தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே நடுக்கடலில் கைதான, சிங்கள மீனவர்கள் ஐந்து பேர், ராமநாதபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, ஸ்ரீவைகுண்டம் சிறையில் அடைக்கப்பட்டனர். இலங்கை, புத்தளம் மாவட்டம், கல்பிட்டியாவைச் சேர்ந்த, வர்ணகுல சூரியா, ஜூடு சாமன், ரெஸ்டிஸ் அனுரா, இமானுவேல் வீரசேகரன், சுனில் ஆகிய ஐந்து சிங்கள மீனவர்கள், மார்ச் 17 மாலை, தூத்துக்குடி அருகே, இந்திய கடலில் அத்துமீறி நுழைந்து, மீன்பிடித்தபோது, கடலோர காவல்படையினரால் கைது செய்யப்பட்டனர். அவர்களின், படகும் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணைக்குப் பின், அவர்கள் போலீஸ் பாதுகாப்புடன், நேற்று, ராமதாதபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை, 15 நாள் சிறையிலடைக்க, நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி, பாதுகாப்பு காரணங்களுக்காக, அவர்கள், இன்று, தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.