புதுடில்லி: இன்று நடந்த அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் ஒரு மித்த கருத்து எட்டப்பட வில்லை. இலங்கை தமிழர் பிரச்னை தொடர்பாக இன்று சபாநாயகர் மீராகுமார் தலைமையில் அனைத்துக்கட்சிக்கூட்டம் டில்லியில் நடந்தது. இதில் கட்சிகளிடையே ஒரு மித்த கருத்து எட்டப்படவில்லை. இந்தியா ஆதரிக்க ஜக்கிய ஜனதா தள கட்சி மறுப்பு தெரிவித்துள்ளது.
இலங்கையில் நடந்த போர்க்குற்றம் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும். இலங்கையில் நடந்ததை இனப்படுகொலை என அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலியுறுத்தி மத்திய அமைச்சரவையிலிருந்து தி.மு.க., வெளியேறியது. இன்று காலை மத்திய அமைச்சர் சிதம்பரம், இலங்கை விவகாரம் தொடர்பாக திருத்தம் கொண்டு வரப்படும் என்றும் இது தொடர்பாக அமைச்சர் கமல்நாத் அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறியிருந்தார். இந்த விவகாரத்தில் அரசியல் கட்சிகளிடையே இரு வேறு கருத்துக்கள் நிலவின.
இந்நிலையில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் குறித்து பிரதமர் மன்மோகன் சிங், வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித், வெளியுறவுத்துறை செயலாளர் ரஞ்சன் மாத்தாய் ஆகியோர் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின் போது ஐ.நா., மனித உரிமை கவுன்சிலுக்கான இந்திய தூதரும் உடனிருந்தார் அப்போது ஐ.நா., மனித உரிமை மீறல் தொடர்பாக தீர்மானம் கொண்டு வரப்படுவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
இதனிடையே, இலங்கை விவகாரம் தொடர்பாக இன்று இரவு 7.30 மணிக்கு அனைத்து கட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. லோக்சபா சபாநாயகர் மீரா குமார் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் மத்திய அரசின் நிலைப்பாடு குறித்து முடிவெடுக்கப்பட உள்ளது.
இதனிடையே இலங்கை மீதான தீர்மானத்தில் இனப்படுகொலை, போர்க்குற்றம் என்ற வார்த்தை இடம்பெற வேண்டாம் என மத்திய அரசு கருதுவதாக கூறப்படுகிறது. மேலும் தன்னிச்சையான விசாரணை என்பதற்கு பதில் சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்த மத்திய அரசு கருதுவதாக கூறப்படுகிறது.
இலங்கைக்கு எதிராக ஐ.நா., மனித உரிமை கவுன்சிலில் கொண்டு வரப்பட்டுள்ள தீர்மானத்தின் மீது நாளை காலை 10 மணியளவில் ஓட்டெடுப்பு நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது,
முன்னதாக ஐநா மனித உரிமைகள் கவுன்சிலில் இலங்கை அரசுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தில் திருத்தம் கொண்டு வரப்படும் என்றும், இதற்கான இறுதி முடிவை பிரதமர் எடுப்பார் என சல்மான் குர்ஷித் கூறியுள்ளார். இலங்கையில் நடந்த போர்க்குற்றம் தொடர்பாக சுதந்திரமான விசாரணை நடத்த வலியுறுத்துவோம் என சல்மான் குர்ஷித் கூறினார்.இதில் கட்சிகளிடையே ஒரு மித்த கருத்து எட்டப்படவில்லை. இந்தியா ஆதரிக்க ஜக்கிய ஜனதா தள கட்சி மறுப்பு தெரிவித்துள்ளது.
இலங்கை எதிர்ப்பு :
ஐ.நா., தீர்மானத்திற்கு இலங்கை எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தீர்மானம், இலங்கையில் நடக்கும் மறுசீரமைப்பு பணிகளை பாதிக்கும். இலங்கையில் நல்லிணக்கம் ஏற்பட தடங்கலாக இருக்கும். இலங்கையை தனிமைப்படுத்தி களங்கம் விளைவிக்கும் முயற்சி . இலங்கை நிலைமையை பூதாகரமாக மாற்றுவதாக உள்ளது. அமெரிக்காவின் தீர்மானத்தை ஓட்டெடுப்புக்கு விட வேண்டும் என இலங்கை கூறியுள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
இருக்கிறது என்ற நினைப்பில் தான் பங்களாதேசம் உருவாக அயல் நாட்டுக்கு நமது ராணுவம் அனுப்பினோம். இலங்கை அரசுக்கு எதிராக போராட ஈழ போராளிகளுக்கு ஆயுதம் வழங்கி பயிற்சி அளித்தோம். இலங்கைக்கு அமைதிப்படை என்று சொல்லி ராணுவத்தை அனுப்பி களேபரம் செய்தோம். இலங்கை வான் எல்லையை மீறி மிராஜ் விமானத்தில் 1987 இல் உணவு பொட்டலம் போட்டோம். இந்திய அழிவுபடை (அமைதிப்படை) திரும்பி வரும் போது வரதரஜபெருமாளுடன் ஆயிரகணக்கான அடிவருடிகளை அழைத்து வந்து மக்கள் வரியில் அவர்களை பராமரித்தோம் ...
r Until Congress Govt. is supporting Srilankan Govt in UN, it will continue. Not only in Srilanka, in future in Tamil Nadu also. Now our Congress Govt. removed LTTE and allowed China to put their Military Base in Triconamalai, Srilanka to attack Tamil Nadu before Delhi. Now it has become a threat to our National Security
போகணுமுன்னு முடிவு எடுத்தவங்கள என்னதான் சமாதானம் செஞ்சாலும் புதுசு புதுசா குற்றம் காண்பித்து போகவே பார்ப்பார்கள்..அவங்களுக்கு இனிமே ஆதாயம் ஒண்ணுமில்லேன்னு தெரிஞ்சு வேற ஜோடி போட பாக்குறாங்க.ஆனா என்ன தான் ஜோடி மாற்றம் செஞ்சாலும் மேல அடிக்கிற பிணவாடை எல்லோரையும் முகம் சுளிக்க தான் செய்யும். அதா எந்த செண்டு அடிச்சாலும் போக்க முடியாது..

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.