புதுடில்லி: மத்திய அமைச்சரவையிலிருந்து விலகுவதாக நேற்று தி.மு.க., அறிவித்தது.
இதனையடுத்து தி.மு.க., அமைச்சர்கள் தங்களது ராஜினாமா கடிதங்களை பிரதமர் மன்மோகன் சிங்கிடம் கொடுப்பார்கள் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தி.மு.க., அமைச்சர்கள் இரு குழுக்களாக பிரிந்து சென்று ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளனர்.முதலில் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்த காந்தி செல்வன், ஜெகத்ரட்சகன், பழநி மாணிக்கம் ஆகியோர் முதலில் ராஜினாமா கடிதங்களை கொடுத்தனர். அவர்களுடன் அழகிரியும் நெப்போலியனும் உடன் செல்லாமல், பின்னர் தனியாக மதியம் 1.30 மணிக்கு மேல் சென்று பிரதமரிடம் ராஜினாமா கடிதங்களை கொடுத்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
சிதம்பரம் பேட்டி:
திடீர் மாற்றங்கள்:
அரசு பெரும்பான்மையுடன் உள்ளது:
இக்கட்டான நிலை:
இலங்கைக்கு எதிராக ஐ.நா., மனித உரிமை கவுன்சிலில் அமெரிக்கா கொண்டு வர இருக்கும் தீர்மானத்தில், இந்தியா கடுமையான திருத்தங்களைக் கொண்டு வர வேண்டும் என்று வற்புறுத்தி, ஐ.மு.கூட்டணியிலிருந்து தி.மு.க., விலகி உள்ளது. இது தொடர்பாக பார்லிமென்டிலும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று தி.மு.க., கூறியுள்ளது. மேலும் இலங்கையில் நடந்துள்ள இனப்படுகொலை குறித்து சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்று தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தி.மு.க.வும் இந்திய தீர்மானத்தில் இனப்படுகொலை என்ற வார்த்தையைச் சேர்க்க வேண்டும் என்று கூறியுள்ளது.
இது குறித்து காங்கிரஸ் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது. தி.முக., விலகலால் மத்திய அரசுக்கு உடனடியாக ஆபத்து ஏதும் இல்லையென்றாலும், விரைவில் தேர்தல் வர இருப்பதால், இலங்கை பிரச்னையில் மத்திய அரசு அலட்சியம் காட்டுவதாக மக்கள் நினைத்து விடக் கூடாதே என்று காங்கிரஸ் கருதுகிறது. அதே நேரத்தில், இலங்கைக்கு எதிராக கடுமையான வாசகம் கொண்ட தீர்மானத்தை பார்லிமென்டில் நிறைவேற்றினால், எதிர் காலத்தில் காஷ்மீர், மணிப்பூர் போன்ற விவகராங்களில இதர நாடுகள் இத்தகைய தீர்மானம் இயற்ற வழி வகுத்துவிடுமோ, ஒரு மோசமான முன்னுதாரணம் ஆகிவிடுமோ என்ற அச்சமும் மத்திய அரசுக்கு உள்ளது. இருப்பினும் இன்று இது தொடர்பாக ஒரு முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெயலலிதாவிற்கு பயந்து:
தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு பயந்து தான் திமுக தலைவர் கருணாநிதி, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்து விலகினார் என ஜனதா கட்சி தலைவர் சுப்ரமணிய சாமி தெரிவித்துள்ளார். தி.மு.க., விலகல் குறித்து ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணிய சாமி கூறுகையில், தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு பயந்தும், இலங்கை தமிழர் விவகாரத்தில் ஜெயலலிதாவின் நடவடிக்கைகளுக்கு பின்னால் இருக்க விரும்பாமலும் தான் கருணாநிதி மத்திய அரசின் கூட்டணியில் இருந்து விலகி உள்ளார்; இந்த அறிவிப்பு எனக்கு எவ்வித ஆச்சரியத்தையும் தரவில்லை; ஏனெனில் இவை அனைத்தும் திமுக தலைவர் கருணாநிதி நடத்தும் நாடகங்கள்; உண்மையிலேயே அவர்கள் கூட்டணியில் இருந்து விலகுவதாகவும், பதவிகளை ராஜினாமா செய்வதாகவும் இருந்தால் முதலில் ஜனாதிபதிக்கு தான் அது குறித்து கடிதம் அனுப்பி இருக்க வேண்டும்; நாளையோ அல்லது இன்னும் ஒரு மாதத்திற்கு பிறகோ காங்கிரஸ் கூட்டணியில் மீண்டும் இணைவதாக கருணாநிதி அறிவிப்பார்; இவை அனைத்து அர்த்தமற்ற பேச்சுக்கள். இவ்வாறு சுப்ரமணியசாமி தெரிவித்துள்ளார்.
மைனாரிட்டி அரசு ஆகவில்லை:
மத்திய அமைச்சரவையில் இருந்து திமுக விலகியதால் மத்திய அரசு மைனாரிட்டி அரசு ஆகிவிடவில்லை என பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது : மதசார்பற்ற கட்சிகள் மத்தியில் ஆட்சி அமைப்பதை நாங்கள் விரும்பவில்லை; பகுஜன் சமாஜ் கட்சி எப்போதும் ஆதரவை விலக்கிக் கொள்ளாது; எங்களுக்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் வெளியில் இருந்து நாங்கள் தரும் ஆதரவு என்றும் தொடரும்; திமுக விலகியதால் மத்திய அரசு ஒன்றும் பெரும்பான்மையை இழந்து மைனாரிட்டி அரசு ஆகிவிடவில்லை; அதனால் லோக்சபா தேர்தல் குறித்த நெருக்கடியும் மத்திய அரசுக்கு இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
ஊசலாடும் காங்., கூட்டணி அரசு :
ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் 2வது பெரிய கட்சியான திமுக தனது ஆதரவை விலக்கிக் கொண்டதை அடுத்து ஐக்கிய முற்போக்கு கூட்டணி தற்போது பார்லிமென்ட்டில் பெரும்பான்மையை இழந்து மைனாரிட்டி கட்சி ஆகி உள்ளது. இதனால் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி, முலாயம் சிங் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி உள்ளிட்ட பிராந்திய கட்சிகளின் கருணையை பெற்று மீண்டும் பெரும்பான்மையை நிரூபிக்க காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு போராடி வருகிறது. கூட்டணியில் இருந்து விலகுவதாக திமுக அறிவித்த சில நிமிடங்களிலேயே காங்கிரஸ் முக்கிய கூட்டத்தை கூட்டியது குறிப்பிடத்தக்கது.
தேர்தலுக்கு பா.ஜ., தயார் :
திமுக விலகியதை அடுத்து காங்கிரஸ் கூட்டணி மைரியாட்டி ஆகி விட்டதால் லோக்சபா தேர்தல் மிக விரைவிலேயே வரும் எனவும், தேர்தலை சந்திக்க பா.ஜ., எப்போதும் தயாராக இருப்பதாகவும் பா.ஜ., துணை தலைவர் முக்தர் அப்பாஸ் நஹ்வி தெரிவித்துள்ளார். நாட்டின் மீது அக்கறை அல்லாத காங்கிரஸ் ஆட்சிக்கு இதுபோன்ற பிரச்னைகள் வருவது எதிர்பார்த்த ஒன்று தான் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் கவுண்டவுன் துவங்கி விட்டதாகவும், அது வீழும் காலம் வெகு தொலைவில் இல்லை எனவும் பா.ஜ., தலைவர் ஆனந்த் குமார் தெரிவித்துள்ளார்.
திமுக.,வின் அரசியல் நாடகம் :
கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்திருப்பது திமுக.,வின் அரசியல் நாடகம் என தமிழக முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா தெரிவித்துள்ளார். இதே போன்று திமுக கூட்டணியில் இருந்து விலகாது எனவும், அரசை மிரட்டுவதற்காக திமுக செய்யும் தந்திர செயல் இது எனவும் சமாஜ்வாதி கட்சி தலைவர் ராம்கோபால் யாதவ் தெரிவித்துள்ளார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
இந்த முடிவை இலங்கை போர் உச்ச கட்டத்தில் இருக்கும் போது எடுத்திருந்தால் ஆதரவு இல்லாத அப்போதைய காங்கிரெஸ் மற்றும் சோனியா இலங்கைக்கு உதவி செய்திருக்க மாட்டார்கள் மாவீரன் பிரபாகரன் மற்றும் அவரது குடும்பத்தினர் கொல்லபட்டிருக்க வாய்ப்பு அல்லாது இருந்திருக்கும், அவர் மட்டும் உயிரோடு இருந்திருந்தால் லட்சகணக்கான தமிழர்கள் கொல்லபடிருக்க மாட்டார்கள், முள்வேலி சிறையில் வதை பட்டிருக்கமாட்டர்கள், சீன இலங்கை கடற்கரை பகுதியில் நுழைந்திருக்காது, தமிழக மீனவர்களை தாக்க இலங்கை துணிந்து இருக்காது. ஜெயலலிதா சொல்ல்வது போல் கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்கிறார் கபட கருணாநிதி. கடற்கரையில் உண்ணாவிரதம் என்று ஒரு மணி நேரம் நாடகம் நடத்தி போர் முடிவு என்று பொய்யாக அறிவித்து, உண்ணாவிரதத்தை உண்ணும் விரதமாக கேலி கூத்து ஆக்கியவர் தான் இந்த கருணாநிதி. மருத்துவ உதவிக்காக வந்த பிரபாகரன் தாயை ஆதர்வுஇல்லதவரை இவர் முதல் அமைச்சராக பதவியில் இருந்தும், விமானத்தை விட்டு அவரை இறங்க கூட விடாமல் மத்திய அரசுக்கு காவடி தூக்கி, திருப்பி அனுப்பிய கல்நெஞ்சுகாரர் தான் இந்த கருணாநிதி. முத்துக்குமார் வீர மரணத்தை தற்கொலை என்று ஜோடிக்க பார்த்தவர் தான் இந்த கருணாநிதி.
சிறப்பான நாடகம், காங்கிரஸ் உடன் இனி குட்டனி வைத்துக்கொண்டால் தனில்நாட்டில் மரியாதையை கிடிக்காது எட்ரதானால் எடுக்க பட்ட முடுவு இது . உண்மையா தமிழ் உணர்வு இருத்தல் பதவியை இப்போது தராது இருக்க மாட்டார்கள் ,
கனிமொழி மறுபடியும் கைது செயபட்டால் தமிழ்கள் ஆதரவாக போராடுவகள் என்று போட கணக்கு இது. இதகுய் முன் அவகள் கீழ்தரமான கணக்கு வெற்றிகரமாக இருத்தது உண்மை தான், தமிழ்நாட்டு மகள் இப்போது முழு முட்டாள்கள் எல்லை, உங்கள் தந்திரத்தை தண்டி பெருபளன மக்கள் தெளிந்து விட்டனர். என் நாடு முன்னற்றதின் முதல் படியை வைத்து விட்டது. காங்கிரஸ் சின் இத்தாலி கைதிகளை விடுவித்து விட்டு மற்ற மொழி பேசும் மகளின் கவனத்தை திசை திருப்பும் நாடகம் எப்போது கூடிய விரைவில் மக்களுக்கு புரியும்,
சிதம்பரம், நாராயண சாமி, வாசன் இத்தனை காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அமைச்சர்கள், திமுக அமைச்சர்கள் 5 பேர் இருந்தும் நம்மால் இலங்கை தமிழர்களுக்காக ஓன்று செய்ய முடியவில்லை. இது தமிழனின் ஒற்றுமை மற்றும் தமிழ் இனபற்று எந்த அளவுக்கு இருக்கிறது என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு மலையாளீகள் டெல்கியில் அதிகாரிகள் மட்டத்தில் இருந்துகொண்டே தங்கள் மாநிலத்திற்கு தேவையான காரியங்களை சாதித்துக்கொள்கிரார்கள். நமது மாநிலத்தை சேர்ந்த அமைச்சர்கள் எட்டப்பர்கள். இவர்கலுக்கு தங்கள் பதவியும் சுகமும்தான் முக்கியம், திமுக விலகிவிட்டது, இனி காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எந்த ஒரு அமைச்சரும் தமிழ்நாட்டுக்குள் நுழைய விடக்கூடாது.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.