சென்னை: ஐ.நா., மனித உரிமை கழகத்தில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை இலங்கையின் அறிக்கையை ஏற்றுக்கொண்டு நீர்த்து போக செய்து விட்டதாக தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றுக்கொள்வதாக தி.மு.க., அறிவித்தது. இதனையடுத்து நேற்று இரவு தி.மு.க., எம்.பி.,க்கள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்து அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறுவதற்கான கடிதத்தை கொடுத்தது. இன்று மதியம் தி.மு.க., சார்பில் மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த அமைச்சர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்வதற்கான கடிதத்தை பிரதமரிடம் கொடுத்தனர்.
இந்நிலையில், இன்று கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில், பார்லிமென்டில் தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை குறித்து முதல்வர் ஜெயலலிதா கூறிய கருத்துக்கள் கண்டனத்திற்க்குரியவை. இலங்கை ராணுவம் ஈழத்தமிழர்களுக்கு எதிராக நடத்தியதை போர்க்குற்றம் மற்றும் இனப்படுகொலை என திருத்தம் கொண்டு வர வேண்டும் என தி.மு.க., கோரிக்கை வைத்தது. மேலும் இலங்கையில் நடந்த போர்க்குற்றம் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும். இது தொடர்பாக பார்லிமென்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்தோம்.
நமது கோரிக்கைப்படி, ஐ.நா., மனித உரிமை கழகத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. ஆனால் சர்வதேச விசாரணை என்ற கோரிக்கை தீர்மானத்தில் சேர்க்கப்படவில்லை. தீர்மானத்தில் இலங்கை அரசு விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்துவோம் என கூறப்பட்டுள்ளது.
இது போல், பல வழிகளில் அமெரிக்க தீர்மானம் பெருமளவில் நீர்த்துப்போக செய்யப்பட்டுள்ளது. இதற்கு இந்திய அரசு இலங்கை அரசு ஐ.நா.,மனித உரிம கழகத்தில் தாக்கல் செய்த அறிக்கையை ஏற்றுக்கொண்டு, தீர்மானத்தை நீர்த்து போக செய்துள்ளது. இதற்காக ஆம்னெஸ்டி அமைப்பும், இந்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுபோன்று தி.மு.க.,வின் கோரிக்கையை ஏற்றுக்கொள்ளாத காரணத்தினால் தான், மத்திய அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றுக் கொண்டோம் என கூறியுள்ளார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
ஐய்யா , கருணாநிதி அவர்களே , 2009 ல் நடந்த இனப்படுகொலைகளுக்கு சோனியா காந்தி எந்த அளவுக்கு முக்கிய குற்றவாளியோ அந்த அளவுக்கும் மேலாக நீரும் குற்றவாளி தான், சோனியாவுக்கும் மேலே என்று சொல்வதில் அர்த்தம் உள்ளது. சோனியாவுக்கு தமிழன் மீது பற்றோ , பாசமோ இருக்க காரணம் இல்லை, ஆனால் உங்கள் விஷயம் அப்படியல்ல , சென்ற 20 , 30 ஆண்டுகளாக எப்போதெல்லாம் உங்களுக்கும் , உங்கள் குடும்பத்தினருக்கும் ஆபத்து வருகின்றதோ அப்போதெல்லாம் தமிழ், தமிழன், இலங்கை தமிழன் என்று வசனம் பேசிப்பேசியே மக்களை உசுப்பேற்றி வந்தவர் நீங்கள், உங்கள் அடிப்பொடிகளும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம், தமிழினத்தின் தலைவர், தமிழரின் காவலர், என்றெல்லாம் பில்ட் - அப் கொடுத்து வந்தனர். அதுமட்டுமல்லாமல் 2009 ல் இனப்படுகொலைகள் நடந்த போது நீங்கள் தான் தமிழக முதல்வர், எனவே உங்கள் உறவுகள், தமிழக மக்களின் உறவுகள் அங்கே அநியாயமாக அழித்தொழிக்கப்படும் போது முதல் குரல் கொடுக்கவேண்டிய நிலைமையில் நீங்கள் இருந்தீர்கள், அந்த அய்யோக்கியத்தனங்களை தடுத்து நிறுத்தவேண்டிய மிகப்பெரிய பொறுப்பும் உங்களுக்கு இருந்தது, ஆனால் நீங்கள் என்ன செய்தீர்கள் தமிழகமும், உலகெங்கும் உள்ள தமிழர்களும் கூப்பாடு போட்டும் எதையும் கண்டுகொள்ளாமல் நீங்கள் உண்டு, உங்கள் குடும்ப நலன்கள், குடும்ப வருமானம் என்பதிலேயே குறியாக இருந்தீர்கள். நீங்கள் தமிழக முதல்வராக இருந்தும் இந்த அநியாயங்களை, அக்கிரமங்களை தடுக்க ஒரு சிறு துரும்பை கூட கிள்ளி போடாமல் , இப்போது நீண்ட தூக்கத்தில் இருந்து விழித்தேழுன்தவர் போல தினம் தினம் இலங்கை தமிழர்கள் பற்றி அறிக்கைகள் விடுவது உங்களுக்கே ஓவராக இல்லையா?. கொஞ்சம் கூட உங்களுக்கு இப்படியெல்லாம் பேச கூச்சமாக இல்லையா?. தமிழ் இனத்தையே அழித்தான் அந்த கொடுங்கோலன் என்றால் அதற்க்கு துணை போன இழிபிறவிகள் தானே நீங்களும், சோனியாவும். இப்போது காங்கிரசிடமிருந்து விலகிவந்து விட்டதாலேயே நீர் யோக்கியனாகி விட முடியுமா?. லட்சகனக்கானோரை கொன்று குவித்ததில் உங்களுக்கும் பெரும் பங்கு உள்ளது , உங்கள் பங்களிப்பை அவ்வளவு சுலபமாக மறக்கடிக்க முடியுமா?. மறக்கமுடியாது , மறக்கவும் கூடாது . இனி காலா காலத்துக்கும் இலங்கை இனப்படுகொலையில் நீங்கள் ஆற்றிய பங்கு , தமிழன் என்று ஒருவன் இருக்கும் வரை அழிக்க முடியாதது. எனவே சும்மா இலங்கை தமிழர்களுக்காக பம்மாத்து பண்ணுவதை விட்டொழியுங்கள். இலங்கை தமிழர்கள் பற்றி நீங்கள் பேசப்பேச வயிறு எரிகின்றது.
யோஹா கண்ணன் .நீங்க சொல்வது ஏற்று கொள்ளகூடியதுதான் 2009 கருணாநிதியோட நிலைபாடும்
இப்படி தான் இருந்திச்சி அவரு வடக்க துணை போனார் ..அவன் வட நாட்டுக்காரன் அவன் சரியா இருப்பன் ஆனா நாம் ஒற்றுமையா இருக்கோம இல்லையே நாமே இப்படி இருக்க ..என்ன செய்வது -திராவிடம் பேசும் கருணாநிதி திராவிட னுக்கு என்ன செய்தார் ஒரு மண்ணும் seiyala
தமிழன குழியில போட்டு போதக்கிரத்த்குக்கு துணையா இருந்தார் யார் யாரெல்லாம் திராவிடர்கள் என்றே தெரியாத
மக்கள புதுசு புதுசா கண்டுபுடிச்சது மாதிரி ஏமாற்றி பிழைப்பு நடத்திட்டு அதுக்கு அண்ணா பெரியார் போன்ற நல்ல மனிதர் களின் நற் பெயரை கெடுத்து இப்ப இந்த kalavaanee வேலை செஞ்சிகிட்டு ....நாடகம்...... ஒரு தலைவன் மக்களுக்கும் நாட்டுக்கும் என்ன செய்யணுமோ அத ராஜபக்சே செஞ்சி ட்டான் கருணா மக்களுக்கு என்ன செய்தார் நம்மை வைத்து கோடி கோடியாக சொத்து சேர்த்து அவர் குடுப்பம் சுகபோகங்களை அனுபவித்து கொண்டு இன்னும் பற்றாமல் தமிழனை
முதலீடாக கொண்டு தேர்தலை களமாக்கி கொள்ளையடிக்கத்தான் இந்த வேஷம் .......
ஜினீவாவில் உள்ள தீர்மானம் அமெரிக்காவால் கொண்டு வரப்பட்டது. கருணாநிதியின் கோரிக்கையால் இந்திய அரசு கொண்டு வரவில்லை. டெசொவின் முயற்சியாலும் இல்லை. அமெரிக்க கொண்டு வந்த தீர்மானத்தின் அடிப்படையில் தமது கோரிக்கை இருந்ததாக கருணாநிதி கொக்கரித்து தமக்கு சுய விளம்பரம் தேட முயலுகிறார். இந்தியா எந்த தீர்மானத்தையும் கொண்டு வராதது கருணாநிதிக்கும் டெசொவிற்கும் தலை குனிவே.
அமெரிக்காவே போர் என்று வந்துவிட்டால் குழந்தைகள் பெண்கள் பொதுமக்கள் என்று எந்த வேறுபாடும் இல்லாமல் ஆளில்லா விமானம் மூலம் கொத்து கொத்தாக கொல்லக்கூடிய இரக்கமற்றவர்கள்.இதை நாம் பல நாடுகளில் கண்டுள்ளோம்.எப்படி தமிழின ஆர்வலர்கள் அமெரிக்கா தமிழனுக்கு ஆதரவாக இருக்கும் என்று எண்ணுகின்றனர்.அமெரிக்காவின் அடிவருருடி சுப்ரமணிய சாமி ராஜபக்ஷேவை சந்தித்து பேசி வெளியில் வந்தபிறகே தெரிந்து விட்டுருக்க வேண்டும் இந்த தீர்மானம் நீர்த்துப் போய் விடும் என்று.இலங்கை என்ன அரபு நாடுகளை போல் பெட்ரோலியம் கிடைக்கக் கூடிய நாடா ...அங்கே கொஞ்சம் தேயிலை மற்றும் கொச்சிக்காய் தவிர ஒன்றும் கிடைக்காது.கலைஞர் அவர்கள் இந்த நெருக்கடியை இறுதி போரின் போது செய்திருந்தால் ஏராளமான தமிழர்கள் உயிருடன் மிஞ்சி இருப்பார்கள்.தற்ப்போது எந்த பயனும் இல்லை.யாரை ஏமாற்ற இந்த நாடகங்கள்...
"ஐஸ் முழுவதும் சூம்பி விட்டு வெறும் குச்சி மட்டும் போட்டுட்டு வரீங்க " இத நாங்க நம்பனும்.
தமிழ்நாடு இல் காங்கிரஸ் எதிர்ப்பு அலை அதிகம். ஆனதால் வேறு வழி இன்றி வாபஸ் வாங்குறீங்க. 6 மாதம் உள்ள நிலையில் வெளிய வந்து அரசியல் லாபம் தேட பாக்குறார் கருணாநிதி. மாணவர்களின் போரட்டத்திற்கு அஞ்சி வாபஸ் வாங்குறார். சுருங்க சொல்ல வேண்டும் என்றால் 2009 இல் ஆதரவு அளித்ததும் இப்போது விலகுவதும் அவரின் சுய நலத்திற்கு மட்டுமே.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.