புதுடில்லி: பெண்களுக்கு எதிரான பாலியல் பலாத்கார தடுப்பு மசோதா திருத்தங்களுடன் லோக்சபாவில் இன்று நிறைவேறியது.
டில்லியில் மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரத்திற்குட்படுத்தப்பட்டு உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பதை அடுத்து, இது போன்ற குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு, கடுமையான தண்டனை வழங்கவும், பெண்களுக்கு போதிய பாதுகாப்பு அளிக்கவும், குற்றவியல் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள மத்திய அரசு முடிவு செய்தது.
இதன்படி திருத்தப்பட்ட மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. இதையடுத்து மசோதா இன்று லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டது. மசோதாவை மத்திய உள்துறை அமைச்சர் சுசில் குமார் ஷிண்டே தாக்கல் செய்தார். இந்த மசோதாவுக்கு பிரதான எதிர்க்கட்சியான பா.ஜ., ஆதரவு தெரிவித்தது. இம்மசோதாவின் படி, பாலியல் பலாத்கார குற்றங்களுக்கு குறைந்த பட்சம் 20 ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரை சிறை தண்டனை விதிக்க முடியும். இதே போல், பெண்கள் மீதான ஆசிட் வீச்சு தாக்குதலில் ஈடுபடுவோருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கவும் மசோதா வழிவகை செய்கிறது. இணக்கத்துடன் பாலியல் உறவு கொள்ளும் வயது 18 ஆக தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மசோதா மீதான ஓட்டெடுப்பு நடந்த போது, குழந்தைகள் கடத்தல் மற்றும் ஆசிட் வீச்சுக்கு ஆயுள் தண்டனை விதிக்கும் சட்ட திருத்தத்திற்கு லோக்சபா ஒப்புதல் அளிக்க மறுத்து விட்டது. இந்த முக்கிய மசோதா தாக்கலின் போது காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் அவையில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.