சென்னை: "மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறுகிறோம் என, தி.மு.க., தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளது, கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் செய்வதை நினைவுபடுத்துகிறது' என, முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: இலங்கையில், உச்சகட்ட போர் நடந்து கொண்டிருந்தபோது, மத்திய அரசுக்கு அளித்த ஆதரவை, வாபஸ் பெறாத கருணாநிதி, உண்ணாவிரத நாடகம் நடத்தி, "போர் முடிந்து விட்டது' என, அறிவித்தார். இதை நம்பி, பதுங்கு குழிகளில் இருந்த ஈழத் தமிழர்கள், வெளியே வந்தனர். இதைப் பயன்படுத்தி, குண்டு மழை பொழிந்து, அப்பாவி மக்களை, இலங்கை அரசு கொன்று குவித்தது. "இலங்கைக்கு எதிராக, ஐ.நா., சபையில் மத்திய அரசு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். போர்க் குற்றங்களை தண்டிக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும்' என, தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றினோம். இதற்கு, மத்திய அரசை, தி.மு.க., வலியுறுத்தவில்லை.
கடந்த, ஐ.நா., மனித உரிமை ஆணைய கூட்டத்தில், இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை, மத்திய அரசு வலுவிழக்கச் செய்தபோது, தி.மு.க., எதிர்க்கவில்லை. ஈழத் தமிழர்களுக்கு, துன்பங்கள் ஏற்பட்ட போதெல்லாம் விட்டுவிட்டு, துயரங்களுக்கு பொறுப்பேற்க வேண்டிய தருணத்தில், நழுவும் வகையில், மத்திய அரசுக்கு அளிக்கும் ஆதரவை, வாபஸ் பெறுவதாக, கருணாநிதி அறிவித்துள்ளார். இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை, ஐ.நா., சபையில் நிறைவேற்றினால் தான், இலங்கைக்கு எதிராக, வலுவான நடவடிக்கை எடுக்க முடியும். ஆனால், பார்லிமென்டில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என, கருணாநிதி வலியுறுத்துகிறார். இதன்மூலம், மத்திய அரசை காலம் கடக்க வைத்து, ஈழத் தமிழர்களின் முதுகில் குத்தும் செயலையே, கருணாநிதி செய்துள்ளார்.அவரது நாடகங்களால், மக்கள் அலுத்துப் போயுள்ளனர். "டெசோ' அமைப்புக்கு மக்களிடம் ஆதரவு கிடைக்காத நிலையில், தன் மீதுள்ள, நீங்கா பழியை குறைத்துக் கொள்ள நினைக்கும் கருணாநிதியின் எண்ணம், நிறைவேறாது. இதற்கு, மக்கள் தகுந்த பாடம் புகட்டுவர். இவ்வாறு, ஜெயலலிதா கூறியுள்ளார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
The countrie's companies who are vote for Srilanka and absent or not willing to support tamils to be taken care and such countrie's companies not to be entertain in tamilnadu / India. We no need to do any business with them. Gulf countries vote for Srilanka lived on Indian food before they discover oil, it has to be remembered to them.
Hello medam...... தமிழர்களை எல்லாம் முட்டாள்கள் என்று நினைத்து விட்டீர்களா? 1. ஈழத் தமிழர்களுக்கு, துன்பங்கள் ஏற்பட்ட போதெல்லாம் விட்டுவிட்டு, துயரங்களுக்கு பொறுப்பேற்க வேண்டிய தருணத்தில், நழுவும் வகையில், மத்திய அரசுக்கு அளிக்கும் ஆதரவை, வாபஸ் பெறுவதாக, கருணாநிதி அறிவித்துள்ளார்.என்னுடைய கேள்வி அப்பொழுது ஈழத் தமிழர்களுக்கு நீங்கள் என்ன செய்தீர்கள்? 2.இலங்கையில், உச்சகட்ட போர் நடந்து கொண்டிருந்தபோது, மத்திய அரசுக்கு அளித்த ஆதரவை, வாபஸ் பெறாத கருணாநிதி, உண்ணாவிரத நாடகம் நடத்தி, "போர் முடிந்து விட்டது' என, அறிவித்தார். இதை நம்பி, பதுங்கு குழிகளில் இருந்த ஈழத் தமிழர்கள், வெளியே வந்தனர். இதைப் பயன்படுத்தி, குண்டு மழை பொழிந்து, அப்பாவி மக்களை, இலங்கை அரசு கொன்று குவித்தது.
கருணாநிதி "போர் முடிந்து விட்டது' என சொன்னதை வைத்துதான் பதுங்கு குழிகளில் இருந்த ஈழத் தமிழர்கள், வெளியே வந்தார்களா? அப்பொழுது கருணாநிதிக்கு போர் முடிந்து விட்டது' என்று சொன்னது யார்? அன்றைய அமைச்சர் பிரணாப் முகர்ஜி, அப்பொழுது நீங்கள் சொன்னது என்ன? செய்ததுதான் என்ன? நீங்களும் ஒன்னும் புடுங்கலையே? இப்பொழுது மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை திமுக வாபஸ் பெற்றவுடன், மத்திய அரசு என்ன செய்தது? ஒன்றும் இல்லை... அன்று மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை திமுக வாபஸ் பெற்றாலும் இதே நீலைமை தான்.... மற்றொரு கட்சி ஆதரவு அலீக்கும், ஈழத் தமிழர்கள் இரபிற்கு நீங்கள் இருவருமே காரணம், முழுக்க முழுக்க காங்கிரஸ் தான் காரணம். கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் செய்வதை நினைவுபடுத்துகிறது' இந்த வசனம் உங்களுக்கும் தான்.
சும்மா மஞ்ச துண்டை குறை கூறுபவர்கள் ஒன்றை கருத்தில் கொள்ள வேண்டும் . இந்திய அரசில் வெளிஉறவு கொள்கை படி, ஒரு அண்டை நாட்டில் நடுக்கும் போர்ராய் நிறத்து என்று சொல்ல அதிகாரம் இந்திய அரசுக்கு இல்லை. இந்த மஞ்ச துண்டு சொன்ன உடனே போரை நிறுத்து என்று இந்திய அரசே சொல்ல முடியாது. இதை எல்லாம் தெரியாத்வரா அவர். அம்மா , அய்யா இன்ன பிற அமைப்புகள் சும்மா கதை சொல்லிக்கொண்டு தமிழன் காதில் பூ சுற்றும் வேலையை மிக நல்லா பண்ணுறாங்க
ஆனால், அதே சமயம், அண்டை போர்குற்றம் புரிந்தவர்களை தண்டிக்க வேண்டும் என்று உலகின் மற்றொரு கோடியில் இருக்கும் இன்னொரு நாடு ஐ.நா வில் கொண்டு வரும் தீர்மானத்தை ஆதரிக்கக் கூடாது என்று சொல்லும் வெளியுறவுக் கொள்கை வைத்திருப்பது யார் தவறு ?? முக்திபாகினிகளுக்கு ஆதரவு கொடுத்து பங்களாதேஷை உருவாக்கியவர்கள யார் ?? இன்று கச்சத் தீவை, அதிகாரமில்லாமல் அண்டை நாட்டுக்கு தாரை வார்த்து விட்டு, நமது இந்தியப் பிரஜைகளின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் தராத இந்திய நாட்டு வெளியுறவுக் கொள்கை வெறும் குப்பை தான்.. நாட்டின் நாலாபுறமும் நடக்கும் அவலத்துக்கு பதிலடி தர வேண்டாம், குறைந்தபட்சம் பதில் தரவும் துப்பில்லாத வெளியுறவுத் துறையின் குளறுபடிகளை "கொள்கை" என்று நம்பிக் கொண்டிருப்பது முதல்தர முட்டாள்தனம் தான்.....
அம்மா சொல்லுவது அப்படியே உண்மை கண் கெட்ட பிறகு சூர்ய நமஸ்காரம் கண் கேட்டது காரணம் வயசு ஆகிவிட்டது அன்று அனைத்து தமிழக கட்சிகளும் டில்லி பதவிகளை விட்டிருந்தால் ஒரு கோர கொள்ளைகளை தடுத்திருக்கலாம் இனி காங்கிரசு தமிழகத்தில் இருக்காது"பெரியார் சொன்ன " "கண்ணணீர் துளிகளும்" காணமல் போவர்கள் ezha மக்களின் கண்ணிர கரயாது ராஜன் ஜி பிள்ளை -USA...
வெக்கத்திலும் வெக்கம் என்ன தெரியுமா ??? போரில் பல்லாயிரக்கணக்கான மக்கள் இறந்த துயரம் ஒருபுறம் இருக்க, போர் முடிந்த பின் எஞ்சி இருந்த மக்களை அந்த காலத்தில் ரோமானியர்களும் கிரேக்கர்களும் அடிமைகள் போல (SERF) நடத்தியதை விட கேவலமாக முள் வேலிக்குள் அடைத்து எதிரி சிங்கள வீரர்கள் துப்பாக்கியுடன் காவல் இருந்ததுதான். மறைவார குளிக்க, இயற்கை உபாதைகளை கழிக்க, வயிறார பசியாற முடியாமல் வாடிய தமிழ் மக்களை சந்திக்கிறேன் என்று நாடகமாடி ஒரு பாராளுமன்ற குழுவை அனுப்பி எதிரி ராஜபக்சேயுடன் சிரித்து பேசி மகிழ்ந்து பரிசுகள் பல பெற வைத்தார். ஈழத்தில் தேனாறும் பாலாரும் ஓடுகிறது என்றார். அதனால் தமிழகத்தில் இருந்து தமிழ் ஆர்வலர்கள் கொடுத்த உதவிப்பொருள்களை ஈழத்தமிழர்களுக்கு சென்றடையாமல் தடுத்தார். இவ்வளவு கேவலமான ஜென்மம் இன்று மத்திய அரசுக்கு ஆதரவு வாபஸ் என்ற நாடகத்தை அரங்கேற்றி கொண்டிருக்கிறது. நல்லா ரிவிட் அடிப்போம்ல, பாரு பாரு.....நல்லா பாரு.
தொட வந்துட்டாங்க அம்மா ....போர் என்றால் மக்கள் சாவதான் செய்வார்கள் நு சொன்ன சுயநலவாதி. எப்போடா D M K கவிலும் நு காத்திருக்கிர ஜன்மம் . ஓகே D M K செய்யவில்லை நீங்க என்ன செஞ்சிங்க ஈழ தமிழர்களுக்கு . சும்மா சட்ட சபைல தீர்மானம் போட்டோம் அப்புறமா சும்மா தான் இருந்தோம். அதை நிறைவேற்ற ஒன்னும் செய்யலன்னு இப்ப சொல்லலாம். ஆனா மக்கள் நல்லா புரிஞ்சு வச்சு இருக்காங்க உங்கள பத்தி . ரெண்டு கட்சியும் சும்மா வெத்து vaattu . வைகோ மட்டும் தான் இந்த விஷயத்துல உண்மையா இருக்கார் .

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.