இடைப்பாடி: மதுரை, தி.மு.க., நிர்வாகி பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் தேடப்பட்டவர்களில் ஒருவரான முக்கிய குற்றவாளி சங்ககிரி கோர்ட்டில் சரணடைந்தார். தி.மு.க., தென்மண்டல அமைப்பு செயலாளரும், மத்திய அமைச்சருமான அழகிரியின் தீவிர ஆதரவாளரான பொட்டு சுரேஷ், கடந்த ஜனவரி மாதம் வெட்டி கொலை செய்யப்பட்டார். இக்கொலையின் முக்கிய குற்றவாளியும், மதுரை, தி.மு.க., பிரமுகர் அட்டாக் பாண்டியின் அக்கா மகனுமான விஜயபாண்டி, ஆரோக்கியபிரபு ஆகியோர், பிப்ரவரி, 13ம் தேதி, சேலம் குற்றவியல் கோர்ட்டில் சரணடைந்தனர். அவர்கள், சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், பொட்டு சுரேஷ் கொலையில் தொடர்புடைய மேலும் ஒரு குற்றவாளியான, மதுரை வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்த, முனியசாமி மகன் வில்வதுரை, 27, இன்று, சேலம் மாவட்டம், சங்ககிரி குற்றவியல் நீதிமன்ற, நீதிபதி பரமேஸ்வரி முன்னிலையில் சரணடைந்தார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.