Advertisement
மிக்சி வழங்க லஞ்சம்: துணை தாசில்தார் கைது
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Bookmark and Share  
ஆல்பம்
பதிவு செய்த நாள் : மார்ச் 19,2013,19:43 IST
மாற்றம் செய்த நாள் : மார்ச் 19,2013,19:44 IST

பரமக்குடி: பரமக்குடி அருகே, இலவச மிக்சி, கிரைண்டர் வழங்க லஞ்சம் வாங்கிய துணை தாசில்தார் கைது செய்யப்பட்டார். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை அடுத்த கவிதைக்குடி பஞ்சாயத்து தலைவராக இருப்பவர் மாரியம்மாள். இவரது கணவர் கணபதி. கடந்த 11ம் தேதி அப்பகுதியில் 25 பேருக்கு அரசின் இலவச மிக்சி கிரைண்டர் வழங்கப்பட்டது. மற்றவர்களுக்கும் மிக்சி வழங்கக்கோரி, கணபதி, சிறப்பு திட்ட அமலாக்கப்பிரிவு துணை தாசில்தார் சம்பத்திடம் கோரிக்கை விடுத்தார். மிக்சி ஒன்றிற்கு ரூ. 200 வீதம் சம்பத் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. இதையடுத்து கணபதி, ராமநாதபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். அவர்களின் ஆலோசனையின்படி, இன்று கணபதி லஞ்சம் கொடுக்க முற்பட்ட போது மறைந்திருந்த போலீசார், சம்பத்தை கையும் களவுமாக பிடித்தனர்.




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (1)
s murugan - madurai,இந்தியா
20-மார்-201313:09:01 IST Report Abuse
s murugan நாட்டுக்கு ஒரு பிரச்னைன்னா இவருக்கு ஒரு பிரச்னை. திருந்தவே மாட்டாங்களா?.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.