மதுரை: புதிதாக பணிக்கு வரும் வி.ஏ.ஓ.,க்கள், உயர்பதவியை அடைய வேண்டும் என்ற கனவில், வேறு பணிகளுக்கு தாவுவதால், வருவாய்த்துறை பணிகளில் "மந்த' நிலை ஏற்படுகிறது.
தமிழகத்தில், வருவாய்த்துறையே, அனைத்து துறைகளுக்கும் பிரதானம். கிராம அளவில், சட்டம்-ஒழுங்கு, நிலவரி வருவாயில் வி.ஏ.ஓ., க்களின் பங்கு முக்கியமானது. இத்துறையில், ஏராளமான பணியிடங்கள் காலியாக உள்ளன. புதியதாக நியமிக்கப்படும் வி.ஏ.ஓ.,க்களும், உயர் பதவிகளுக்கு செல்ல ஆர்வம் காட்டுவதால், வருவாய்த்துறை பணிகளில் மந்த நிலை உள்ளது. சமீபத்தில், புதிய வி.ஏ.ஓ.,க் கள் நியமனம் செய்யப்பட்டனர். இவர்களில் பலர் பட்டம், முதுகலை பட்டம் பெற்றவர்களாக உள்ளனர். வி.ஏ.ஓ., ஆனபின், தங்கள் கல்வித் தகுதியால், உயர்பதவிக்காக, "குரூப் 1' தேர்வு வரை பல போட்டித் தேர்வுகளிலும் பங்கேற்கின்றனர். வி.ஏ.ஓ., நியமனம், பயிற்சி பெறுவோர், உயர்பதவிக்கான தேர்வில் வென்று, உடனே வி.ஏ.ஓ., பணியை ராஜினாமா செய்கின்றனர். இதனால், வி.ஏ.ஓ., பணியிடம் மீண்டும் காலியாகி விடுகிறது. மாநில அளவில் ஏராளமான பணியிடங்கள், இன்னும் காலியாகவே உள்ளன. உதாரணமாக, மதுரை கோட்டத்தில் தெற்கு, வடக்கு, மேலூர், வாடிப்பட்டி தாலுகாக்கள் உள்ளன; இவற்றில் 316 வி.ஏ.ஓ., பணியிடங்கள் உண்டு. இதில் 60க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாகவே உள்ளன. சில நாட்களுக்கு முன் 25 வி.ஏ.ஓ.,க்கள் தேர்வு செய்யப்பட்டு, பயிற்சிக்குப் பின், 3 பேர்தான் பொறுப்பேற்று உள்ளனர். இதனால் மீண்டும் காலியிடங்கள் உருவாகின்றன.
இன்றைய சூழலில், அரசுப் பணி என்பதால், "ஒயிட் காலர் ஜாப்' என்ற நினைப்பில் வருகின்றனர். ஆனால், கிராமச் சூழலில் சாதாரண மக்களிடையே பணியாற்ற வேண்டி இருப்பதால், தாக்குப்பிடிக்க முடியாமல் கழன்று கொள்கின்றனர். மேலும், கீழ்நிலை பணியில் இருந்த பலர் பதவி உயர்வு பெற்று சென்றது, ஓய்வு போன்ற காரணங்களாலும் காலியிடங்கள் உருவாகியுள்ளன. இந்த இடங்களில் மீண்டும் ஆட்களை நியமிக்க தாமதம், கூடுதல் செலவு ஆகிறது. இதை தவிர்க்க, வி.ஏ.ஓ., பணிக்கு வருவோர், குறிப்பிட்ட காலம் அதில் பணியாற்ற வேண்டும்; உடனே செல்ல விரும்பினால், வி.ஏ.ஓ., பணிக்காலத்தில் பெற்ற பலனை, அரசுக்கு திருப்பித் தரவேண்டும் என, நிபந்தனை விதிக்கலாம். இதனால் அவர்களின் நியமனம், பயிற்சிக்காக ஏற்பட்ட நிதியிழப்பை சரிசெய்ய முடியும்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
tnpsc vao தேர்வில் முன்பிருந்த தேர்வு முறையில் sc st bc உள்ளிட்ட வகுப்பினருக்கு வயது வரம்பில் காட்டப்பட்டு வந்த சலுகை 2012 ஆம் ஆண்டில் விலக்கப்பட்டு குறிப்பிட்ட வயது வரை மட்டுமே தேர்ந்தெடுத்தனர்.இதனால் 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் தேர்வு எழுத முடியவில்லை. எனவே இள வயதுள்ளவர்கள் தங்கள் கல்வித் தகுதியைக் கொண்டு முதலில் ஏதாவது ஒரு துறையில் அரசுப் பதவியில் சேர்ந்து கொண்டு பின்னர் உயர் பதவிகளுக்கான தேர்வுகளில் வெற்றி பெறுவதன் மூலம் தாங்கள் முதலில் பெற்ற vao உள்ளிட்ட கீழ்நிலைப் பதவிகளை ராஜினாமா செய்து விடுகின்றனர். எனவே இதனடிப்படையில் பார்க்கும்போது 40 வயதுக்கு மேலானவர்களை இவ்வாறான கீழ்நிலைப் பதவிகளில் பணியமர்த்தும்போது அவர்களின் வயது காரணமாக மேல் மட்டத்திலான உயர் பதவிகளுக்கான தேர்வு எழுத முடியாதென்பதால் அவர்கள் தொடர்ந்து அப்பதவிகளில் நிலைத்துப் பணியாற்றிடுவர் என்பது உறுதி. மேலும் இள வயதுக்காரர்களைப் பணியில் அமர்த்திய பின் சில மாதங்களிலேயே அவர்கள் பணியிலிருந்து விலகி விடுவதால் மீண்டும் காலியிடங்களை நிரப்பத் தேர்வு வைக்க வேண்டியதாகிறது. இதனைத் தவிர்க்க 40 வயதுக்கு மேலானவர்களைத் தேர்வு செய்வதன் மூலம் அவர்களும் அரசுப் பணி கிடைத்த சந்தோசத்தில் உண்மையாக உழைப்பார்கள்.வயது காரணமாக வேறு உயர் பதவிக்கான தேர்வு எழுதி முதலில் கிடைத்த கீழ்நிலைப் பணியினை ராஜினாமா செய்து விலகுவதும் பெருவாரியான அளவில் கட்டுப்படும்.
ஜெய்சங்கர் , ஹரிதாஸ் : என்ன பிதற்றுகீர்கள். எம் ஏ , எம் எஸ் சி படித்தவர்கள் வேலை இல்லாமல் இருக்கும் போது 10ம் 12ம் படித்தவர்கள் வேலைக்கு எடுப்பதா? இது எந்த ஊர் நியாயம். அதிக வேலை பளு, குறைந்த ஊதியம், கடை நிலை பணி, பதவி உயர்வு தாமதம் போன்ற காரணங்களால் வி ஏ ஒ பணியில் சேர்ந்தவர்கள் உயர் பதவிகளுக்கு செல்கின்றனர். தகுதி மற்றும் திறமை இருக்கிறது உயர் பதவிகளுக்கு செல்கிறார்கள். உங்களுக்கு ஏன் வயித்தெரிச்சல். திறமையற்றவர்கள் செல்வதில்லை. உங்கள் தகுதி என்ன 10ஆ 12ஆ.???
Why they are escaping, Govt should realise? New VAOs are deployed in large village with huge work load and with out any training. Experienced VAOs take a small village where there is minimum work load. New VAOs should be given training at least for one month about the nature of Job. Also as the village is very big, so much qurrey and verification is to be done. If complete sincere enquiry is to carried out, the money given as salary is not sufficient to put petrol for their vehicle. Nowadays people ask for forged certificate for getting the Govt benefits. If it is signed with out verification The VAO will be in a fix. Also for large villages the maniel(Assistant) given to VAO is not performong their duties sincerely. Govt should find the ways to retain the VAO by addressing their concerns.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.