சென்னை: இலங்கை பிரச்னை தொடர்பாக மத்திய அரசுக்கு அளித்து வந்த ஆதரவை தி.மு.க., வாபஸ் பெற்றது எதிர்பாராதது என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் கூறியுள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது: நேற்று தி.மு.க., தலைவர் கருணாநிதியை மத்திய அமைச்சர்கள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இனி மேல் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து காங்கிரஸ் மேலிடம் பரிசீலனை செய்யும் என்ற நம்பிக்கை உள்ளது. தீர்மானம் குறித்து அனைத்து கட்சிகளுடன் ஆலோசனை நடத்த வேண்டியுள்ளது என கூறினார்.
இதனிடையே, தி.மு.க., ஆதரவை வாபஸ் பெற்றது குறித்து ஆலோசனை செய்து வருகின்றனர். இது குறித்து முன்னரே கருத்து கூற முடியாது என்றும், தி.மு.க., தனது முடிவை மறு பரிசீலனை செய்யும் என நம்புவதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் ரேணுகா சவுத்ரி கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.