புதுடில்லி : நாட்டின் அதிக பாதுகாப்பு நிறைந்த திகார் சிறையில்,கடந்த 3 ஆண்டுகளில் 38 முறை கைதிகள் அறையில் இருந்து மொபைல் போன்களும், 6 முறை போதை பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இத்தகவலை லோக்சபாவில் இன்று கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த மத்திய அமைச்சர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். திகார் சிறையில் பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதால் மொபைல் வைத்திருப்பது கூட பெரிதுபடுத்தாமல் இருக்கலாம் எனவும், ஆனால் போதை பொருட்கள் சிறைக்குள் வந்தது எப்படி என விசாரணை நடத்த போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார். 32 மொபைல் ஜாமர் மற்றும் 258 சிசிடிவி கேமிராக்கள் பொருத்தப்பட்டிருந்தும் தடை செய்யப்பட்ட பொருட்கள் சிறைக்குள் வந்தது எப்படி எனவிசாரிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.