Punjab to have renttoown housing plan for poor soon | 15 ஆண்டு வாடகை கொடுத்தால் 16வது ஆண்டில் வீடு சொந்தம்: பஞ்சாப் அரசு கலக்கல் திட்டம் | Dinamalar
Advertisement
15 ஆண்டு வாடகை கொடுத்தால் 16வது ஆண்டில் வீடு சொந்தம்: பஞ்சாப் அரசு கலக்கல் திட்டம்
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

சண்டிகார்: தொழிலாளர்கள் மற்றும் குடிசைகளில் வசிப்பவர்களுக்காக, புதிய வீட்டு வசதி திட்டத்தை, பஞ்சாப் மாநில அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி, ஒரு குடும்பத்தினர், தொடர்ந்து, 15 ஆண்டுகள், ஒரே வீட்டில் வசித்தால், அந்த வீடு, அவர்களுக்கு சொந்தமாக்கப்படும்.

பஞ்சாபில், கட்டுமான தொழில், சாலைத் தொழில் உள்ளிட்ட, பல்வேறு தொழில்களில் ஈடுபடும் தொழிலாளர்கள், தங்களின் சொந்த ஊர்களை விட்டு, வேறு ஊர்களில் இடம் பெயர்ந்து வசிக்கின்றனர். அதேபோல், சில நகரங்களில், கணிசமான மக்கள், குடிசைப் பகுதிகளிலும் வசிக்கின்றனர். இவர்களின் நலனுக்காக, பிரகாஷ் சிங் பாதல் தலைமையிலான, சிரோன்மணி அகாலி தள அரசு, புதிதாக வீட்டு வசதி திட்டத்தை அறிவித்துள்ளது.

இதுகுறித்து, பஞ்சாப் மாநில அரசு வட்டாரங்கள் கூறியதாவது: இந்த திட்டம், முதலில், மொகாலி நகரில் செயல்படுத்தப்படவுள்ளது. இதன்படி, முதல் கட்டமாக, 15 ஆயிரம் வீடுகள் கட்டப்படும். ஒவ்வொரு வீடும், இரண்டு படுக்கை அறைகள் உடையதாக இருக்கும். இந்த வீடுகளுக்கான வாடகை, மாதத்துக்கு, 1,800லிருந்து, 2,000 வரை நிர்ணயிக்கப்படும். ஒரே குடும்பத்தினர், ஒரே வீட்டில், தொடர்ந்து, 15 ஆண்டுகள் வசித்தால், 16வது ஆண்டிலிருந்து, அவர்களுக்கு அந்த வீடு சொந்தமாக்கப்படும். அதற்கு பின், வாடகை கொடுக்க வேண்டிய அவசியமில்லை. இடையிலேயே, வீட்டை காலி செய்தால், வேறு ஒருவருக்கு அந்த வீடு ஓதுக்கப்படும். இந்த நகரைத் தொடர்ந்து, மற்ற நகரங்களிலும், படிப்படியாக இந்த திட்டம் செயல்படுத்தப்படும். மொகாலி நகரில், ஏராளமான தொழிலாளர்கள், தங்கள் சொந்த ஊர்களை விட்டு, இடம் பெயர்ந்து வசிப்பதால், முதலில் இந்த நகரத்தில், இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இவ்வாறு, பஞ்சாப் அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

Advertisement
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (5)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Thanjaithamilan - QATAR,இந்தியா
20-மார்-201311:42:24 IST Report Abuse
Thanjaithamilan அருமையான யோசனை....ஏழை, தடுத்தார மக்களுக்கு அருமையானை திட்டம். இதிலும் அரசியல் புகுந்து, சிக்கல் ஏற்படுத்தாமலும், குண்டர்களின் தலையீடு இல்லாமல் பார்த்து கொண்டால், இந்தியா முழுக்க இந்த திட்டத்தை அமுல் படுத்தலாம். குறைந்த வாடகை, பேங்க் வாசலில் வீட்டு லோனுக்காக தவம் கிடைக்காமல் குறைந்த வாடகையில் குடியிருந்து வீட்டை சொந்த வீடாகும் இந்த திட்டம் நிச்சயம் சொந்த கனவு இல்லமே .
Rate this:
5 members
1 members
27 members
Share this comment
thamizh Madayan - வெத்தலப் பாக்கம் (Bethel Park),யூ.எஸ்.ஏ
23-மார்-201301:26:46 IST Report Abuse
thamizh Madayanபதினஞ்சு வருஷம் வாடக கொடுத்தால் வீடு உங்களுக்கே சொந்தம்னு வெச்சுக்கோங்க. அதுக்கப்புறம் வீடு வாடகைக்குத் தர வீட்டுக் காரர்கள் எல்லாம் மடையர்களா? உங்களுக்கு பாங்க வாசல்ல தவம் கெடக்க அலுப்பு. ஆனா இன்னொருத்தன் தவமிருந்து கட்டின வீட்ட தட்டிக்கிட்டு போக ஆசை. இப்படி ஒரு சட்டம் வந்தால், சாதுவா அடிதடி வம்பு தும்புக்கு போகாதவங்க எல்லாம் வீட்ட பூட்டி வெச்சுடுவாங்க. புதுசா வீடு கட்ட மாட்டாங்க. உங்களுக்கு வாடகைக்கு வீடு அரசியல்வாதிகள், குண்டர்கள் ரவுடிகள் தான் தைரியமா தருவாங்க. உங்கள் பேராசை உங்களுக்கு பேரு நஷ்டமாகும்....
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
Cancel
KUNDRATTHU BAALAA - MARUTHAI,இந்தியா
20-மார்-201311:15:44 IST Report Abuse
 KUNDRATTHU BAALAA என்ன கிறுக்கு தனம்...
Rate this:
30 members
0 members
8 members
Share this comment
Cancel
நாஞ்சில் சுலைமான் - THUCKALAY,இந்தியா
20-மார்-201308:53:21 IST Report Abuse
நாஞ்சில் சுலைமான் இவுங்களை விட வீட்டு உடமஸ்தர்கள் ரொம்ப கெட்டிக்காரர்கள்...அவர்கள் தான் இரண்டு ஆண்டுகளிலேயே கழட்டி விட்டு விடுகிறார்களே..
Rate this:
6 members
0 members
4 members
Share this comment
thamizh Madayan - வெத்தலப் பாக்கம் (Bethel Park),யூ.எஸ்.ஏ
22-மார்-201317:27:50 IST Report Abuse
thamizh Madayanசுலைமான் நீங்க ஒரு வீடு கட்டி வாடகைக்கு விடுங்க. பதினஞ்சு வருஷம் வாடகை கொடுத்தவுங்களுக்கு வீட்டை எழுதி கொடுத்துடுங்க. இது எதோ அரசு திட்டம் போல இருக்கு. தனியார் வீடுகளுக்கு இப்படி ஒரு சட்டம் வந்தால் என்ன ஆகும். எல்லாரும் வீடு வாடகைக்கு விடுவதை நிறுத்தி விடுவார்கள். வீட்டு வாடகை தாறுமாறா ஏறும். அடிதடிக்கு பயப்படாத அரசியல் செல்வாக்கு உள்ளவர்கள் மட்டும்தான் தைரியமாக வீடு வாடகைக்கு கொடுப்பாங்க. ரெண்ட் கண்ட்ரோல் ஆக்ட் இருந்த வரை Bombay பெங்களூர் ஊர்களில் வாடகைக்கு இருப்பவர்கள் பட்ட கஷ்டம் சொல்ல முடியாது. 1940-60 களில் வாடகைக்கு இடம் பிடித்த சிலர் தவிர மற்ற அத்தனை பெரும் கஷ்டப் பட்டாக்கள்....
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்