சென்னை,: "தமிழக மீனவர்களும், இந்திய குடிமக்கள் தான்; அவர்கள் மீது, இலங்கை கடற்படை நடத்தும் காட்டுமிராண்டி தாக்குதலை தடுத்து நிறுத்துங்கள்' என, பிரதமரை, முதல்வர் ஜெயலலிதா கேட்டுக் கொண்டுள்ளார்.இதுகுறித்து, பிரமதமர் மன்மோகனுக்கு அவர் எழுதியுள்ள கடிதம்:கடந்த ஒரு மாதத்தில், தமிழக மீனவர்களை நான்காவது முறையாக, இலங்கை கடற்படை தாக்கியுள்ளது. கடைசியாக, 19 மீனவர்களைப் பிடித்துச் சென்று, மார்ச் 14ம் தேதி முதல், கோர்ட் காவலில் வைத்துள்ளனர். இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள், தமிழக கடல் பகுதியில், நேற்று முன்தினம் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.இவர்களை, இரும்பு பைப்கள் கொண்டு தாக்கி விரட்டிய, இலங்கை கடற்படையினர், நேற்று காலை, நடுக் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த நாகப்பட்டினத்தைச் சேர்ந்த, ஆறு மீனவர்களை அரிவாளால் வெட்டியுள்ளனர். இதில், நான்கு மீனவர்கள் தலையில் பலத்த காயம் அடைந்து, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.வரலாற்றின் இடைக் காலங்களில் நடந்த காட்டுமிராண்டி தாக்குதல்கள் போல, இவை நடந்துள்ளன; ஆனால், மத்திய அரசு இலங்கை கடற்படை தாக்குதல்களை வேடிக்கை பார்த்து வருகிறது. தாக்குதல்களுக்கு உள்ளாகும் தமிழக மீனவர்களும், இந்திய குடிமக்கள் தான்.எனவே, இத்தாக்குதல்களை தடுத்து நிறுத்துவதோடு, இலங்கை சிறையில் அடைக்கப்பட்டு உள்ள, தமிழக மீனவர்களை விடுதலை செய்ய, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, ஜெயலலிதா கூறியுள்ளார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
நம்மில் யாரும் நம்முடைய விவசாயிகளை கண்டு கொள்வதில்லை, நம் மீனவரின் துன்பத்தை அறியவில்லை நம் மக்கள் பல லட்சம் பேர் இன்னும் வீடு இல்லாமல் சாலை ஓரத்தில் தங்கள் உயிருக்கு உத்திரவாதம் இல்லாமல் தான் உறங்கிக் கொண்டு இருக்கிறார்கள் ..இதே போல் இன்னும் ஆயிரம் பிரச்சனைகள் ... இலங்கை தமிழர்களுக்கு போராடுவது போல் நம் தமிழக மக்களுக்கு போராடவில்லையே ...
மாணவர்களுக்கு இலங்கை பிரச்சனை என்றால் என்ன என்பது நம் தமிழ் சினிமாவிலும் தொலைகாட்சியிலும் பார்த்துதான் மாணவர்களுக்கு லேசாக தெரிய வந்திருக்கிறது .. இதே போல் நமக்கு உணவு கொடுக்கும் விவசயிகளுக்ககவும் மற்றும் நம் மீனவர்களுக்க்காகவும் எப்போது மாணவர்கள் போராடுவரர்கள் ...இலங்கை தமிழர்களுக்கு குரல் கொடுப்பது போன்ற உணர்வு நம் தமிழ்நாட்டில் வாழும் மக்களுக்காகவும் போராட வேண்டும் என்ற எண்ணம் ஏன் மாணவர்களும் அரசியல்வாதிகளும் வரவில்லை ..? சினிமாவில் அதிகமாக இலங்கை தமிழர்களை பற்றி பேசி அதனின் விளைவு தான் இந்த மாபெரும் போராட்டம் .. நம் தமிழ்நாட்டு ஏழை மக்கள் அடிப்படை வசதி இல்லாமல் தவிக்கின்றனர் அவர்களையும் கொஞ்சம் பார்ப்போமே ..
தமிழக மீனவர்கள் போன்று வேறு எந்த நாட்டை சேர்ந்தவர்களுக்கும் இப்படி வெளிநாட்டு ராணுவத்தால் ஆபத்து நேர்ந்தால், இந்நேரம் அந்த நாட்டு தூதர் விரட்டி அடிக்கப்பட்டு இருப்பார். பொருளாதார தடை உத்தரவு போடபட்டிருக்கும். ஏன் இந்தியாவிலேயே தமிழக மீனவர்கள் போன்று மற்ற மாநில மீனவர்கள் பாதிக்கப்பட்டு இருந்தால், இந்நேரம் விரைவாக தடுக்கப்பட்டு இருக்கும். காங்கிரஸ் அழிய வேண்டிய நேரம் வந்துவிட்டது.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.