரல் கொடுக்கக்கூடிய சந்தர்ப்பங்களை எல்லாம் நழுவவிட்டு, இலங்கைத் தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ள துயரங்களுக்கு எல்லாம் பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டிய கருணாநிதி, தன்னுடைய பொறுப்பிலிருந்து நழுவும் வகையில், தமிழக மக்களை ஏமாற்றும் வகையில், ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலிருந்து விலகுவது என்ற அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளார்.

இலங்கைக்கு எதிராகவும், இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாகவும், வலுவான தீர்மானம் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டால் தான் இலங்கைக்கு எதிராக வலுவான நடவடிக்கை எடுக்க இயலும்.ஆனால், கருணாநிதி, இந்திய பார்லிமென்டில் வலுவான ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று சொல்லியுள்ளார். இலங்கைக்கு எதிராக இந்திய பார்லிமென்டில் தீர்மானம் நிறைவேற்றுவது என்பது பயனளிக்கக் கூடியது அல்ல. மாறாக, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் குழுக் கூட்டத்தில் தான் தீர்மானங்களுக்கு திருத்தங்கள் கொண்டு வரப்பட வேண்டும். அவ்வாறு செய்யாமல், இந்திய அரசை காலம் கடக்க வைத்து, இலங்கைத் தமிழர்கள் முதுகில் குத்தும் நடவடிக்கையாகவே தி.மு.க. தலைவர் கருணாநிதியின் இந்த அறிவிப்பு அமைந்துள்ளது.

தி.மு.க. தலைவர் கருணாநிதியின் இது போன்ற எண்ணற்ற நாடகங்களை மக்கள் கண்டு அலுத்துப் போயுள்ளனர். மீண்டும் கொண்டு வரப்பட்ட டெசோ அமைப்பிற்கு மக்களிடமும், மாணவர்களிடமும் எந்தவித ஆதரவும் இல்லாத நிலையில் தற்போது அரங்கேற்றியுள்ள நாடகத்தின் மூலம் தன் மீது ஏற்பட்டுள்ள பழியை குறைத்துக் கொள்ளலாம் என்ற தி.மு.க. தலைவர் கருணாநிதியின் எண்ணம் நிறைவேறாது. தி.மு.க. தலைவர் கருணாநிதியின் கபட நாடகங்களுக்கு தமிழக மக்கள் தகுந்த பாடம் புகட்டுவர் என்பது திண்ணம் என்று குறிப்பிட்டுள்ளார்.

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (27)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Noor - Al Jubail ,சவுதி அரேபியா
20-மார்-201301:17:50 IST Report Abuse
Noor கலைஞர் மகா கலைஞன் என்று நிருபித்து விட்டார். இந்த ஆதரவு வாபஸ் எல்லாம் வரகூடிய லோக் சபா தேர்தலுக்கு. மக்களை முட்டாள்கள் என்று நினனைது இந்த கபட நாடகத்தை அரங்கேற்றி உள்ளார். உண்மை நண்பன் நூர் முஹம்மது அல் ஜுபைல்
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
20-மார்-201300:11:58 IST Report Abuse
தமிழ்வேல் கரையான் காலிபன்னிடுச்சி..... புத்துல பாம்பு பூந்துடும்
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
20-மார்-201300:05:43 IST Report Abuse
தமிழ்வேல் போரின்போது பொது மக்களும் மடிவது சகஜம் தானே ......? (மறதி போல தெரியுது..)
Rate this:
Share this comment
Cancel
Mohamed Nawaz - Sakaka,சவுதி அரேபியா
20-மார்-201300:00:27 IST Report Abuse
Mohamed Nawaz ஐயோ எல்லா கருத்துக்களுமே சூப்பர் அம்மையார அறிக்கைவிடுவதில் அடிச்சுக்க முடியாது. எல்லாம் கொடநாட்டில் தங்குவதால் கிடைக்கும் அறிவா? இரண்டு பெரும் ஒன்றுதான்
Rate this:
Share this comment
Cancel
Mullai Periyaar - Thekkadi,இந்தியா
19-மார்-201317:27:15 IST Report Abuse
Mullai Periyaar உண்மை, உண்மையைத் தவிர வேறு ஒன்றும் இல்லை
Rate this:
Share this comment
Cancel
sivagurunathan - chennai,இந்தியா
19-மார்-201317:23:01 IST Report Abuse
sivagurunathan 2009 ஆம் ஆண்டு இலங்கையில் உச்சக்கட்டப் போர் நடந்தபோது, அப்போது மத்திய அமைச்சரவையிலிருந்து விலகவோ, மத்திய அமைச்சரவைக்கு அளித்து வந்த ஆதரவை திரு. கருணாநிதி விலக்கிக் கொள்ளவோ இல்லை. அனால் அபொழுது மாண்புமிகு செல்வி ஜெ.ஜெயலலிதா என்ன செய்து கொண்டு இருந்தார்கள் என்பதை தெரிவிக்கவேண்டும்.
Rate this:
Share this comment
Amalraj Penigilapati - Castries,செயின்ட் லூசியா
19-மார்-201317:33:23 IST Report Abuse
Amalraj Penigilapatiகோட நாட்டில் படுத்து கொண்டிருந்தார். போர் என்றால் மக்கள் இறப்பது சாதாரணம் என்று சொல்லிக்கொண்டிருந்தார்....
Rate this:
Share this comment
Amalraj Penigilapati - Castries,செயின்ட் லூசியா
19-மார்-201317:34:44 IST Report Abuse
Amalraj Penigilapati2009-ல் விலகியிருந்தால் நான் கூட்டு சேர்ந்து இன்னும் சில தொகுதிகளை கைப்பற்றியிருப்பேனே, வட போச்சே...
Rate this:
Share this comment
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
20-மார்-201300:09:14 IST Report Abuse
தமிழ்வேல் அந்தம்மா எதையும் செய்யாம இருப்பதே நல்லது.....
Rate this:
Share this comment
Cancel
umarfarook - dindigul,இந்தியா
19-மார்-201317:22:29 IST Report Abuse
umarfarook மத்திய அரசாங்கத்திலிருந்து திமுக வெளியே வரவேண்டும். காங்கிரசுடன் இருக்கும் கூட்டணியை முறிக்க வேண்டும். அப்படி செய்தால்தான் திமுகவை நம்பமுடியும். இல்லயென்றால் அது நாடகமே" என்று சொன்ன தோழர்கள் எல்லாம் இன்று "டூ லேட்... ஆளே இல்லாத ஊரில் யாருக்கு டீ ஆத்துறீங்க.. எல்லாம் முடிந்த பின் இப்போ வந்து என்ன பயன்" என்று கேக்கும் அனைத்து தோழர்களுக்கும் இந்த சாதாரண குடிமகனின் சிரம் தாழ்த்தி , வணங்கி பனிவன்புடன் கேட்கும் கேள்வி இதுதான்.. அனைத்தும் முடிந்தது என்றால் பின் ஏன் மாணவர்கள் போராடவேண்டும் ...ஏன் சீமானும் வைகோவும் நெடுமாறனும் போராடவேண்டும்..எதற்கு மெழுகுவர்த்தி எறிக்க வேண்டும்..எதற்கு அமெரிக்கா தீர்மாணத்தை எதிர்க்கவேண்டும்..ஏன் அனைத்து தமிழ் உணர்வாளர்களும் ஈழத்தை பற்றி பேசவேண்டும்??? நன்றி சூர்யா
Rate this:
Share this comment
Cancel
Hasan Abdullah - Jeddah,சவுதி அரேபியா
19-மார்-201317:20:08 IST Report Abuse
Hasan Abdullah கூட்டணியில் இருந்தால் ஏன் ஆதரவை வாபஸ் வாங்கவில்லை என்று சொல்லி, அத்தை எப்போது எந்திரிப்பா. திண்ணை எப்போ காலியாகும் என்ற எண்ணத்தில் இருந்தீர்கள், இப்போது வாபஸ் வாங்கி விட்டால், அதை நாடகம் என்பீர்கள். 2009ல் திமுக காங்கிரஸ்யை விட்டு வெளியேறினால் நீங்கள் ஆதரவு கொடுப்பேன் என்று அறிவித்தீர்கள், 2011 தேர்தலுக்கு முன்பு திமுக காங்கிரஸ் தொகுதி பங்கீட்டில் 63 சீட் கேட்டு பிரச்னை வந்தபோது, உங்கள் கட்சி மைத்ரேயன் & தம்பிதுரை பார்லிமென்ட் உள்ளே காங்கிரஸ் உடன் கூட்டணி பற்றி பேசினீர்கள்.அப்போது திமுக, காங்கிரஸ் உடன் உறவு கொண்டால் அது இலங்கை எதிர்ப்பு, நீங்கள் உறவு கொண்டால் அது இலங்கை ஆதரவு இதுதானே உங்கள் வாதம், 2009 ல் கருணாவாவது அவ்வபோது இலங்கை ஆதரவு நிலைப்பாடு என்று சில படம் காட்டினார் (உண்ணாவிரதம், மனிதசங்கிலி, உணவு பொருட்கள் அனுப்புதல் போன்று), ஆனால் நீங்கள் கொடநாட்டில் ஒய்வு எடுத்துக்கொண்டு, போர் என்றால் மக்கள் இறப்பது சகஜம் என்றும், அதற்காக எதற்கு கூப்பாடு போடுகிறீர்கள் என்றும் சொன்னவர். 2009 தில் போர் நடந்து கொண்டிருக்கும் போதே, 2009 தேர்தலில் மக்கள் திமுகவிற்கு தான் வாக்களித்தார்கள். 2008 ஜூன் முதல் 2009 ஜூன் வரை இலங்கை போர் நடந்தது. அனால் மக்கள் திமுக காங்கிரஸ் கூட்டணிக்கு தான் வாக்களித்தார்கள், ஏனென்றால் மக்களுக்கு உங்கள் இலங்கை நிலைப்பாடு என்ன என்பது தெளிவாக தெரியும். 2009 ல் ஆதரவை வாபஸ் வாங்க வேண்டுமென்றால் என்ன அர்த்தம், அதாவது தேர்தல் பாதி நடந்து கொண்டிருக்கும் பொது வாபஸ் வாங்குவதா? சொல்லுவதற்கும் ஒரு லாஜிக் வேண்டாமா? அப்படி தேர்தலில் ஜெயித்த பின் ஆதரவு வாபஸ் என்றாலும் பிரயோஜனம் என்ன? தமிழகத்தில் திமுக ஆட்சி கவிழும், அதிமுக காங்கிரஸ் கூட்டணியுடன் மத்திய அரசு தொடரும். ஆனால் திமுக கூட்டணியில் இருப்பதால் தான், இதனை காலம் எதோ அவர்களால் முடிந்த அழுத்தத்தை கொடுத்தார்கள், அது பலித்ததோ இல்லையோ, ஆனால் நீங்கள் அங்கிருந்தால் அது கூட செய்திருக்க மாட்டீர்கள், மாமியார் உடைத்தால் மண் குடம், மருமகள் உடைத்தால் பொன் குடம் என்பது போல் சொல்லுவது நகைப்பிற்குரியது
Rate this:
Share this comment
Cancel
umarfarook - dindigul,இந்தியா
19-மார்-201317:20:08 IST Report Abuse
umarfarook என்ன இருந்தாலும் உங்க அனுபவம் வருமா ? அரசியலில் நீங்க போடாத நாடகமா ?
Rate this:
Share this comment
Cancel
N.KALIRAJ - VANIYAMBADI,இந்தியா
19-மார்-201317:14:12 IST Report Abuse
N.KALIRAJ சரி....நீங்கள் ஆடாத நாடகமா...இவர்கள் ஆடப்போகின்றார்கள்...வருகின்ற பாராளுமன்றத் தேர்தலின் போது அரங்கேறும் உங்கள் நாடகங்கள்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்